பிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்!

பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
 | 

பிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்!

பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த், மும்பை  அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

57 வயதான மகேஷ் ஆனந்த், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் மற்றும் வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்பதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. 

ஆனால் அவரது  வீட்டிலிருந்து அதுதொடர்பான கடிதம் எதுவும் கைப்பற்றபடவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, அது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய் தத் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தவர் மகேஷ் ஆனந்த். 

கூலி நம்பர் 1,  குருஷேத்ரா, ஸ்வர்க் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்தாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான "ரங்கீலா ராஜ்" திரைப்படத்தில் மகேஷ் ஆனந்த் கடைசியாக நடித்திருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP