பிக் பாஸ் கவின் வெளியேறினாரா? ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #NoKavinMeansNoBiggboss ஹேஷ்டேக்!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினுக்கு ஆதரவாக ட்விட்டரில் #NoKavinMeansNoBiggboss என்ற இந்த ஹேஷ்டேக் ஆனது ட்ரெண்டாகி வருகிறது.
 | 

பிக் பாஸ் கவின் வெளியேறினாரா? ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #NoKavinMeansNoBiggboss ஹேஷ்டேக்!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினுக்கு ஆதரவாக ட்விட்டரில் #NoKavinMeansNoBiggboss என்ற இந்த ஹேஷ்டேக் ஆனது ட்ரெண்டாகி வருகிறது. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் - 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 பேர் இதில் பங்கேற்ற நிலையில், தற்போது 6 பேர் இருக்கின்றனர். கவின் லொஸ்லியா, முகேன், தர்ஷன், சாண்டி மற்றும் ஷெரின். 

இதில் இன்று வெளியான புரோமோவில் பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அதாவது இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் 50 லட்சம் ரூபாயுடன் வெளியேறுவார். ஆனால், தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு இந்த போட்டியில் இருந்து ஒருவர் வெளியேறலாம் என்று கூறுகிறார்.

இதை அடுத்து கவின் தான் வெளியேறும் பொருட்டு எழுந்து நிற்கிறார். இந்த ப்ரோமோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கவின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வாக்களித்து அவரை காப்பாற்றி வருகின்றனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில்  கவினை யாரேனும் டார்கெட் செய்யும்போது அவருக்கு ஆதாரவாக ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கவின் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். கவின் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து ட்விட்டரில் #NoKavinMeansNoBiggboss என்ற இந்த ஹேஷ்டேக் ஆனது ட்ரெண்டாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP