எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான பாலிவுட் சூப்பர்ஸ்டார்

கடந்த 2015ம் ஆண்டில் அப்போதைய பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலிடம், வழக்குகளில் இருந்து குர்மீத் ராம் ரஹீமை விடுவிப்பதற்காக ரூ.100 கோடி வரையில் பேரம் பேசியதாக அக்ஷய் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 | 

எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான பாலிவுட் சூப்பர்ஸ்டார்

சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமை, வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுடன் பேரம் பேசியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு காவல்துறை(எஸ்.ஐ.டி.) முன்பாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்‌ஷய் குமார் இன்று ஆஜரானார்.

இன்று காலை விமானம் மூலம் சண்டீகர் வந்தடைந்த அவர், அங்கிருந்து பஞ்சாப் காவல்துறையின் தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்தார். பின்னர் எஸ்.ஐ.டி. குழுவினர் முன்பாக அவர் ஆஜரானார். காலை 10 மணியளவில் தொடங்கிய விசாரணை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் சாமியாரும், நடிகருமான குர்மீத் ராம் ரஹீம். அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதையடுத்து, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டில் அப்போதைய பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், மும்பை வந்திருந்தபோது, அவரிடம், வழக்குகளில் இருந்து குர்மீத் ராம் ரஹீமை விடுவிப்பதற்காக ரூ.100 கோடி வரையில் பேரம் பேசியதாக அக்‌ஷய் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான விசாரணைக்காக எஸ்.ஐ.டி. குழுவினர் முன்பாக அக்‌ஷய் குமார் இன்று ஆஜரானார். முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். சாமியார் குர்மீத் ராம் ரஹீமை தனது வாழ்நாளில் சந்தித்ததே கிடையாது என்றும், இருவரும் ஒரே பகுதியில் வசித்தோம் என்பதுகூட சமூக வலைதளங்கள் மூலமாகவே தனக்கு தெரியவந்தது என்றும் அக்‌ஷய் குமார் கூறியிருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP