தண்ணீர் தொட்டியில் பிரசவம் மேற்கொள்ள உள்ள நடிகை

இந்தி நடிகையான கல்கி கோச்லின் மற்றும் அவரது காதலர் கய் ஹெர்ஷ்பெர்க் இருவரும் தங்களுக்கு பிறக்கவிருக்கும் முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 | 

தனது முதல் கணவர் அனுராக் காஷ்யப்புடனான திருமண வாழ்க்கையில் குழந்தை பிறப்புக்கு எதிராக இருந்த கல்கி கோச்லின், தற்போது தனது காதலர் கய் ஹெர்ஷ்பெர்குடன் தனக்கு பிறக்க போகும் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார். இது குறித்து கூறிய கல்கி, வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அனுபவங்கள் தான் கற்று தரும் என்றும், அப்போது அதற்கு எதிராக இருந்தாலும், தற்போது அதற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தண்ணீர் தொட்டியில் பிரசவம் மேற்கொள்ளப் போவதாகவும், அதற்காக இந்த ஆண்டின் இறுதியில் கோவா செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார். பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், இரு பாலினருக்கும் பொருந்தும் வகையில், பொதுவான பெயரை ஏற்கனவே தேர்வு செய்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

தாய்மை உணர்வை வளர்த்துக் கொள்வதற்காக அவர்களின் செல்லப்பிராணியான கைரா என்ற நாயுடன் தான் இவர் அதிக நேரம் செலவிடுகிறார் என்று அவரது காதலர் ஹெர்ஷ்பெர்க் கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP