ஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்:மத்திய அரசு நிராகரிப்பு

ஷாருக்கானுக்கு மீண்டும் ஓர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது
 | 

ஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்:மத்திய அரசு நிராகரிப்பு

ஏற்கெனவே கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள பாலிவுட் நடிகர்ஷாருக்கானுக்கு மேலும் ஓர்  கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அவசியமற்றது என்று காரணம் கூறி நிராகரித்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ஷாருக்கான். அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குது குறித்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக

நிர்வாகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதிவேண்டி கடிதம் அனுப்பியிருந்து.

ஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்:மத்திய அரசு நிராகரிப்பு

 

அதற்கு பதிலளித்துள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், " ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு மௌலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் நடிகர் ஷாருக்கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மேலும் ஓர் கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்குவது  என்பது அவசியமான  ஒன்றல்ல. எனவே, ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை நிராகரிப்பதாக, ஜாமியா மிலியா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP