வெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், பாரீஸ் நகரில், தலையில் வெள்ளை முடி விக்குடன் சுற்றித்திரியும் படங்களை இணையத்தில் பகிர்ந்து, ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
 | 

வெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட வயதில் சிறியவரான வெளிநாட்டு பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். 

பின், அவருடன் ஹனிமூன் சென்ற அவர், தொடர்ந்து கணவருடன் ஊர் சுற்றும் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே, பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது. 

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தன் கணவர் மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார் பிரியங்கா. 

இந்நிலையில், பாரீஸ் நகரில், தலையில் வெள்ளை முடி விக்குடன் சுற்றித்திரியும் படங்களை இணையத்தில் பகிர்ந்து, ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா. 

ஒரு பக்கம் ஹாப் ஸ்லீவ் உடையுடன், தலையில் வெள்ளை முடி விக் வைத்தபடி காட்சியளிக்கும் அவர், புன்னகை புரிந்த முகத்துடன் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

இது இணையத்தில் வேகமாக பரவி வருவதுடன், அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP