மன்மோகன் சிங் பற்றிய படத்தின் டிரைலருக்கு தடையில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரைலருக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 | 

மன்மோகன் சிங் பற்றிய படத்தின் டிரைலருக்கு தடையில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

மன்மோகன் சிங் பற்றிய படத்தின் டிரைலருக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு  தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம் கெர், சஞ்சய் பாருவேடத்தில் அக்சய் கண்ணா மற்றும் சோனியா, ராகுல், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கதா பாத்திரங்களிலும் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். வரும் 11ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் மாத இறுதியில் வெளியானது. டிரைலர் வெளியானது முதலே படம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து , படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலருக்கு தடை விதிக்க வேண்டும் என்று பூஜா மகாஜன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், இது போன்ற வழக்குகளை இனி விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP