#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு எல்லாம் உணவு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. வெங்கயாம் தொடங்கி நேற்று சாண்ட்வெட்ச் வரை உணவு போர் மட்டும் இல்லை என்றால் பிக்பாஸ் ஒரு விக்ரமன் படம்.
 | 

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

நேற்றைய விசிட்டிற்காக கமல் கோட் சூட்டில் அட்டகாசமாக வந்திருந்தார். இந்த சீசனில் போட்டியாளர்கள் போல கமலும் டல்லடித்துகொண்டு இருந்தார். நேற்று பிக்பாஸ் முதல் பாகத்தில் பார்த்த ஹேண்ட்சம் கமலை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நீண்ட நேரம் நின்றுக்கொண்டு இருந்தது பற்றி புகார் கூறியிருந்தாரோ என்னவோ நேற்றைய நிகழ்ச்சியில் அவருக்கென சோஃபாவும் போடப்பட்டு இருந்தது.

நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை பார்வையாளர்களுடன் இணைந்து பார்த்தார். இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு பெரும் பிரச்னையாய் இருப்பது உணவு மட்டுமே. தொடக்கம் முதல் கிட்சன், வெங்காயம், டீ, காஃபி என சண்டையின் சாராம்சம் உணவாக தான் இருக்கிறது. இந்த பிரச்னையோடு பல கலாச்சார பின்புலம் கொண்டவர்கள் போட்டியாளர்களாக இருப்பதால் குட்டி இந்தியா போல இருக்கிறது பிக்பாஸ் வீடு. அங்கேயும் அரசியல் இருக்க தான் செய்கிறது.

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

முதல் சீனிலேயே யாஷிக்கா பசிக்குது என்கிறார். இது தான் முதல் முறையாக அவர் பசிக்குது என்று கூறுவதாக டேனி கூறினார். கார்டனில் அமர்ந்திருந்த பொன்னம்பலமும் தோசை மாவு இருந்திருக்கலாம் என்று அனந்திடம் பேசிக்கொண்டு இருந்தார். நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 1 சாண்ட்வெட்ச் என தயார் செய்து வைக்கப்பட்டு இருக்க யாரோ மும்தாஜ் மற்றும் மமதியின் உணவை சேர்த்து சாப்பிட்டு விட்டார்களாம். (காலையில் ஒரே ஒரு சாண்ட்வெட்ச் தானா?)

என் சாண்ட்வெட்ச் எடுத்தாலும் பரவாயில்லை. நான் கிட்சன் டீம். ஆனால் மமதியின் உணவை ஏன் எடுத்தார்கள் என்றார் மும்தாஜ். இதை ஒரு முறை கூறியிருந்தால் ஓ.கே என்று கூறியிருக்கலாம். தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அவரிடம் சென்று பசி வந்துட்டா இப்படி தான் ஆகிடுவீங்க என்ற கூறத் தோன்றியது. 

நடுவில் இது சாதாரண காமன் சென்ஸ் என்று 4 வரிகளை ஆங்கரிங் செய்வது போல பேசினார் மமதி. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் தங்கையாக வருபவருக்கு தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசையிருக்கும். அதனால் அவர் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போலவே பேசிக்கொண்டு இருப்பார். மமதியை பார்க்கும் போது அப்படி தான் தோன்றியது.  வைஷ்ணவி சாண்ட்வெட்ச் எடுத்தவர்களை திட்டிக்கொண்டே இருந்தார்.

அருகில் இருந்த அனந்த், அவர்கள் தெரியாமல் கூட எடுத்திருக்கலாம். அப்படி திட்டுவது சரியல்ல என்றார். முன்னர் பொன்னம்பலம் கூட ஒருவருக்கு ஒன்று தான் என்பது தெரியாமல் இரண்டாவது சாண்ட்வெட்ச் எடுத்துள்ளார். அப்போது வைஷ்ணவி ஒன்னுதான் என்று விளக்கி உள்ளார்.  எனவே யாருக்கும் தெரியாது என்றார் அனந்த்.

அவர் சென்றதும் மகத்திடம், அனந்த் தன்னிடம் கடிந்து கொண்டதாக கூறினார் வைஷ்ணவி. நீ இத ஏன் பெரிசாக்குற என்றார் மகத். வைஷ்ணவி உண்மையாகவே பெரிதாக்கினார் தான். அப்போது அங்கு வந்த மும்தாஜ், கடவுள் எனக்கு சீஸ் ஒவ்வாது என்பதால் தான் என்னை சாப்பிடட விடமால் செய்து விட்டார் என அடேடே விளக்கம் கொடுத்தார். உடனே, என்னிடம் இருந்தால் அதில் பாதி உனக்கு கொடுத்துவிடுவேன் என்று தான் என்னுடையதும் எடுத்துக்கொண்டார் என்றார் மமதி. ஆண்டவா..

பின் நானும் யாஷிக்காவும் தான் சாப்பிட்டோம் என்று கூறினார் மகத். உடனே உனக்குனா எத்தனை வேண்டுமானாலும் தருவேன் என்று சட்டென மாறினார் மும்தாஜ். அது அங்கிருந்த அனைவருக்கும் தர்ம சங்கடமான தருணம். குறிப்பாக வைஷ்ணவி எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டு இருந்தார். ஒருவர் பற்றி அவரிடமே குறிவிட்டு முழிப்பது எத்தனை கொடுமை.

நீண்ட நாட்களுக்கு பிறகு யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் ஒன்றாக வீட்டில் வலம் வந்தனர். எதாவது சாப்பிட இருக்கிறதா என்ற கேட்ட யாஷிக்காவிடம், நீதான் சாண்ட்வெட்ச சாப்பிடேனு தெரிஞ்சிடுச்சி சும்மா இரு என்றார் ஐஸ்வர்யா.

கிட்சனை கடந்து சென்ற பாலாஜி. நித்யாவிற்கு கேட்கும் படி ‘இத்தன கேமரா முன்னாடி நடிக்கிற”, செலபிரிட்டியாம், இன்னும் அசிங்கப்படனும்” என அடுக்கடுக்காக திட்டிக்கொண்டே சென்றார் அதில் பலவற்றை பீப் போட்டு மறைத்தார். போட்டியாளர்கள் பாலாஜியின் இந்த பக்கத்தைபற்றி பேசுவதே இல்லை. எப்போதும் அவர் நித்யாவிடம் போய் திட்டு வாங்குவதை பற்றி மட்டும் பேசுகிறார்கள். மேலும் பாலாஜிக்கும் இதெல்லாம் கேமராவில் பதிவாகும் என்பது தெரியாமல் போனது ஏனோ.

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

இதை பார்தது முடித்துவிட்டு, அககண் திறக்க போட்டியாளர்களிடம் பேச தொடங்கினார் கமல். கடந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்களின் உரைந்த முகங்களை காட்டி அது எப்போது நடந்தது என கேட்டார். முதலாவதாக பொன்னம்பலம் அனந்த சயனத்தில் இருந்த போஸ். பிக்பாஸ் வீடே களேபரமாகி கொண்டு இருக்க பொன்னம்பலம் அந்த போஸில் இருந்தார். அப்போது எப்போ நிறுத்துவாங்க என்று யோசித்துக்கொண்டு இருந்ததாக கூறினார். ஒரு ஸ்டன்ட் மாஸ்டருக்கு அழாக இது?

பின் சென்றாயன் தளபதி ரஜினி போல குடுமி போட்டு சிரிக்கும் படம். அந்த புகைப்படத்தை காட்டி வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு சிகை அலங்காரம் செய்தததை பற்றியும் கேட்டறிந்தார் கமல். அடுத்தாக பெண்கள், சூழ சென்றாயன் நிற்கும் படம். சென்றாயா.. வாழ்றயா என்பது போல இருந்தது.

டேனி தனது உள்ளாடை கிடைத்ததும் சந்தோஷத்தில் மிதந்த தருணம். அதனை விவரமாக அவர் கமலிடம் விவரிக்கவும் செய்தார். மகத்தின் தோல் மீது கைப்போட்டுக்கொண்டு யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும்நிற்கும் படம். வான்டடாக முன்வந்து மகத்துக்கு பாடிகார்டாக இருந்தோம் என்றார் யாஷிக்கா. பின்  டேனி அனைவருக்கும் பட்டபெயர் வைத்திருப்பது பற்றி கேட்ட கமல், அவற்றை விவரிக்கவும் கேட்டார்.  சட்டென தொடங்கினார் டேனி.

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

ஷாரிக் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் மாவு மிஷன், காரணமே இல்லாமல் பாலாஜிக்கு தல்கோ என்றார்.பின் பெரிய ஜோக் பொன்னம்பலம் என்று அவர்கூறும் போது கை நீண்டது. அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறார் போல.. மும்தாஜ் மேல் உள்ள பாசத்தால் பெயர் வைக்கவில்லை என்றார். அதில் பயம் அதிகம் தெரிந்தது.

ரித்விகா எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பதால் மண்ட கசாயம், நித்யாவிற்கு பீனிக்ஸ் பறவை (??) என்ற டேனி அனந்த் வைத்தியநாதனுக்கு இசை என்றார். பின் அனைவருக்கும் தெரிந்தது போல விஷ பாட்டில் ஜனனி, தலைவலி மாத்திரை யாஷிக்கா, ஆமை வடை ஐஸ்வர்யா, டமால் ஜோக் வைஷ்ணவி, சூனியகார கெழவி ரம்யா, வெங்காய வெட்டி (வாவ்!) மகத் என்று சொல்லிமுடிக்க அனைவரும் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் டேனி என்று கத்தினர்.

சமூத்திரம் படத்தில், வரும் “எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு, செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு” என்பது போல செய்யும் ஒவ்வொன்றிலும் பாசத்தை பிழிகிறார்கள் போட்டியாளர்கள். பிக்பாஸ் எல்லாத்தையும் நோட் பண்ணுகிறார் என்று நம்பப்படுகிறது.

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

பின் ஐஸ்வர்யாவை பாட சொல்லிக்கேட்டார் கமல், அவர் மாருகோ மாருகோ என்று மழலை தமிழில் பாடினார். கமலும் பாட போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர். பாட்டு முடிந்ததே அடுத்து நடனம் தானே, கேமரா முன் எப்போதும் வந்து ஆடும் யாஷிக்கா, டேனி, ஐஸ்வர்யா குழு கமல் முன்பு ஆடினர்.

கடந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் கமல் முன் பதுங்கி பதுங்கி பேசினர். ஆனால் இம்முறை பலர் அதற்கு நேரதிராக இருக்கின்றனர். குறிப்பாக 90ஸ்கிட்ஸ்களிடம் எந்த தயக்கமும் தெரிவதில்லை. இந்த மாற்றத்தை கமல் ஏற்றுக்கொண்டதாக தான் தெரிகிறது.

பின் இடைவேளையின் போது, டேனி தனது தொழிலை கிண்டல் செய்துவிட்டதாக கூறினார் அனந்த். டேனி சமாதானப்படுத்துவதற்காக அதை எடிட் பண்ணிடுவாங்க சார் என்றார். மன்னாங்கட்டி என்று கடிந்தார். வரும் நாட்களில் அனந்த் குரலை உயர்த்தி கத்தும் காட்சி வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன் அவர் எவிக்ட் ஆகாமல் இருந்தால் சரி. பின் கேமரா முன் வந்து அதை மட்டும் கட் பண்ணிடுங்க என்றார் டேனி. போங்க தம்பி, போய் பொழப்ப பாருங்க என்று நினைத்திருப்பார் பிக்பாஸ்.

அடுத்தாக கமல் ஒவ்வொரு பெயராக காட்ட அது யாருக்கு பொருந்தும் என்று போட்டியாளர்களிடம் கேட்டார். முதலாவதாக நாட்டாமை. அந்த வார்த்தையில் பலர் ஜனனி என்று கூறினர். சென்றாயன் மட்டும் மும்தாஜ் என்றார். அதற்கு அவர் சொல்லும் காரணமும் சரியாக இருந்தது. பின் பாலாஜி நித்யா பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே அவரின் பேரை கூறினார்.

அடுத்து காதல் மன்னன் யார் என்று கேட்டார். பலரது பதில் ஷாரிக் மற்றும் மகத். முக்கியமாக ஷாரிக்கே தனது பெயரை கூறிக்கொண்டார். அனந்த் வைத்தியநாதன், பாலாஜி நித்யாவின் பின் சுற்றி வருவதால் அவரின் பெயரை சொன்னார். அடுத்துடுத்து சிலரும் பாலாஜியை கூறினர். எந்த காதல் மன்னன்கள் காதலியை கடிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வைஷ்ணவி சென்றாயன் பெயரை கூறியவுடம் பதறினார் செண்டு. எப்போதும் காதலியை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பதால் டேனி தான் காதல் மன்னன் என்றார் மகத். உடனே கமல், பிரெண்டு லைவ் மேட்டரு என கூறி நிஜமாக அரங்கம் அதறி இருக்கும்.

அடுத்து ஆந்தை. இந்த பெயருக்கு மும்தாஜ் பெயரையும் யாஷ்-ஐஸ் பெயரையும் கூறினார்கள். யாஷ்-ஐஸ் இருவரும் இரவில் அதிகமாக ஷாரிக்கை பற்றி தான் பேசுகிறார்களாம். பழைய விஷயம் தான் என்றாலும் அவர்களே அதை கூறும் போது புதுசு போல இருந்தது. கும்பகர்ணன் என ஒட்டுமொத்தமாக அனைவரும் மகத்தை கூறினார்கள். வைஷ்ணவி மட்டும் டேனி அதிகம் குரட்டை விடுவதால் அவர் பெயரை கூறினார்.

மற்ற எல்லா பெயருக்கும் இரண்டு பேராவது தேர்ந்தெடுக்கப்பட நாரதர் என்ற பட்டத்தை வீடே ஒன்றுக்கூடி ஜனனிக்கு கொடுத்தது. பின்னர் வீட்டில் இருந்தவர்களில் சிலர் கமல் போல நடித்துக்காட்டினர். பிக்பாஸ் வீட்டில் சொல்வதெல்லாம் உண்மை முடிந்து கலக்க போவது யாரு தொடங்கியது.

கடைசியாக எவிக்ஷன்  பகுதி. இந்த வாரம் வெளியேற்றம் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் பதட்டதுடன் இருந்தார்கள்.நாமினேட் செய்யப்பட்ட மும்தாஜ், ரித்விகா, நித்யா, அனந்த் ஆகியோர் எழுந்து நின்று ஏன் தங்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று கூறினர்.

அனந்த், புதிய மனிதர்களுடன் பேச தயங்குவது தான் காரணமாக இருக்கும் என்றார். நித்யா, தன்னை வட்டத்திற்கு சுருக்கி கொண்டதாகவும் இனி அப்படி செய்ய போவது இல்லை என்றும் கூறினார். ரித்விகா, பழக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றார். மும்தாஜ் தனக்கு காரணமே தெரியவில்லை என்றார் (அப்படியா மேடம்).

#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை!

மற்ற மூவரையும் அமர சொல்லிவிட்டு மும்தாஜ் வெளியேற இருப்பதாக கூறினார் கமல். அப்போது அனைவரும் எவிக்ஷன் வேண்டாம் என்று கூறினர். அதில் மமதியை தவிற மற்றவர்கள் நாளைக்கு யார் சமைப்பா என்பதை நினைத்து வருத்தப்படுத்து போல இருந்தது. பின் கமல் தனது விளையாட்டை நிறுத்துக்கொண்டு உண்மையை கூறினார். நடுவில் ஒருவர் தனது கடமையை செய்யும் போது அது பெரிய தியாகம் போல பேசாதீர்கள். இப்படி அதிகாரித்தில் இருப்பவர்கள் பேசுவதால் தான் ஊழல் நடக்கிறது என்பதையும் கமல் சேர்த்துக்கொண்டார். பின் நிகழ்ச்சி முடியும் போது அடுத்த வாரம் பிக்பாஸ் மேடையில் விஸ்வரூபம் படத்தின் பாடலை வெளியிடப்படும் என்று கூறிவிட்டு சென்றார் கமல்.

ஒரு வாரம் முடிந்துவிட்டது கமலும் வந்து சென்று கிளம்பிவிட்டார். பிக்பாஸ் வீடு பாட்டு, நடனம் என்று ஜாலியாக இருக்கிறது… ம்ம்ம்.. பிக்பாஸ் பதனி.. பதனி..

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP