#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

பிரமோக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பாக இருக்க இன்றாவது நமக்கு எண்டர்டெயின்மண்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடுன் டிவி முன் உட்கார்ந்தவர்களை திருப்திப்படுத்தியதா நேற்றைய நிகழ்ச்சி?
 | 

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

பிரமோக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பாக இருக்க இன்றாவது நமக்கு எண்டர்டெயின்மண்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் டிவி முன் உட்கார்ந்தவர்களை திருப்திப்படுத்தியதா நேற்றைய நிகழ்ச்சி? (நிகழ்ச்சி தொடங்கியே 9 நாள் தான் ஆகும் போது நீண்ட நாட்கள் என்று குறிப்பிடுவது பற்றி யோசித்தீர்களானால்.. ஒரு வாராமே பல நாட்கள் போன்ற உணர்வை தந்துவிட்டது என்பது தான் பதில்)

‘வாட்டக் கருவாடு’ பாட்டுக்கு கூட டல்லாக தான் ஆடினார்கள் போட்டியாளர்கள். யாஷிக்கா டான்ஸை எதிர்பார்த்தால் அவர் போர்வையை இழுத்து போட்டு தூங்குகிறார்.

சமையல் செய்து கொண்டு இருந்தவர்களிடம் ஜனனி தன்னிடம் மமதி சொன்ன தகவலை கூறினார். மும்தாஜ்க்கு என்று தனியாக பிரெட் பாக்கெட் இருக்கிறது. அதை அவர் சாப்பிடும் போது மற்றவர்களுக்கு வேண்டுமா என்று கேட்பார். அப்போது மற்றவர்கள் வேண்டாம் என்று தான் கூற வேண்டும் என்பது தான் தகவலை. அவங்க கேக்ற மாதிரி கேப்பாங்க.. நீங்க வேணாம்னு சொல்லனும் என்பது போல இருந்தது. அதற்கு மும்தாஜ் யாரிடமும் கேட்காமல் இருக்கலாமே.

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

இதென்னடா வம்பா போச்சி என்பது போல ரியாக்ட் செய்தார் டேனி. பின் இப்போ தலைவர் யாரோ அவங்க கிட்ட இத சொல்ல வேண்டியது தானே என்றார் ஜனனி. அதானே!

நேற்று முன்தினம் வீட்டின் இளசுகள் எல்லாம் கூடி பேசிக்கொண்டு இருந்த போது பொன்னம்பலம் தவறான வார்த்தையை பயன்படுத்தி பேசி உள்ளார். இதை பற்றி முதலில் யாஷிக்காவிடம் ஐஸ்வர்யா கூறிக்கொண்டு இருந்தார்.

தொடர்ந்து கிட்சனில் பாலாஜி நித்யாவிடம் சேட்டை செய்து கொண்டு இருந்தார். தினமும் இந்த வரியை இணைக்க வேண்டும் போல. பின் நீச்சல் குளத்தின் அருகே இருந்த சுவற்றில் போட்டியாளர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்ததை அனைவரும் ஓடி சென்று பார்த்தனர். நித்தி போட்டோல அழகா இருக்க என்று அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டார் தாடி பாலாஜி. இந்த மனுஷன் வேற.. என்று யோசித்திருப்பார்கள் போட்டியாளர்கள்.

மீண்டும் பொன்னம்பலம் கொச்சையாக பேசியது குறித்து ரம்யா, வைஷ்ணவி, யாஷிக்கா ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர். ரம்யா அதை கேட்டு டென்ஷனாகி, அவர் பொண்ணா இருந்தா இப்படி கேப்பாரா என்று கேட்டார். பின் அவங்க வளர்ந்த விதம் வித்தியாசமா இருக்கும் என்பதால் முதல் தடவை விட்டுவிடுவோம் என்றார் வைஷ்ணவி. மேலும் ஒரு வார்த்தையை வைத்து ஒருவரை பற்றி முடிவு செய்து விட கூடாது என்றும் கூறினார்.

பின் பெண்கள் அனைவரும் இது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பொன்னம்பலம் கூறியதை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்தார் மும்தாஜ். பின் நான் போய் பேசுறேன் என்றார். பொன்னம்பலத்திடம் சென்று பொறுமையாக பேசினார் மும்தாஜ். விளையாட்டாக தான் அப்படி கூறினேன் என்றார் பொன்னம்பலம் (விளையாட்டாக இப்படி எல்லாம் கூறுவார்களா?) . வார்த்தையை தவறாக பயன்படுத்தி விட்டீர்கள் என்று கூறினார் மும்தாஜ். என் பொண்ணா இருந்தா அசிங்கமாக கேட்டுருப்பேன். 3வது மனுஷங்கனு தான் விட்டேன் என்றார் பொன்னு. தன் மகளாக இருந்தால் அசிங்கமாக கேட்பேன் என்று கூறுவது நியாயம் என்று அவரிடம் யார் சொன்னார்களோ?.

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

சரி இந்தியாவில் இருக்கும் குழந்தை வளர்ப்பு முறை இந்த அளவுக்கு தான் இருக்கிறது. ஒன்னும் செய்வதற்கில்லை. பின் அவங்கவங்க லிமிட்டை அவங்களே முடிவு செய்யட்டும் என்று சரியாக பேசினார் மும்தாஜ். அவரை தவிர வேறு யார் இந்த விஷயத்தை பேசி இருந்தாலும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். பொன்னம்பலம் கூறியதில் ' தூங்வே கொஞ்ச நேரம் தான் கிடைக்குது அப்பவும் கத்திக்கிட்டே இருந்தா எப்படி ?" என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த வார லக்சரி டாஸ்கை பற்றி விவரித்தார் புதிய தலைவி நித்யா. கடைசியாக நடந்த வீட்டை நிர்வாகம் செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் அணி வீட்டின் எஜமானர்களாக இருப்பார்கள. பெண்கள் அணி அவர்களின் வேலையாட்கள். இதுதான் டாஸ்க்.
டாஸ்க் விளக்கம் முடிந்ததும்,  எந்த வேலை என்றாலும் நான் செய்வேன். ஆனால் கை, கால் பிடித்து விடுவது போன்றவற்றை என்னிடம் கூறக்கூடாது.. நான் தமிழச்சி, எந்த ஆணையும் நான் தொட மாட்டேன் என்றார் மமதி. சரி தான் என்றாலும் அந்த ‘தமிழச்சி’ கான்செப்ட்!

வேலையாட்காள மாற போகும் பெண்கள் அணிக்காக புடவைகள் வந்தன. அவற்றை பார்த்ததும் புடவையா என்ற அதிர்ந்தார் ரம்யா.
எனக்கு ஜனனியும், யாஷிக்காவும் வேலையாட்களாக வேண்டும் என்றார் மகத். உடனே “டேய் கிளப்புக்கா” போற என்று பாலாஜி கூறியது ரகளை. அவர் அடிக்கடி இதுபோன்ற ஒன்லைன்களால் லைக்ஸ் குவிக்கிறார். ஆனால் நித்யா விஷயத்தில் மட்டும்… சரி அவர் பிரச்னை அவருக்கு. இந்த விஷயத்தில் மட்டும் பிறர் மனை நோக்காதே என்பதை நினைவில் கொள்வோம். அவர்களுக்காக அல்ல நமக்காக.

மகத் தனியாக இருந்த யாஷிக்காவிடம் சென்று ஃபிளர்ட் செய்து கொண்டு இருந்தார். இதான் சாக்கு என்று சென்றாயன் ரித்விகாவை தன்னை போல ஆட வேண்டும், செல்லும் இடத்திற்கெல்லாம் விசிற வேண்டும் என்று கொடுமை செய்து கொண்டு இருந்தார்.

யாஷிக்கா என்ன வேலை செய்தரோ மீண்டும் கையை அறுத்துக்கொண்டார். அந்த பிள்ளையிடம் ஏன்யா கத்திய கொடுக்கிறீங்க..
பின் அவருக்கு வீடே முதல் உதவி செய்தது. பல காயங்களை பார்த்த பொன்னம்பலம் தனக்கு தெரிந்த வைத்தியத்தை கூறினார்.

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

மகத்துக்கும், ஷாரிக்குக்கும் ஊட்டி விட்டுக்கொண்டு இருந்த மும்தாஜிடம் சென்று சென்றாயன் தனக்கும் ஊட்டி விட வேண்டும் என்று கூறினார். மும்தாஜ் ஆரம்பத்தில் கடுப்பானாலும் பின் ஊட்டிவிட்டார். பின் வீட்டில் இருக்கும் எஜமானர்கள் எல்லாம் தன்னிடம் வந்து ஐ லைவ் யூ என்று கூறுவதாக அலுத்துக்கொண்டார் மும்தாஜ். யாரப்பா அது.. பிக்பாஸ் சில காட்சிகளை எடிட் செய்துவிடுவது கண்டிக்கத்தக்கது.

நித்யா பாலாஜிக்கு விரல் பிடித்து கொண்டு இருந்தார்.  மற்றொரு பக்கம் ஷாரிக்கின் கைக்கு ஐஸ்வர்யா மசாஜ் செய்து கொண்டு இருந்தார். ஜோடி  ஜோடியாக டாஸ்க் செய்கிறார்கள்.

எஜமானர்கள் என்பதால் முறை தவறுகிறார்கள் என்று மும்தாஜும் மமதியும் பேசிக்கொண்டனர். பின் இதைப்பற்றி மகத்திடம் கூறினர். அவர் இது வெறும் டாஸ்க் தாங்க என்றார். நான் தமிழ் பெண் சிலவற்றை எல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறினார் மமதி. சரி விடுங்க என்று மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.

வெளியே போனதும் என்னை மறந்துடாத என்று ஐஸ்வர்யாவிடம் கூறிக்கொண்டு இருந்தார் ஷாரிக். வீட்டுல என்ன பிரச்னை ஓடிட்டு இருக்கு இவங்க ரெண்டு பேரும் தனியாக அவர்கள் கதையை ஓட்டிக்கொண்டு இருந்தனர்.

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

கிட்சனில் சமைத்துக்கொண்டு இருந்த மும்தாஜிடம் சென்று கையை கட்டுங்க என்று கூறினார் சென்றாயன். அதெல்லாம் பண்ண முடியாதுங்க ஐயா என்று முறைத்தார் மும்தாஜ். அங்கிருந்து சென்றாயனை அழைத்து சென்றார் ரித்விகா.

வேலையாட்களுக்காக தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் கீழே காய்ந்த இலைகள் போடப்பட்டு இருந்தது. (ஓ.. வேலையாட்களின் இடமல்லவா..) நீச்சல் குளம் அருகே நின்று கொண்டிருந்த மகத்திடம், ‘உங்களுக்கு ஆள் இருக்குல நீங்க நகருங்க டேனி இங்க வாங்க’ என்றார் ரித்விகா விளையாட்டாக. உடனே அதை எப்படி நீங்க சொல்லலாம் வாங்க இங்க, என் மைக்க கழட்டுங்க, என் டி-ஷர்ட்டை கழட்டுங்க என்றார் மகத். பொன்னம்பலம் பார்வையில் இது சிக்கி இருக்காது போல.

மகத் இந்த டாஸ்கை சரியாக செய்வதாகவும் அவரை மற்றவர்கள் காப்பி அடிப்பதாகவும் கூறினார் யாஷிக்கா. பின் வீட்டின் தலைவி ஒவ்வொரு எஜமானர்களுக்கும் ஒரு வேலையாள் என்று பிரித்தார். பாலாஜிக்கு மும்தாஜ் என்று கூறியதும் சட்டென காண்டான பாலாஜி அவங்க கிட்ட எப்படி வேலை சொல்ல முடியும் என்றார். உடனே, இங்க எல்லாரும் போட்டியாளர்கள் தான் என்கிட்ட மட்டும் அட்வாண்டேஜ் எப்படி எடுத்துப்பீங்க என்றார் நித்யா. சரிதனே.. ஆனாலும்.  ஒ.கே பிறர் மனை நோக்கா!

மகத் ஒவ்வொரு முறையும் இது டாஸ்க் என்று அழுத்தமாக கூறிக்கெண்டே இருக்கிறார். எஜமானர்கள், வேலையாட்கள் என்பது தான் டாஸ்க். எஜமானர்கள் அடிமைகள் என்பது இல்லை. எந்த வீட்டில் வேலையாட்கள் டி-ஷர்ட்டை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள், தண்ணீர் குடித்ததும் வாயை டிஷு பேப்பரில் துடைத்துவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்?

அடுத்த டாஸ்கில் இதே போன்று தன்னை செய்ய சொன்னாலும் மகத் செய்வாராம். வீட்டில் இருந்த பலரது மனதில் வேலையாட்கள் குறித்த கருத்து இவ்வாறாக தான் இருந்தது. சமூகமும் இந்த எண்ணத்துடன் தான் இருக்கிறது.

கன்பஷன் அறைக்கு டேனியை அழைத்த பிக்பாஸ், இந்த டாஸ்க்கை யார் சரியாக செய்யவில்லை என்பதை எஜமானர்களுடன் ஆலோசித்து கேமரா முன் கூற வேண்டும் என்றார். அவர்கள் மமதி, மும்தாஜ் பெயரை கூறினர்.பின் வேலையாட்கள் அறையில் எஜமானர்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் பெண்கள் அணியினர். இதுவும் பிக்பாஸின் கட்டளை தான். ஒவ்வொருவரும் தங்கள் எஜமானர்கள் பற்றி பேசினர். பொன்னம்பலம் தன்னை ஊசி போட சொல்கிறார் என்றார் ஜனனி.

#BiggBoss Day 9 : பெத்த பொண்ணுனா அசிங்கமா திட்டலாமா பொன்னம்பலம்?

பின் இரவில் தூங்கும் போது புடவை அணிந்துக்கொண்டு தூங்க மாட்டேன் என்று மும்தாஜ் கூறியது பற்றி பெண்கள் பேசிக்கொண்டு இருந்தனர். லைட்ஸ் ஆப் டாஸ்க் ஹால்ட் என்றார் மும்தாஜ். தூங்கும் போது கூட வேலையாட்கள் வேலையாட்களாக தான் தூங்க வேண்டும். தொடர்ந்து மும்தாஜ் இதனை மறுத்துக்கொண்டே இருந்தார். பின் அவங்க மட்டும் அப்படி தூங்கட்டும் என்று கூறினார் மமதி. அதுக்கு அவங்க தூங்காமலேயே இருக்கட்டும் என்றனர் மற்ற வேலையாட்கள்.

மமதி அங்கிருந்து சென்றதும், நைட் ல அப்படி தூங்குறதுக்கு என்ன,டிரெஸ் பத்தியெல்லாம் கவலப்பட்றாங்க… ஆக்சுலி அவங்க சில டைம் எனக்கே காம்ப்படீஷன் கொடுப்பது போல தான் உடையணிகிறார்கள் என்றார் யாஷிக்கா. இதுபற்றி பிக்பாஸின் கருத்துக்கள் வார இறுதியில் எதிர்பார்கக்ப்படுகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் எப்போதும் பேசும் அந்த ஆண் குரல், “கனிவான எஜமான்களின் கட்டளையை கூட செய்ய மறுக்கும் சில வேலையாட்கள்” என்றது. எப்படி சார்.. கனிவான எஜமானர்கள் தானே.. இங்க வாங்க.. அடிக்க மாட்டோம்.

பிக்பாஸ் 2றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP