மன்மோகன் சிங்காக பாலிவுட் நடிகர் அனுபம் கெர்!

தொடர்ந்து பத்து (2004-2014) வருடங்களாக இந்திய பிரதமராக பதவி வகித்த டாக்டர்.மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என சில நாட்களுக்கு முன்பு அறிப்பு வெளியாகியிருந்தது. பிரதமராக இருந்த மன்மோகனின் ஊடக ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு.
 | 

மன்மோகன் சிங்காக பாலிவுட் நடிகர் அனுபம் கெர்!

மன்மோகன் சிங்காக பாலிவுட் நடிகர் அனுபம் கெர்!

தொடர்ந்து பத்து (2004-2014) வருடங்களாக இந்திய பிரதமராக பதவி வகித்த டாக்டர்.மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என சில நாட்களுக்கு முன்பு அறிப்பு வெளியாகியிருந்தது. பிரதமராக இருந்த மன்மோகனின் ஊடக ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இதே பெயரில் படத்தை இயக்குகிறார் இயக்குநர் விஜய் கத்தே. 

பிரதமர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் என பன்முகத் திறமைக் கொண்டுள்ள மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியாத பல சுவாரஸியமான தகவல்களும் படத்தில் இடம் பெறுகின்றன. இதில் மன்மோகனாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடிக்கிறார். 

பல எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கியுள்ளது. அந்த ஃபோட்டோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. 

வீ ஆர் வெயிட்டிங்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP