யாஷிகா ஆனந்தின் கார் ஏற்படுத்திய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் !

பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக பங்கேற்ற யாஷிகா ஆனந்தின் கார் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதோடு காரை ஓட்டி வந்தவர் குடி போதையில் இருந்தாக சொல்லப்படுகிறது.
 | 

சென்னை  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில்,  தாறுமாறாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் மீது பயங்கர வேகத்தில் மோதியுள்ளது . இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞகரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  பின்னர் காரில் இருந்து இறங்கியா பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் மற்றோரு வாகனத்தில் ஏறி உடனடியாக சம்பவ இடத்திலிருந்து சென்றுள்ளார். 

காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தாக சொல்லப்படுகிறது. அதோடு காரை ஓட்டி வந்தவர் யாஷிகா ஆனந்த் தானா என்பதும்  இன்னும் உறுதியாகவில்லை.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான சொகுசுக் காரை அப்புறப்படுத்தி பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP