திரைக்கு வருகிறது ராகுல் காந்தி பற்றிய படம்!

இந்திய சினிமாவில் இது பயோபிக் காலம் எனலாம், குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தி பற்றி உருவாகி உள்ள மை நேம் இஸ் ராகா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
 | 

திரைக்கு வருகிறது ராகுல் காந்தி பற்றிய படம்!

ராகுல் காந்தி பற்றி உருவாகி உள்ள 'மை நேம் இஸ் ராகா' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. 

இந்திய சினிமாவில் இது பயோபிக் காலம் எனலாம். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி காலம் குறித்து எழுதப்பட்ட புத்தகம் "தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்" என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. 

இந்நிலையில் அடுத்ததாக ஆகிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியைப் பற்றி திரைப்படம் உருவாகி உள்ளது. 

இந்த படத்திற்கு " மை நேம் இஸ் ராகா" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரூபேஷ் பால் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் ராகுல் காந்தியை புகழ்வதற்காகவோ அல்லது அவரை தூற்றுவதற்காகவோ எடுக்கப்படவில்லை என்றும், பல தாக்குதல்களுக்கு ஆளான ஒருவர் எப்படி தன் வாழ்க்கையில் மீண்டு வருகிறார் என்பதை பற்றிய திரைப்படம் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரயிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP