#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

பிக்பாஸ் வீட்டில் ஒரு வழியாக சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. ராணியம்மாவை நீச்சல் குளத்தில் தள்ளி டாஸ்க்கை முடித்திருக்கிறார்கள் பொதுமக்கள்.
 | 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

பிக்பாஸ் வீட்டில் ஒரு வழியாக சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. ராணியம்மாவை நீச்சல் குளத்தில் தள்ளி டாஸ்க்கை முடித்திருக்கிறார்கள் பொதுமக்கள். ஆனால் ஐஸ்வர்யாவின் அட்டகாசமும், பொதுமக்களின் திடீர் எழுச்சியும் பிக்பாஸ் சொல்லி தான் நடந்ததோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. அதற்கு காரணம் என்ன... பிக்பாஸ் வீட்டில் 46வது நாள் என்ன நடந்தது?

45வது நாளின் காட்சிகள் தொடர்ந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைகள் சமையல் அறை மற்றும் சாப்பாட்டை சுற்றி தான் நடக்கின்றன. இந்த சர்வாதிகார டாஸ்கிலும் நிறைய சண்டைகளுக்கு காரணமாக இருந்ததும் சாப்பாடு தான்.

தொடக்கத்திலேயே ராணியம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என அடம் பிடித்துக்கொண்டு இருந்தார் மகத். இது போல ராணியை டம்மியாக்கும் வேலைகளை மகத், டேனி ஆகியோர் அவ்வபோது செவ்வென செய்கின்றனர். ஆனால் இந்த முழு டாஸ்க்கும் அப்படி இருந்திருந்தால் ரகளையாக இருந்திருக்கும். ஆனால் தொடக்கம் முதல் டாஸ்க்கை சரியாக செய்ய வேண்டும். ராணியை மதிக்க வேண்டும் என்பதில் போட்டியாளர்கள் ஓவர் கடமையாற்றினார். வரலாற்றிலும் கூட சர்வாதிகாரிகளை லெஃப்ட்டு கையால் அசால்ட் செய்து விட்டு சென்ற பலர் இன்றளவும் போற்றப்படுகிறார்கள். சர்வாதிகார ஆட்சியை சமாளிக்க பகடி செய்வது எப்போதும் பெரிய தீர்வாக இருக்கும். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

சென்றாயனுக்கு வழங்கப்படும் தண்டனைகள் இன்னும் முடியவில்லை. அவர் மன்னிப்பு கேட்டால் தான் காலை உணவை சாப்பிட முடியும் என்று கட்டளையிட்டார் ராணி. "நீங்க சொல்ற எல்லாத்தையும் செய்றேன்... என் மேல தண்ணிய ஊத்துனீங்க, அப்பவும் அமைதியா தான் இருந்தேன். இப்போ ஏன் திரும்ப தண்டனைய கொடுக்குறீங்க" என்று சென்றாயன் கேட்டத்தில் நியாயம் இருந்தது. 

ஆனால் மன்னிப்பு கேட்டுட்டு தான் சாப்பிடனும் என்பதில் ராணி உறுதியாக இருந்தார். அப்படி என்றால் சாப்பாடு வேண்டாம் என்று கோபப்பட்டார் சென்றாயன். அவர் சாப்பிட்டால் தான் மற்றவர்களுக்கு சாப்பாடு என்றும், இல்லையென்றால் அனைவருக்கும் தண்டனை கொடுக்கப்படும் என்றும் அடுத்த அதிரடி உத்தரவு வந்தது. ஊர்ல ராஜாவுக்கு எதிரா ஒருத்தன் சுத்துவான்ல நான் அவனாவே இருந்துக்கிறேன். என்னை யாரும் எதுவும் கேட்காதீர்கள் என்று வழக்கம் போல நடக்க துவங்கிவிட்டார் செண்டு. 

இதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்றாயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மன்னிப்பு தானே கேட்டு விடுங்கள் என்று அவரை சம்மதிக்க வைத்தனர். இதுகுறித்த பேச்சுவார்த்தையின் போது, "நாம இங்க கேக் சாப்பிட வரல... இதுக்குலாம் சம்மதித்து தான் வந்திருக்கோம், போய் மன்னிப்பு கேளு" என்றார் பொன்னம்பலம். 

இந்த உரையாடலை ராணியம்மா தனது அறையில் இருந்தப்படி பார்த்துகொண்டு இருந்தார். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த பாதுகாவலர் டேனி மாம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்க அவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அதனை சாப்பிடப்படியே செய்தார் டேனி.

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

வீட்டில் இருக்கும் அனைவரும் தன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், "நான் இப்போது ஐஸ்வர்யா இல்ல... நான் இந்த வீட்டின ராணி" என்று தற்பாதுகாப்புக்காக சொல்லிவிட்டு சென்றார் ராணி. இவ்வளவு பயம் இருக்கும் போது எதுக்கு இந்த ஆட்டம்!

பின்னர் சென்றாயன் வந்து ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டார். அவருடன் மும்தாஜும் வந்திருந்தார். சென்றாயன் மன்னிப்பு கேட்ட விதம் சரியாக இல்லை என்று அவரை மேலும் கடுப்பேத்தினார் ஐஸ்வர்யா. 

சில சமயங்களில் டாஸ்க்கை செய்கிறார், சில சமயங்களில் படுத்துக்கொள்கிறார் அவர் டாஸ்க்கில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் ராணிக்கு எழுந்தது. நமக்கும் கூட. ஒரு சீனில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்கிறார், அடுத்த சீனில் படுத்துக்கொள்கிறார். என்ன தான் பண்ணிட்டு இருக்காரு என்று யாருக்கும் புரியவில்லை. அவரிடம் இதுகுறித்து போய் கேட்டனர் ராணியும், அவரது அதிகாரிகளும். அதற்கு மழுப்பி மழுப்பி பதில் அளித்தார் பாலாஜி. டாஸ்க்ல இருக்கீங்கலா இல்லையா? என கராராக கேட்டார் டேனி. எனக்கு உடம்பு சரியில்லை நான் வரல என்று பதில் அளித்தார் பாலாஜி. 

அவரை விடக்கூடாது என்று பிக்பாஸ் கூறிவிட்டார். அவருக்கு தண்டனை கொடுப்பேன் என்று ஐஸ்வர்யா என்ற ராணி வேதாளமாக மாறி மீண்டும் முருங்கைமரத்தில் ஏறினார். அவரது கோபம் அதிகரிக்கும் முன்பு இந்த பிரச்னையை தீர்த்து வைத்தனர். பாலாஜியும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்தார். அதற்கு நடுவில் இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாலாஜி. அப்போது, "நீ கோபபடுணும்னா எப்போவோ பட்டு இருக்கணும். குப்பை கொட்டும் போது அமைதியா இருந்த. அந்த பொண்ணு போன அப்றமா அடிச்சிடுவேன்னு  சொல்ற. நீ நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜா போயிருக்க. உனக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்" என்று பாலாஜிக்கு நீண்ட அறிவுரையை கூறினார் பொன்னம்பலம். போதாக்குறைக்கு ஷாரிக்கும், அவள இப்போ ஐஸ்வர்யாவா பார்க்காதீங்க, டாஸ்க்கா பாருங்க என்று பேசினார். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

இதெல்லாம் பாலாஜிக்கு பிடிக்கவில்லை என்பது பிற்பாடு சென்றாயனிடம் கோபப்பட்டு பேசிய போது தெரிந்தது. அடுத்த பிரச்னையாக, ரித்விகாவை வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தார் யாஷிக்கா. இது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் சீக்ரெட் டாஸ்க்கா என்பது தெரியவில்லை. நியாயமே இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தார் யாஷிக்கா. அவற்றையெல்லாம் இடது கையால் தட்டிவிட்டுக்கொண்டு இருந்தார் ரித்விகா. 

பொதுமக்களுக்காக சென்றாயன் சிக்கன் சமைக்க வேண்டும் என்று அறிவித்தார் ராணி. ஆனால் சென்றாயனும், பொன்னம்பலமும் சிக்கன் சாப்பிட கூடாதாம். அப்போது சென்றாயனுக்கு வேற சிக்கன் தரலாம் என்று எப்படியாவது உதவி செய்ய நினைத்தார் டேனி. ஆனால் அவர் திட்டங்கள் எதுவும் ஐஸ்வர்யா முன் எடுப்படவில்லை. 

சிக்கனுக்கு பதிலாக  'மொட்டை' சாப்பிடுங்க என்றார் ஐஸ்வர்யா. மொட்டையை எதற்கம்மா சாப்பிட வேண்டும் என்று டேனி கலாய்க்க... முட்டைய சொன்னேன் என்று கோபப்பட்டார் ஐஸ்வர்யா. டேனியும் மற்றவர்களும் அவர் கோபத்தைபார்த்து சிரித்தனர். உடனே, நீங்க எப்படி என் தமிழை விமர்சிக்கலாம், உனக்கு ஒரு தண்டனை என்றார் ஐஸ். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

குழம்பு கொதிப்பதற்கு முன்பே  அடுப்பை அணைக்க வேண்டும் என்று வித்தியாசமான உத்தரவை கூறினார் ராணி. அப்போது அங்கிருந்த ஷாரிக் அந்த குழம்பை எடுத்து வர நீ ஏன் எடுத்துட்டு வர, நீ ஏன் எடுத்துட்டு வந்த என்ற பஞ்சாயத்து ஓடியது. ஷாரிக் மேல் இருந்த கோபத்தில் ஆவேசமாக குழம்பு சட்டியை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றார் ஐஸ்வர்யா.

பின் அவரை ஆலோசகரும், பாதுகாவலரும் சமாதானப்படுத்தினர். பின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். மும்தாஜுக்கு சென்றாயன் தான் ஊட்டி விடணும் என்ற உத்தரவு வந்தது. ஒரு வாய் வேணும்னா ஊட்டிக்குறேன், அதுக்கு மேல என்னால அப்படி சாப்பிட முடியாது. எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றார் மும்தாஜ். பின் ஒரு வாய் ஓ.கே என்ற முடிவெடுத்தனர். 

அதற்கு காரணம், ஒருமுறை சென்றாயனுக்கு மும்தாஜ் ஊட்டிவிட மறுத்து அதைப்பற்றி கமலும் கேள்வி எழுப்பி இருந்தார். அதனை நினைப்படுத்தி, "நீங்கள் செய்தது தவறு" என்று எடுத்துக்கூறவே இந்த உத்தரவு. 

அடுத்து யாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா, அந்த வெறித்தன டாஸ்க்கை கொடுத்தார். ரித்விகா, வீட்டில் ஒட்டப்பட்டு இருக்கும் அனைத்து ராணி போஸ்டர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டுமாம். ரித்விகா அதனையும் செய்தார். 

பின் மகத்துக்கு அந்த வில்லங்கமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. வீட்டில் இருப்பவர்களை அவர் கோபப்படுத்த வேண்டும். இந்த ஐடியாவை கொடுத்தவர் விஷ பாட்டில் ஜனனி. அதே போல அவரது யோசனையில் உதிர்த்த அடுத்த முத்து, மும்தாஜ் எரிச்சல் அடையும் வரை அவருக்கு பொன்னம்பலம் அறிவுரை கூற வேண்டும். ஜனனியின் யோசனைகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் அட்டூழியங்கள் கம்மியாக தான் தெரிந்தன. 

நடுவில் மும்தாஜுக்கு லிப்ஸ்டிக் வைத்துவிட சுத்திக் கொண்டு இருந்தார் ஷாரிக். இதுவும் டாஸ்க்கா என்பது தெரியாமல் இருந்தது. இப்படி தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்டது அனைத்தும் ரகசிய டாஸ்க் என்பதால் இதுப்பற்றி அறியாமல் குழம்பினர் போட்டியாளர்கள். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

ஆனால் ரித்விகா மட்டும் இதனை சரியாக கையாண்டார். இப்படி டாஸ்க் செய்யும் போது கடுப்பாக தடுப்பவர்களை "நோ ஃபிசிக்கல் வைலண்ஸ்" என்று கத்தி கத்தியே அடக்கி கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. யாஷிக்கா தனக்கு கொடுத்த டாஸ்க்கை செய்யாமல் இருந்ததால் அவரை தூக்கி சிறையில்அடைக்க உத்தரவிட்டார் ராணி. 

அடுத்த நாள் ஆடுங்கடா என்ன சுத்தி பாடலோடு பிக்பாஸ் வீட்டில் விடிந்தது. இரவில் சிறையில் இருந்த யாஷிக்கா பெட்ரூமிலும், ஷாரிக் சிறையிலும் இருந்தனர். பிரோமோவில் எடிட்டிங்கில் அசத்துபவர்கள், நிகழ்ச்சியையும் சரியாக எடிட் செய்யலாம்.

காலை டிரில் முடிந்தது. இன்று டாஸ்க் முடிந்துவிடும் நம்மை பழிவாங்க அனைவரும் தயாராக இருப்பார்கள் என்ற யோசனை ராணிக்கு வந்துவிட்டது போல, அனைவருக்கும் மன்னிப்பு பற்றி விளக்கி கொண்டு இருந்தார் டேனி. 

பின் வீட்டில்  இருப்பவர்களை 15 நிமிடம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தொடங்கியது மக்கள் புரட்சி. பொன்னம்பலம் மட்டும் உஷாராக ஐஸ்வர்யா சாம்ராஜ்யம் வாழ்க என்று பேசிக்கொண்டு இருந்தார். இதற்காக பொன்னம்பலத்தை மட்டும் வெளியே விட்டனர். ரித்விகாவிற்கு அவசராமாக பாத்ரூமை பயன்படுத்த வேண்டும் என்று  கூறியும் ராணி கருணை காட்டவில்லை. 

சென்றாயன் சில நிபந்தனைகளுக்கு பிறகு வெளியே வந்தார். சிறையில் இருந்தவர்கள் பேசிக்கொண்டதை தனது அறையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா, "என்னை சேவ் பண்ணுங்க" என்று மைக்கில் பிக்பாஸிடம் முறையிட்டுக்கொண்டு இருந்தார். 

வெளியே வந்த சென்றாயனிடம், எல்லாரையும் வெளியே அனுப்பினா தான் வருவேன்னு சொல்லியிருக்கலாம். சுயநலமா நீ மட்டும் வெளிய வந்துட்ட என்று எகிறிக்கொண்டு இருந்தார் பாலாஜி. யார் மீதோ இருக்கும் கோபத்தை எல்லாம் அவர் எப்போதும் சென்றாயன் மீது மட்டும் காட்டுவது சரியேயில்லை.

அப்போது, ஒரு தோசைக்காக மன்னிப்பு கேட்டவன்தானே நீ என்று சென்றாயனை கடிந்தார் பாலாஜி. இவர் தான் படுக்கையில் மறைத்து வைத்து சப்பாத்தியை சாப்பிட்டவர். 

சென்றாயன் அனைவருக்கும் டீ தயார் செய்து எடுத்து செல்ல, யாரை கேட்டு இப்படி பண்ணீங்க என்று கத்தினார் ராணி. டேனி தொடர்ந்து மக்களுக்கு ஆதரவளிக்கிறார் என்பதை ராணியிடம் போட்டுக்கொடுத்தார் ஜனனி (விஷம்). இனி நீங்க எனக்கு வேலை செய்ய வேண்டாம் என்று டேனியிடம் கூறிவிட்டார் ஐஸ்வர்யா. நீங்க என்ன சொல்றது... பிக்பாஸ் சொல்லட்டும் அதுக்கு அப்புறமாக வேலையை விட்டு போரேன் என்று புரட்சி செய்தார் டேனி.

பின்னர் ஏதோ பொய் காரணத்தை சொல்லி பொன்னம்பலம் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அனைவரும் ராணிக்கு எதிராக சாணி ராணி ஒழிக என்று கோஷம் எழுப்பினர். கடுப்பான ராணி, அவர்கள் மீது குப்பையை போட்டும், தண்ணீரை ஊற்றியும் தண்டித்துக்கொண்டு இருந்தார். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

சாணி ராணி ஒழிக, புரட்சி என்றெல்லாம் கோஷங்கள் பறந்தன. டேனியின் வெற்றிடத்தை பிடித்துக்கொள்ள, நான் இனி ராணிக்கு மட்டும் தான் விசுவாசமாக இருப்பேன் என்று கூறினார் ஜனனி.

கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு தண்டனை கொடுக்க சென்ற ஐஸ்வர்யாவை பிடித்து தண்ணீரில் தள்ளிவிட்டார் பொன்னம்பலம். அப்போது அவர் கழுத்து அருகே கை வைத்து பிடிக்க, இன்னும் நெறுக்கி பிடிங்க என்றார் ஐஸ்வர்யா. மூன்று நாட்கள் தான் செய்த தவறை சமாளிக்க, தன்னை யாரவது தாக்க வேண்டும்... அதனை பெரிய விஷயமாக மாற்ற வேண்டும் என்ற முடிவில் இருந்தார் ஐஸ்வர்யா. அவரை நீச்சல் குளத்தில் தள்ளியதும், பொன்னம்பலம் ரூல்சை மீறிவிட்டார் என்று கத்திக்கொண்டே கன்ஃபஷன் அறைக்கு முன் சென்று கத்தினார் ஐஸ்வர்யா. அவரை சமாளிக்க மகத் முயற்சித்து கொண்டு இருந்தார். 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

ஆனால் யார் சொல்லியும் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை. பின் கன்ஃபெஷன் அறை திறக்கப்பட்டது. உள்ளே சென்றதும் கதறி அழுதார் சர்வாதிகார ராணி. நீங்க சொல்லி தானே இதெல்லாம் செய்தேன் என்று அவர் அழ, "நீங்கள் டாஸ்க்க சரியா செய்தீர்கள்... sit back and breath ஐஸ்வர்யா" என்றார் பிக்பாஸ். பின் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று பிக்பாஸ் கேட்க, "அடுத்து நான் என்ன பண்ண வேண்டும்" என்றார் ஐஸ்வர்யா. இன்னும் திருந்தல!

இப்போதைக்கு இந்த டாஸ்க்கில் இருந்து வெளியே வாங்க என்று ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் கூறினார் பிக்பாஸ். பின்னர் இந்த நிகழ்வு குறித்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருக்க நிகழ்ச்சி முடிந்தது. 

#BiggBoss Day 46: கழுத்தை நெறித்த பொன்னம்பலம்; கதறி அழுத ஐஸ்வர்யா!

இன்று வழக்கமாக போட்டியாளர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும் நாள். காரணம் நாளை நாட்டமை வருவார். போட்டியார்களை காட்டிலும் பெரிய சவால் நாட்டமைக்கு தான் இருக்கிறது. இந்த சர்வாதிகாரி டாஸ்க்கையும் தனது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வாரா அல்லது நியாயத்தின் பக்கம் நின்று கேள்வி எழுப்புவாரா? எல்லாம் ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP