#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில உணர்வுப்பூர்வமான காட்சிகள் நடந்தன. ஆனால் தொடர்ந்து பாலாஜி-நித்யா பிரச்னையை காட்டுவது அலுப்பை ஏற்படுத்தியது.
 | 

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

மிட்நைட்டில் மும்தாஜ் அடுத்த நாளுக்கான உணவுக்கு தேவையானதை ரெடியாக்கி கொண்டு இருந்தார். உடன் நித்யாவும், ஜனனியும் இருந்தனர். நித்யா உள்ளே சென்றுவிட டயார்டாக இருக்கும் மும்தாஜை உறங்க போக  சொன்னார் ஜனனி. ஆக்சுவலி.. அது ஜனனியா, வைஷ்ணவியா, ரித்விகாவா என்று தெரியவில்லை. ஜனனி என்றே வைத்துக்கொள்வோம்.

இன்றும் விடிவதற்குள் எழுந்து உட்கார்ந்து கொண்டு இருந்தார் அனந்த் வைத்தியநாதன். வாய்ஸ் எக்ஸ்பேர்ட் குரல் பயிற்சி செய்துக்கொண்டு இருந்த போது “ஒரு குச்சி ஒரு குஃல்பி” என மார்னிங் பாடல் ஒலித்தது. ஒரு நொடி அனந்த் அதிர்ந்துபோனதை பார்க்க முடிந்தது.

பாடல் கேட்டதும் ஒவ்வொருவராக எழுந்தார்கள். ஜனனி நேற்று வழக்கத்தைவிட கொஞ்சம் உற்சாகமாக இருந்தார். அது பின்னர் அவர் அணிந்திருந்த உடையிலேயே தெரிந்தது. யாஷிக்காவுக்கு டஃப் கொடுக்கிறார் வீட்டின் தலைவி. அந்த பாடலில் வரும் ஹை பிச்க்கு பொன்னம்பலம் கொடுத்த முக பாவனை. மீசையை ஷேவ் பண்ண குழந்தையடா என்பது போல இருந்தது.

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

பாடல்  ஒலிப்பது நிற்கும் வரை உற்சாகமாக ஆடிவிட்டு மீண்டும் போர்வைக்குள் சென்றுவிட்டனர் சில போட்டியாளர்கள். மும்தாஜ் காலையில் மிகவும் சோர்ந்து இருந்தார். அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை என்பது தெரிகிறது.கிட்சனில் சாப்பாடு தயார் செய்ய வந்தவரிடம் நித்யா மீண்டும் முந்தைய நாளின் பிரச்னையை பற்றி பேச, வேணாமே என்று கேட்டுக்கொண்டார் மும்தாஜ். பின் மமதியிடம் சென்று நடந்ததை கூறினார். அவர் வயதில் ஒரு ஆதரவு மும்தாஜ்க்கு தேவைப்படுவதும், அந்த இடத்தில் மமதி கச்சிதமாக இருப்பதும் தெரிகிறது.

கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் கிட்சன் பக்கம் செல்கிறார் பாலாஜி. அந்த டீமில் தானே நித்யா இருக்கிறார். நேற்று தானே திட்டினாரு இன்னைக்கு என்ன ஆச்சி என்றெல்லாம் இவர்கள் விஷயத்தில் யோசிக்க முடியாது.

மகத்தும் நித்யாவும் சப்பாத்தி செய்து கொண்டு இருந்தனர். அங்கு நின்றுக்கொண்டு கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருந்தார் பாலாஜி. சப்பாதியை உருட்டிக்கொண்டு இருந்த நித்யாவிடம், நீங்க ரவுண்டா உருட்ட மாட்டிங்களா என்று கேட்டார் மகத். பிச்சி எடுத்து சாப்பிட போற சப்பாதிக்கு ஏன் வட்ட வடிவம் என்பது யாரும் அறியாத ஒன்று. பல விளம்பரங்கள் பார்த்து பழக்கப்பட்டிருப்பார் போல. உடனே நித்யாவிடன் நான் சொல்லித்தரேன் என கூறினார் மகத். அதற்கு உடனே அதெல்லாம் வேண்டாம் என்று முறைப்பாக கூறிவிட்டார் நித்யா. கடந்த 3 நாட்களில் நித்யா அடிக்கடி இது போன்று முரண்டுப்பிடிப்பதை பார்க்க முடிந்தது. தன்னை சுதந்திரமான பெண்ணாக காட்டிக் கொள்ள கொஞ்சம் தீவிரமாக முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. இது போன்று பேசுவது தான் தைரியமான பெண்ணுக்கான குணங்கள் என்று தீர்மானித்து வைத்திருக்கும் பொது புத்தியை நித்யாவின் வார்த்தைகள் அடிக்கடி காட்டுகிறது.

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

தொடர்ந்து நித்யா வேலை செய்து கொண்டு இருக்க அவர் தயாரித்த சப்பாத்தி இதய வடிவில் இருப்பதாக மகத் கூறினார். அவர் இதயம் என்று உண்மையான இதயத்தை தான் கூறியிருக்க வேண்டும். அந்த சப்பாத்தியை எந்த பக்கம் பார்த்தாலும் இதய வடிவில் இல்லை. ஆனால் பக்கத்தில் பாலாஜி இருப்பதால் கோர்த்துவிட முயற்சிப்பது வெளிப்படையாக தெரிந்தது அவர் அங்கு இருப்பதால் தான் சப்பாத்தி ஹார்ட் வடிவில் வருவதாக கூறினார் மகத்.

அதோடு நிறுத்துக்கொள்வார்கள் என்று நினைத்தால், அது ஹார்ட் இல்லை இப்போ உருட்டுறேன் பாருங்க என்று கத்தியெல்லாம் எடுத்து  வந்து ஹார்ட் வடிவில் சப்பாத்தி உருட்டினார்.தூரமாக இதை பார்த்துக்கொண்டு இருந்த ஜனனி, இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க என்றார்.  அதே தான் நாங்களும் சொல்கிறோம், இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோங்க.

பொன்னம்பலம் பாடினாலும், ஆடினாலும் மட்டுமே கேமராவில் காட்டுகிறார்கள். இந்த முறை சென்றாயனுக்காக ஒரு பாடலை பாடினார். அவரே எழுதிய பாடல் போல.. வரிகளுக்கு பல அர்த்தங்கள் இருப்பதாக விளக்கினார். எங்கே யார் பாடினாலும் ஃபிரேமுக்குள் வந்து விடுகிறார் அனந்த் வைத்தியாநாதன்.

மகத் கேமரா முன் தனது குடும்பதை மிஸ் பண்ணுவதாக கூறினார். உடனே கேமரா முன் வந்த மும்தாஜ், மகத்தை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள் என்று சர்டிபிகேட் கொடுத்தார். மகத் பிக்பாஸ் வீட்டில் நடந்துகொள்ளும் முறை சிம்புவை அடிக்கடி நினைவுப்புடுத்துகிறது அவரும் சிம்புவும் நெருங்கிய நண்பர்களும் கூட.

தீடிரென்று அனைவரும் ஒரு இடத்தில் கூடினார்கள். ஆம்.. இன்னைக்கு சம்பவம் இருக்கு என்ற ஆர்வம் கூடியது  வைஷ்ணவி கண்கலங்கி அமர்ந்து கொண்டு இருந்தார். அதற்கு டேனிதான் காரணம் என்று ரம்யா உறக்க கூறினார். அவர் அப்படியெல்லாம் கத்த மாட்டாரே என்று தோன்றாமல் இல்லை. உடனே தலைவி ஜனனி அவரை ஓரமாக அழைத்து சென்றுவிட்டார். அட.. இரும்மா இப்ப தான் அவங்களலாம் கேமரால காமிக்கிறாங்க என்று ஜனனியிடம் சொல்ல வேண்டும் என தோன்றியது. டேனி வைஷ்ணவியிடம் சென்று என்ன ஆச்சி டா… என்று பதட்டதுடன் கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் நட்பும் தெரிந்தது. சரி இனிமே நான் கலாய்க்க மாட்டேன் என்று டேனி கூறியதும்… உடைந்து சிரித்தார் வைஷ்ணவி. பிராங்கா.. என்று அசடு வழிந்தார் டேனி. பார்வையாளர்களுக்கு பச்.. வெறும் பிராங்க் தானா என்று தோன்றியிருக்கும்.

இது தான் சமயம் என்று “தட்டி விடு தட்டி விடு” என்றார் யாஷிக்கா. 20ஸ் கிட்ஸ்களிடம் அதிகம் புழங்கும் வித்யாசமான கலாய் வாக்கியங்களில் “தட்டி விடு”க்கு முக்கிய இடம் உண்டு.

பின் தனியாக இருந்த சென்றாயனை “ஆடம் டீசிங்” செய்து கொண்டு இருந்தார்கள் ஐஸ்வர்யாவும் , யாஷிக்காவும். சென்றாயன் திரும்பி கோபப்பட மாட்டார் என்ற தைரியத்தில் இப்படி செய்கிறார்கள் என்பது தெரிந்தது. சென்றாயன் அவர்கள் செய்யும் சேட்டைகளை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தார்.

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

இந்த வார லக்சரி பட்ஜட்டுக்கான 3வது டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்தனர். ஒவ்வொரு அணியிலும் 7 பேர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த கதையை எழுத வேண்டும். மற்ற அணியினர் அது யார் கதை என்று கண்டுபிடிக்க வேண்டும். பிக்பாஸ் எதையோ எதிர்பார்க்கிறார்.. ஆனால் இந்த 16 பேரும் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது தான் நிஜம். இந்த முறை யாஷிக்கா ஒரு அணிக்கும், டேனி ஒரு அணிக்கும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்கள். மும்தாஜ் தலைவி ஜனனிக்கு உதவி செய்யும் பொறுப்பை பெற்றார்.

அனைவரும் தங்களது கதைகளை எழுதினார்கள். டேனி கதை எழுதும் போது இருந்த பொஷிஷன் அதகளம். நித்யாவும், பாலாஜியும் ஒரே அணியில் இருந்தனர். இதான் சாக்கு என்று மன்னிப்பாயா.. என பாட தொடங்கினார் பாலாஜி. அவருடன் சேர்நது ஐஸ்வர்யாவும், யாஷிக்காவும் பாடினார்கள். அட, பர்ஃபாம் பண்ண விட மாட்றாங்க என்று நொந்துக்கொண்டார் பாலாஜி.

தங்கள் கதையை பாக்சில் போட வரும் போது, யாரே ஒருவர் சந்தேகம் கேட்க.. அதெல்லாம் வேணாம் ஆன ஆதார் கார்ட் மட்டும் கண்டிப்பா வேணும் என்றார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டையும் விட்டுவைக்கவில்லை ஆதார் அட்ராசிட்டி.

ஜனனி உடைந்த மொழியில் எழுதப்பட்ட கதை ஒன்றை படித்துக்காட்டினார். அதிலேயே அந்த கதை ஐஸ்வர்யா உடையது தான் என்பது தெரிந்தது. கதையை முழுவதுமாக கேட்காமால் மொழியை கிண்டல் செய்து சிரிக்க தொடங்கினர் போட்டியாளர்கள். நடுவே யாஷிக்கா குறிக்கிட்டு, “ஏதோ சீரியசான கதை மாதிரி இருக்கு கொஞ்சம் சிரிக்காம கேளுங்க” என்றார். நிஜமாகவே அவரை பார்க்க கெத்தாக தான் இருந்தது. எப்போதும் யாஷிக்கா அது போன்ற குரலை உயர்த்துவது இல்லை என்பதும் அதற்கு காரணம். அவரது குரல் சுருதி ஹாசனை நினைவூட்டுவதால், 7ம் அறிவு படத்தில் "தமிழ்ல பேசுறத கிண்டல் பண்ண வாய்லயே குத்துவேன்" என்று பொங்கும் சுருதி கண் முன் வந்தார்.

பின் ஐஸ்ர்யாவின் கதை முடிந்தது. லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் நடக்கும் கதை தான். அதை அந்த மொழி நடையில் கேட்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. மும்தாஜ் அழுதே விட்டார். பாலாஜி, ரித்விகாவும் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது.

பாலாஜி மீண்டும் கிட்சன் பக்கம். நித்யாவிற்கு ஆப்பிள் வெட்டிக்கொடுக்கிறார். அனைவரும் கலாயக்கிறார்கள். இன்னும் இதே போன்ற காட்சிகளை தினம் தினம் பார்க்க நேரிடும் என்பதால் அதை பற்றி இப்போதே பெரிதாக பேசாமல் இருப்பது நமக்கு நல்லது.

டாஸ்க் பெல் அடித்ததும் சிலர் லேட்டாக லிவிங் ரூமிற்கு வருவதாக ஜனனி கூறினார். உடனே மும்தாஜும் மமதியும் இருக்கட்டும்.. அவர்கள் இது போன்று தொடர்ந்து செய்தால் கிடைக்கும் தண்டனைக்கு பிறகு மாறிவிடுவார்கள் என்றனர். சில நொடிகளில் பிக்பாஸ் அதே காரணத்தை கூறி மொத்தமாக கிடைத்த 2200 மதிப்பெண்களில் 1100ஐ குறைத்தார். அதில் லேட்டாக வருபவர்கள் லிஸ்டில் மமதியும், மும்தாஜும் கூட இடம் பிடித்து இருந்தனர்.

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து சென்றாயனுக்கு ஹேர் ஸ்ட்ரைடனிங் செய்த காட்சி கடந்த 4 நாட்களில் நடந்த சிறப்பான ஒன்று. அவரை விடப்பிடியாக கட்டிப்பிடித்து உட்காரவைத்து சிகை அலங்காரம் செய்தனர். முதலில் பயந்தாலும் ரிசல்ட்டை பார்த்து சந்தோஷப்பட்டார் சென்றாயன். பின் உடைகளை மாற்றிக்கொண்டு மும்தாஜுடன் நடனமாடினார்.

பின் கிட்சனில் ஷாரிக்கும் மும்தாஜும் பேசிக்கொண்டு இருக்கும் போது மும்தாஜ் திடீரென அழ தொடங்கி விட்டார். ஷாரிக் தனது சொந்தக்கார பையனை நினைப்படுத்துவதாக கூறினார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் கூடி அவரை சமாதானப்படுத்தியதும் செம காட்சி. பிக்பாஸ் வீடில்லை விக்ரமன் படம் போல இருந்தது.

ஆமாம்.. இந்த சீனையா பிரேமோவில் ஏதோ பெரிய கிரைம் நடந்து விட்டது போல காட்டினார்கள் என்று வியப்பாக இருந்தது. பிக்பாஸ் அண்ட் கோவின் எடிட்டிங் வேலை செம.

#BiggBoss Day 4: இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க!

நித்யாவிடம் சென்று பாலாஜிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்க சொன்னார் சென்றாயன். இந்த முறை ஏன் பாலாஜி தனக்கு வேண்டாம் என நித்யா கூறிய காரணங்கள் எல்லாம் நியாயமாகப்பட்டது. பின் இது போன்ற பிரச்னை எல்லாம் சிட்டில தான் நடக்குது, கிராமத்துல இல்ல என்று பழமை படிக்கட்டில் ஏறிய சென்றாயனை தடுத்தார் நித்யா. பின் அதெல்லாம் இல்லை, கிராமத்துல இருக்குற பொண்ணுங்க அடிவாங்கிட்டு அமைதியா இருப்பாங்க என்றார். நித்யாவும் சென்றாயனும் குடும்ப வாழ்க்கை குறித்த புரிதலின் இரு துருவங்கள் போல இருந்தனர்.

4வது லக்சரி பட்ஜெட் டாஸ்க்கும் இன்றே தொடங்கியது. போட்டியாளர்கள் இதற்காக 8 ஜோடிகளாக பிரிந்தனர். அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டது. முதல் ஜோடியாக யாஷிக்காவும், டேனியும் வெங்காயத்தை நறுக்க தொடங்கினார். எப்போதும் பஞ்சுடன் முடியும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று ஏனோ டப்’பென்று முடிந்தது. அதே தான் இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோங்க பிக்பாஸ்..

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP