நடு ரோட்டில் நடிகையை கதற விட்ட ரவுடிகள்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், காரில் சென்று கொண்டிருந்த நடிகையிடம் வம்பிழுத்த ரவுடிகள், அவரை கதற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

நடு ரோட்டில் நடிகையை கதற விட்ட ரவுடிகள்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், காரில் சென்று கொண்டிருந்த நடிகையிடம் வம்பிழுத்த ரவுடிகள், அவரை கதற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை, ஷமிதா ஷெட்டி, 39. பிரபல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். டில்லியில் வசிக்கும் இவர், சூட்டிங்கிற்காக மும்பை வந்துள்ளார். 

அப்போது, மும்பை புறநகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த ரவுடிகள், இவரது கார் மீது மோதினர். உடனே காரை நிறுத்திய டிரைவர், காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என பார்க்க, காரிலிருந்து வெளியேறினார்.

அப்போது, காருக்குள் அமர்ந்திருந்த ஷமிதாவை பார்த்த ரவுடிகள், அவரிடம் சில்மிஷம் செய்ய முற்பட்டனர். ஷமிதாவின்  டிரைவர், அவர்களை தடுக்க முயன்ற போது, அவரை தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமிதா, செய்வதறியாது கதறினார். 

சில நிமிட வாக்குவாதத்திற்குப் பின், ரவுடிகள், அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஷமிதா, இது குறித்து, மும்பை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஷமிதாவின் டிரைவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில், மர்ம நபர்களுக்கு எதிராக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP