#BiggBoss அறிமுக நாள்: கமலை வெளியே அனுப்பிய பிக்பாஸ்; ஆணுக்கு அர்த்தம் தெரியாத யாஷிக்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது. முதல் பாகத்தில் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டு இந்த பாகத்தில் கலந்து கொள்ள கெத்தாக வந்திருக்கும் 16 பேரும் சர்ச்சைகளுக்காகவே உருவாக்கியவர்கள் போல இருக்கின்றன. குடும்ப சண்டை தொடங்கி சமூக சண்டை வரை அனைத்தும் நடக்க யாரையெல்லாம் அழைக்க வேண்டுமே அவர்களையெல்லாம் கச்சிதமாக அழைத்துள்ளார்கள்.
 | 

#BiggBoss அறிமுக நாள்: கமலை வெளியே அனுப்பிய பிக்பாஸ்; ஆணுக்கு அர்த்தம் தெரியாத யாஷிக்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது. முதல் பாகத்தில் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டு இந்த பாகத்தில் கலந்து கொள்ள கெத்தாக வந்திருக்கும் 16 பேரும் சர்ச்சைகளுக்காகவே உருவாக்கியவர்கள் போல இருக்கின்றன. குடும்ப சண்டை தொடங்கி சமூக சண்டை வரை அனைத்தும் நடக்க யாரையெல்லாம் அழைக்க வேண்டுமே அவர்களையெல்லாம் கச்சிதமாக அழைத்துள்ளார்கள். 

கமல் நான் இப்போ கட்சி தலைவர் என்பவதை ஒவ்வொரு வார்த்தையிலும் நிரூப்பிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார். வந்ததும் "இந்த மேடையை மக்களிடம் பேச பயன்படுத்த போகிறேன். சினிமாவிலும் இதனை செய்யலாம் என்ற கேள்வி எழும். ஆனால் அங்கு அந்த கதாபாத்திரம் மட்டும் தான் பேசும். இங்கு நானாக இருக்கிறேன். இதனை சுயநலம் என்கிறார்கள். இதில் பொது நலம் மட்டும் தான் இருக்கிறது" என்று முதல் நாளே பிக்பாஸ் மேடையை பிரச்சார மேடையாக மாற்றினார். 

பின் பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றி காட்டியவர், உள்ளே சென்றதும் இதுவும் ரிசார்ட் தான். 16 பேரை உள்ளே அடைத்து வெச்சி.. என பாதியில் பேச்சை நிறுத்தி கண்ணடித்தார். (நீங்க நடத்துங்க ஆண்டவரே). 

கன்பஷன் ரூமிற்குள் சென்ற கமல் பிக்பாஸிடம் " எப்படி இருக்கீங்க... யார இப்போதெல்லாம் கேள்வி கேட்கிறீங்க.."என்று பேச தொடங்கினார். ஆனால் பிக்பாஸ் கராராக "நீங்க வெளியே போகலாம் கமல்" என கூறிவிட்டார். (எங்க தல'க்கு எவ்வளவு தில்லு பார்த்தியா). 

#BiggBoss அறிமுக நாள்: கமலை வெளியே அனுப்பிய பிக்பாஸ்; ஆணுக்கு அர்த்தம் தெரியாத யாஷிக்கா

பின் ஒவ்வொரு போட்டியாளரையும் கமல் அறிமுகம்  செய்து வைத்தார். அதில் யாஷிக்கா ஆனந்துக்கு 18 வயது தான் ஆகிறது. முதல் போட்டியாளராக நுழைந்த அவர் தன்னை பற்றி கூறும் போது, "எனக்கு 18 வயசாகுது, ஆனால் 58 வயதான பெண் போல சிந்திப்பேன்" என்றார். வீட்டிற்குள் நுழைந்த உடனே தனியாக சாப்பிட தொடங்கி விட்டார். பின்னர் மற்ற போட்டியாளர்களுடன் பேசி கொண்டு இருந்த போது 'ஆண்'னா என்னனு தெரியாது என்று கூறி பதற வைத்தார். 

ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ஜெய் ஶ்ரீராம்' என்று தொடங்கும் பொன்னம்பலம் இந்த பாகத்தின் கணேஷ் வெங்கட்ராமனா அல்லது கஞ்சாகருப்பா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆண், ஆண் என்று ஆண் பெருமை பேசியவர் 'சக்தி' ஆக கூட வாய்ப்பிருக்கிறது. 

தம்பி ரோல், பிரெண்ட் ரோல்களில் நடித்து வரும் மகத் 3வது போட்டியாளர். எதுக்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க என்று கமல் கேட்டதற்கு, "நான் சிம்பு ஓட நெருங்கிய நண்பன்" என்று மகத் பதிலளித்தார் (எதுக்கு..!). பின்னர் சிம்பு பற்றி இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு வீட்டிற்குள் அவரை அனுப்பி வைத்தார் கமல்.

பிரெண்டு லைவ் மேட்டரு புகழ்  'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு' டேனியல் ஆனி போப் என்கிற டானி அடுத்த போட்டியாளர். கொஞ்சம் ஜாலி டைப்பாக தெரிந்தாலும் ஏதோ பெரிசா செய்ய போகிறார் என்பது மட்டும் உறுதி.

#BiggBoss அறிமுக நாள்: கமலை வெளியே அனுப்பிய பிக்பாஸ்; ஆணுக்கு அர்த்தம் தெரியாத யாஷிக்கா

திரைபிரபலங்களையும் தாண்டி இம்முறை மற்ற துறையில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். அந்த வகையில் உள்ளே நுழைந்திருப்பவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. சண்டைக்கு போக மாட்டேன்.. வந்த சண்டைய விட மாட்டேன் என்பது போல பேசிக்கொண்டு இருந்தார். (இப்படி தான் எங்க காயத்ரி மாஸ்டரும் சொன்னாங்க). 

முதல் பாகத்தில் அழைத்த போது தயங்கிய ஜனனி  இந்த பாகத்தில் தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மக்கள் கிட்ட ரீச் இருக்கு அதனால வந்தேன் என்று நறுக் என்று காரணத்தை சொல்லி முடித்தார். இவர் ஓவியாவாக வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் தற்போதைக்கு பிந்து மாதவி ரோலை பக்காவாக செய்வார் என்று தெரிகிறது.  ஜனனி உள்ளே வந்ததும் அனைவரையும் கட்டியணைத்து அறிமுகமானார். பொன்னம்பலத்தை கட்டிப்பிடிக்க, அவர் மகத்திடம் சென்று என்னப்பா அந்த பொண்ணு நிஜமாவே கட்டிப்பிடிச்சிடுச்சி என்று பேசிக்கொண்டார். (சினேகன் சார்கிட்ட பேசுறீங்களா மிஸ்டர் பொன்னம்பலம்?)

என்னது பிக்பாஸ் வீட்டில் இவரா.. என்று வியப்பை கிளப்பியது அனந்த் வைத்தியநாதன் வருகை. விஜய் டிவியில் அதிக நேரம் இருந்தவர் என்பதால் 'சும்மா' கணக்குகாக அவர் அழைக்கப்பட்டு இருக்கமாட்டார் என்பது நிச்சயம். அதற்கு சான்றாக நேற்று ஒவ்வொரு போட்டியாளர்கள் உள்ளே வரும் போதும் 'இவங்க கூட தான் இருக்க போறோமா' என்ற தொனியில் பார்த்துக்கொண்டு இருந்தார். 

பாடகி ரம்யா அடுத்த போட்டியாளர். இவர் இப்படி தான் என்று கணிக்க முடியாத படி தெளிவாக பேசினார். தொடக்கத்தில் கமலை பாட வைத்தது அத்தனை அழகு. வீட்டிற்குள் சென்றதும் அனைவரிடமும் பொருமையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 

நடிகர் சென்றாயன் இந்த பாகத்தில் பரணியாக இருக்க அத்தனை அம்சங்களும் கொண்டுள்ளார். அவரது நடவடிக்கை நிச்சயம் மற்ற போட்டியாளர்களை தூண்டும். போதக்குறைக்கு நேற்று ஒவ்வொரு போட்டியாளர்களும் உள்ளே வரும் போதும் கிண்டல் செய்து கொண்டு பலத்த குரலில் சிரித்துக்கொண்டு இருந்தார். (பரணிய கட்டம் கட்டுனது கண்ணு முன்ன வருமா இல்லையா..)

#BiggBoss அறிமுக நாள்: கமலை வெளியே அனுப்பிய பிக்பாஸ்; ஆணுக்கு அர்த்தம் தெரியாத யாஷிக்கா

கபாலி ரித்விகா வரும் போது முதல் பாகத்தில் நடந்த சில விஷயங்கள் எனக்கு நடந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பேன் என்று கூறிவிட்டு தான் வந்தார். அப்படியெல்லாம் பிக்பாஸ் விட்டுவிடுவாரா என்ன?

'உங்கள வார வாரம் பாரக்கலாம்.. பிக்பாஸ் வீட்டுக்கு வர அதுவும் ஒரு காரணம் என்று தொடங்கினார் மும்தாஜ். பேச்சில் நமீதாயும், செய்கையில் காயத்திரியும் என கலவையாக இருந்தார். வந்ததும் நான் சமைக்கனும்னா எனக்கு உதவியாளர் வேண்டும் என்று கூறி நம் சந்தேகத்ததை உறுதிப்படுத்தவும் அவர் தவறவில்லை. 

சமீபத்தில் குடும்ப பிரச்னையில் சிக்கிய பாலாஜி இழந்த நற்பெயரை மீண்டும் பெற உள்ளே வருவதாக கூறினார். வீட்டிற்குள் சென்றதும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கஷ்டப்பட்டு சிரிப்பது போலவே ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்து பின் பெட்ரூமில் போய் அமர்ந்துக்கொண்டார். 

நடிகை, தொகுப்பாளினி மமதி சாரி ஆரம்பமே அமோகம் என்பது போல கமலுக்கு போட்டியாக பேசினார். அழகாக தமிழில் பேசினார் என்றாலும் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை. 

முன்னதாக சென்ற பாலாஜியின் மனைவி நித்யா 14வது போட்டியாளவர். பாலாஜி தன் மனைவியுடன் மீண்டும் சேர வேண்டும் என்று முன்னர் கூறியிருக்க. பாலாஜியை இனி கணவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாகி கூறினார் நித்யா. தனது மகளை வெளியே விட்டுச்செல்கிறார். உள்ளே பாலாஜியை பார்த்தும் எந்த பதட்டமும் இல்லாமல் ஹாய் பாலாஜி என்றார். ஆனால் நித்யாவை பார்த்தும் பாலாஜியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கும் வேலையை நிச்சயம் பிக்பாஸ் செய்யமாட்டார். எனவே.. சரி பார்ப்போம்.

ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரின் மகன் ஷாரிக் ஹாசன் வரும்போதே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேண்டுமடா என்று நடனமாடிக்கொண்டே அறிமுகமானார். உள்ளே தற்போதைக்கு சாக்லேட் பாய் இடத்தில் யாருமே இல்லை. மகத்துக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாராம். எனவே ஆரவ் இடத்தை ஷாரிக்கிற்கு பிக்பாஸ் தூசித்தட்டி கொடுப்பார். அதை பக்குவமாக பயன்படுத்துகிறாரா என்பது வரும் நாட்களில் பார்க்கலாம். 

ரோபோ ரோமியோ என  ரசிகர்களை கவர்ந்துவிட்டு பின் காணாமல் போன ஐஸ்வரியா தத்தா பெங்காலியில் கொஞ்சம் தமிழைத் தூவி பேசினார். கொஞ்சம் ஓவியா போன்ற நடவடிக்கைகளும் தென்படுகின்றன அவரிடம். 

கடைசியாக தானே தலைவி ஓவியா கெஸ்டாக உள்ளே சென்றார். ஆனால் போட்டியாளர்களுக்கு அவர் ஒரு வாரம் தான் இருப்பார் என்பது தெரியாது. அவர் உள்ளே சென்றதும் போட்டியாளர்கள் முகத்தில் பெரிய மாற்றத்தை காண முடிந்தது. அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பதற்கு நிகழ்ச்சியை முடித்து வைத்தார் கமல். இன்றைய பிரமோவில் எதிர்பார்த்தது போல சென்றாயனை மையமாக வைத்து காய் நகர்த்துகிறார் பிக்பாஸ். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP