850 விவசாயிகளின் கடன்களை ஏற்கும் அமிதாப் பச்சன்

உத்தரப்பிரதேசத்தில் மிகவும் சிரமப்படும் 850 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களது ரூபாய் 5.5 கோடி கடன் தொகையை தானே செலுத்துவதாக அமிதாப் பச்சன் வங்களிடம் விருப்பம் கூறியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 | 

850 விவசாயிகளின் கடன்களை ஏற்கும் அமிதாப் பச்சன்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த தொடர்புடைய வங்கிகளிடம் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். 

விவசாயக் கடனைகளை தள்ளுபடி செய்ய பல்வேறு மாநிலங்களிலும் கோரிக்கை வைக்கப்படுகிறது.  மழையின்மை, திடீர் வெள்ளப்பெருக்கு, பயிர்ச்சேதம், தகுந்த கொள்முதல் விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கடனில் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகவும் சிரமப்படும் 850 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களது ரூபாய் 5.5 கோடி கடன் தொகையை தானே செலுத்துவதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.  பிற மாநிலங்களிலும் இந்த செயல்பாடு தொடரும் என பச்சன் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

முன்னதாக அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அமிதாப் பச்சன் அடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP