பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். தற்போது ரிக்கரண்ட் நிமோனியாவால் பாதிப்படைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
 | 

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர். 

2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 

இந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது. 

95 வயதாகும் நடிகர் திலீப் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மும்பை லீலாவகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  இது தொடர்பாக இவரது ட்விட்டரில் பதிவொன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் "நேற்றிரவு மருத்துவமனையில் திலீப் குமார் அனுமதிக்கப் பட்ட செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். ரிக்கரண்ட் நிமோனியாவிற்கு (ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் நிமோனியா பாதிப்புக்குள்ளாவது) சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. பிரார்த்திக்கிறோம். அனைத்தையும் ட்விட்டரில் அப்டேட் செய்கிறோம்" என திலீப் குமார் சார்பாக ஃபைசல் என்பவர் பதிவிட்டிருக்கிறார். 

அவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்பதே தற்போது பாலிவுட் திரையுலகினரின் எண்ணம். 
newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP