#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

முன்னாள் போட்டியாளர்களின் விசிட் தற்போதைய போட்டியாளர்களிடம் சில மாற்றங்களை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதையும் தாண்டி சில முக்கியமான பிரச்னைகளையும் அது தொடங்கி வைத்துள்ளது.
 | 

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

முன்னாள் போட்டியாளர்களின் விசிட் தற்போதைய போட்டியாளர்களிடம் சில மாற்றங்களை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதையும் தாண்டி சில முக்கியமான பிரச்னைகளையும் அது தொடங்கி வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் 54ம் நாள் என்ன நடந்தது?

முந்ததைய நாளின் தொடர்ச்சியாக “நான் பாத்ரூம் கிளீன் பண்ணேன்” என்ற வாக்குவாதத்தோடு தொடங்கியது நேற்றைய தினம். வைஷ்ணவி யாராவது பக்கத்துல இருந்தா தான் வேலை செய்யுற மாதிரி பண்ணும் என்று கடிந்து கொண்டு இருந்தார் சென்றாயன். அதற்கு பதில் இல்லாமல் வைஷ்ணவி முழித்தது தெரிந்தது.

விவாத மேடை டாஸ்க்கில் இந்த கேள்வி வந்த போது ஜனனி சரியாக தீர்ப்பு வழங்கவில்லை என்று வீட்டில் சிலர் கூறினர். அதற்கு ஜனனி விளக்கமளித்துக் கொண்டு இருந்தார்.

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

அந்த டாஸ்க்கின் போது யாஷிகா தன்னை பற்றி பேசியதால் வருத்தத்தில் இருந்தார் ஐஸவர்யா. இனி யாரிடமும் பேசமாட்டேன் என்ற வைஷ்ணவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த மகத்தும் வந்து சமாதனப்படுத்தினார். ஆனால் யாஷிகா இதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. டாஸ்க்கின் போது இப்படி தான் ஆகும் என்று பேசிவிட்டு வெளியேறினார்.

எதாவது ஒன்னுனா யாஷிகா தான் உனக்காக பேசுவா. நாம உண்மையா இருக்கோம். கடவுள் நம்மை இறுதிச்சுற்றி வரை அழைச்சிட்டு போவார் என்று ஐஸ்வர்யாவுக்கு தைரியம் கொடுத்தார் மகத். எல்லாம் சரி கடவுள் வோட் கூட போடுவாறா என்ன? அந்த நாளின் முடிவில் பாத்ரூம் சுத்தம் செய்வது பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று கொண்டு இருந்தது.

54ம் நாள் காலை கண்ணு ரெண்டு ரங்கராட்டினம் பாடலுக்கு யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் நடனத்தோடு தொடங்கியது. ஐஸ்வர்யா எதிலும் திருப்தி அடையவே மாட்டார் என்று யாஷிகா பேசிக்கொண்டு இருந்தார். சில சமயங்களில் யாஷிகாவும் சேஃப் கேம் ஆடுவது போன்று தோன்றுகிறது.

லக்சரி பட்ஜெட் பொருட்களை எழுதும் போது ஏற்பட்ட தவறால் இந்த வாரம் அது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து யாஷிகா சரியாக விளக்கினார்.

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

யாஷிகாவின் தலைவி பொறுப்பு முடிவுக்கு வந்தது. அடுத்த தலைவர் போட்டியில் ஐஸ்வர்யா மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். நீச்சல் குளத்தின் மேல் போடப்பட்டு இருக்கும் கட்டையில் நின்று, கொடுக்கப்பட்டு இருக்கும் ஆயுதத்தை கொண்டு எதிராளியை தள்ளி விட வேண்டும் என்பது டாஸ்க். இதனை கேட்கும் போதே ஜனனி செய்வாரா?என்ற கேள்வி எழும்பியது.
அதன்படியே அவர் தோற்றார். ஐஸ்வர்யா ஈசியாக டாஸ்க்கை வென்று தலைவியானார். போட்டி முடிந்ததும், “பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற உடன் ஜிம்முக்கு போ… நீ ரொம்ப வீக்கா இருக்க” என்று ஜனனிக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருந்தார் மும்தாஜ்.
வெற்றி பெற்ற ஐஸ்வர்யாவுக்கு அனைவரும் வாழ்த்துக் கூறி கொண்டு இருந்தார். பாலாஜியிடம் வாழ்த்து பெற்றுவிட்டு,  இந்த முறை நல்ல தலைவராக இருப்பேன் என்று ஐஸ்வர்யா கூறினார். உடனே அதனை நிரூபிக்க. அனைவரும் தங்கள் விருப்பப்பட்ட அணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். “நான் நல்லவன் தான்… நான் நல்லவன் தான்” என்று சத்தமாக கூறுவது போல இருந்தது ஐஸ்வர்யாவின் இந்த முடிவு.

ஜனனி டாஸ்க்கில் தோல்வியடைந்தது கூறித்து பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர் பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா, சென்றாயன். நான் ஜெயிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். நம்ம கெப்பாசிட்டி என்னனு நாம தெரிஞ்சி வைச்சிகிட்டா எந்த பிரச்னையும் இல்ல என்று கூறினார் ஜனனி. இதனை கலாய்க, குயில புடிச்சி கூண்டில் அடைச்சி  என்று பாட தொடங்கினார் பொன்னம்பலம். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு  பாடுகிறார். அவருடன் அங்கு இருந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

இந்த கச்சேரி நடக்கும் போதே, யுவன் குரலில் ‘பியார் பிரேமா காதல்’ என பாடல் ஒலித்தது. அனைவரும் ஹரிஷ் கல்யாண் தான் வரபோகிறார் என்பதை தெரிந்து கொண்டனர். மெயின் டோர் திறக்க,  ரைசா, ஹரிஷ் மற்றும் இளம் ஆகியோர் வந்தனர். வழக்கமான வரவேற்பு இல்லை என்றாலும் நண்பர்களை வரவேற்பது போன்று போட்டியாளர்கள் நடந்து கொண்டனர். வீடு நிறைய மாறிவிட்டது என்று ஆச்சர்யம் அடைந்தார் ரைசா. ஹரிஷை பார்த்ததும் சோகமானார் மகத். சிரி மாமா என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார் ஹரிஷ். ரைசாவுக்கு ஆண்களும், ஹரிஷ்க்கும் பெண்களும் பிரோபோஸ் செய்து கொண்டு இருந்தார்கள். இதில் சென்றாயன் பிரோபோஸல் பார்க்க அழகாக இருந்தது.

கடந்த சீசனை போல இந்த முறை யாரும் தனியாக தெரியவில்லை என்று கூறிக்கொண்டு இருந்தார் ஹரிஷ். உண்மையும் கூட. சென்ற முறை ஓவியா, காயத்திரி என தனிதனியாக இவர்கள் இப்படிதான் என கூறமுடிந்தது. இந்த முறை அப்படி யாரும் இல்லை.

ரைசா ஆங்கிலத்தில் பேசியதால் வீட்டில் சைரன் அடித்தது. தண்ணீரில் 5 பேர் குதிக்க வேண்டும். பாதி பேர் தயங்கி நிற்க. இப்படி தான் இருப்பீங்களா, நாங்க எல்லாம் பயந்து பயந்து விளையாடுவோம் என்றனர் பிக்பாஸ் வீட்டின் சீனியர்கள்.

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

பின்னர் எஸ் ஆர் நோ விளையாட்டை விளையாடினர். இதில் சில வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டது. யாஷிகா மற்றும் மகத்துக்கு இடையேயான உறவு நட்புக்கு மேலா? என்ற கேள்விக்கு அனைவரும் ஆம் என கூற மகத் மட்டும் இல்லை என்றார். ஜனனி விஷ பாட்டில் தானே என்ற கேள்விக்கு பொன்னம்பலத்தை தவிர மற்றவர்கள் ஆம் என்றார்கள். மும்தாஜ் ஸ்பெஷல் கவனிப்பு கேட்கிறாரா என்ற கேள்விக்கு வைஷ்ணவி மற்றும் யாஷிகா தவிர மற்றவர்கள் ஆம் என கூறினார்கள். வைஷ்ணவி தான் இந்த வீட்டின் ஜூலியா என்ற கேள்விக்கு அனைவரும் ஆம் என்றனர்.

பின்னர் வீட்டில் இருப்பவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தனர் ஹரிஷும் ரைசாவும். இந்த வீட்டால் தான் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்து, இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினர்.

பின்னர் மும்தாஜ், நான் எப்போது ஸ்பெஷல் கவனிப்பு கேட்டேன் என மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் கேட்கும்கேள்விகள் அனைத்தும் சரியாக இருக்க பதில் சொல்ல முடியாமல் முழித்தனர் போட்டியாளர்கள். இதுகுறித்து பேசிய போது, ஜூலி போல மும்தாஜ் செய்து காட்டியது அபாராம். அந்த ஐந்து செகெண்ட் வீடியோ மேட்டரை மும்தாஜ் செமயாக விவரித்தார்.

#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்

இன்று மற்றவர்கள் ஏன் தன்னை விஷ பாட்டில் என்று கூறுகிறார்கள் என்று பொன்னம்பலத்திடம் வருத்தத்தோடு கூறிக்கொண்டு இருந்தார் ஜனனி.

பின்னர் மகத் தன்னை பற்றி என்ன தான் நினைத்திருக்கிறார் என்பதை நினைத்து வருந்தி கொண்டு இருந்தார் யாஷிகா. அவருக்கு மும்தாஜ் ஆறுதல் கூறினார். பின்னர் மகத்திடமும் மும்தாஜ் இதுகுறித்து பேசினார். உண்மையில் மகத் என்னதான் நினைத்திருக்கிறார்?

இன்று நாட்டாமையின் தினம். பல குறும்படங்கள் போட்டு காட்டுவதற்கான காட்சிகள் இருக்கின்றன. முக்கியமாக மகத்தின் குறும்படங்கள். காட்டுவாரா?  அல்லது என்ன மகத் போட்டு காமிக்கட்டுமா என்று கண் அடித்து விட்டு போவாரா? பார்ப்போம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP