#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

பிக்பாஸ் பார்க்க 5 நிமிடம் முன்பே டி.வி. முன் அமர்வது எவ்வளவு கடினமான ஒன்று.. இன்னும் சரவணன் மீனாட்சி முடியவில்லை. 4 வருடங்களுக்கு முன் அழ தொடங்கிய மீனாட்சி நேற்றைய எபிசோடிலும் அழுதுக்கொண்டு இருக்கிறார். எப்படியோ அந்த 5 நிமிடங்களை வெற்றிகரமாக கடந்து பிக்பாஸ் தொடங்குவதற்குள்… உஃப்ப்.
 | 

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

பிக்பாஸ் பார்க்க 5 நிமிடம் முன்பே டி.வி. முன் அமர்வது எவ்வளவு கடினமான ஒன்று.. இன்னும் சரவணன் மீனாட்சி முடியவில்லை. 4 வருடங்களுக்கு முன் அழ தொடங்கிய மீனாட்சி நேற்றைய எபிசோடிலும் அழுதுக்கொண்டு இருக்கிறார். எப்படியோ அந்த 5 நிமிடங்களை வெற்றிகரமாக கடந்து பிக்பாஸ் தொடங்குவதற்குள்… உஃப்ப்.

பிக்பாஸ் வீட்டில் விடிவதற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தார் அனந்த் வைத்தியநாதன். பாவமாக தான் இருக்கிறது அவரை பார்க்க. சொடக்கு மேல சொடக்க போடுது பாட்டுக்கு நடனமாடிக்கொண்டே நேற்றைய நாளை தொடங்கினர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

ஃபிரஷ்ஷாகி கொண்டு இருந்த மற்ற போட்டியாளர்களிடம் மிட்நைட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார் பொன்னம்பலம். பாத்ரூம் பிசியாக இருந்ததால் குப்பை தொட்டியை அவசரத்திற்கு யூஸ் பண்ண நினைத்தாராம். நல்ல வேலையாக ஏதோ ஒரு குரல் கேட்க அந்த யோசனையில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். வீ ஃபீல் ரியலி சாரி ஃபார் யூ பிக்பாஸ்..

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

பின் ஐஸ்வர்யாவையும்- ஷாரிக்கையும் சேர்த்து வைக்கும் வேலையை தொடங்கினர் ஜனனி அன்ட் கோ. சும்மாக்காசம் காதலிக்கிறோம் என்று அவர்கள் சொல்லும் வரை இந்த வேலையில் இருந்து அவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. நீங்க ரெண்டு பேரும் அப்படி பண்ணிங்க.. இப்படி பண்ணிங்க என்று மற்றவர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். குறிக்கிட்ட ஐஸ்வர்யா, நீங்க எல்லாரும் கொஞ்சம் ஜாஸ்தியா யோசிக்கிறீங்க என்றார். அவரது உடைந்த தமிழிலும் கூட அந்த வாக்கியம் கொஞ்சம் ஹெவியாக தான் இருந்தது. ஆனால் யோசிப்பவர்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் யோசித்தால் என்ன? ஏதோ ரிலீசானதே தெரியாத படத்தின் கல்லூரி காட்சி போல யோசிக்கிறார்கள்.

வேலை செய்து கொண்டே பிக்பாசுடன் ரொமான்ஸ் செய்ய தொடங்கினார் ஐஸ்வர்யா. முந்தைய நாளே உறங்குவதற்கு முன்பு பிக்பாஸிடம் “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்பது போல பேசிக்கொண்டு இருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்றும் பேசினார். இவ்வளவு செக்ஸியான ஹவுஸ்மேட் பார்திருக்கீங்கலா என்று தற்பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார். நடுவுல் வந்த மும்தாஜ்க்கும் பிக்பாஸ் உடனான தனது கனவு திருமண வாழ்க்கையில் ஒரு சீன் இருக்கிறது என்று கூறினார். வீட்டில் இருக்கும் குழந்தை ஏதோ கதையை யோசித்து சொல்ல அதற்கு சிரித்து கொண்டே பதில் அளிப்பது போல எதையே கடமைக்கு கூறிவிட்டு சென்றார் மும்தாஜ்.

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

அதன் பின் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொண்டு கேமராவை பார்த்து முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. முத்தக்காட்சிகள் எல்லாம் முடிந்ததும், தன் முன் இருக்கும் கேமரா பின்  இருப்பவர் நான் அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டு இருப்பார் என்று கூறினார். உடனே அந்த கேமரா மனிதர் என்ன நினைத்தாரோ கேமரா தலையை கீழே குனிந்துக்கொண்டார்.(சேம் ஃபீலிங்).

அனந்த் வைத்தியநாதன் பாலாஜியிடம் பேசிக்கொண்டு இருந்தார். நித்யாவுடன் என்ன தான் பிரச்னை என்பது பற்றி இருந்தது அவர்களது உரையாடல். அதில் சில பெர்சனல் விஷயங்களும் பகிரப்பட்டது. அதையெல்லாம் இத்தனை கேமரா முன் சொல்ல வேண்டுமா என்று பாலாஜி யோசித்திருக்கலாம். அதைப்பற்றி பெரிதாக விவாதிக்காமல் முடித்துவிட்டார் அனந்த். அதுவும் சரிதான்.

பின் இன்றைக்கான டாஸ்ட் தொடங்கியது. போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிய வேண்டும். ஒரு அணியில் இருப்பவர்கள் கதை சொல்ல அதில் யாருடைய கதை பொய் என்று மற்றவர்கள் கண்டறிய வேண்டும். கி.மு., கி.பி.யில் சிவகார்த்திகேயன் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது கொடுக்கப்பட்ட டாஸ்க் இது. தூசி தட்டி மீண்டும் கொண்டு வந்து இருக்கிறார் பிக்பாஸ்.

டாஸ்க்கில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் அனைவரும் லிவிங் ரூமில் வந்து அமர்ந்தனர். ரொம்ப நேரமாக காணாமல் போயிருந்த யாஷிக்கா அப்போது தான் கண்ணில் பட்டார். இன்றைய நிகழ்ச்சியில் யாஷிக்கா கேமரா முன் அதிகமாக வரவில்லை.

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

நேற்றே சொல்லப்பட்ட ரூல்சை மீண்டும் படித்தார் ஜனனி. இதுபோன்ற சமயங்களில் தலைவி என்ற சொல் வந்தாலே ஜனனியின் முகத்தில் மலர்ச்சியை காண முடிகிறது. இவ்வளவு வெளிப்படையாவா மா.. சந்தோஷப்படுறது?..

நித்யா முதலாவதாக வந்து கதை கூறினார். ஓகே ஓகே படத்தில் உதயநிதி சொல்லும் பட்டர்ஃப்ளை கதை போல இருந்தது. ஒரு பெண் பட்டாம்பூச்சி தனது குட்டியை தன்னை போல அழகான பட்டாம்பூச்சியாக வளர்த்தெடுக்க நினைத்துக்கொண்டு இருக்கிறது, என தன் கதையையே கொஞ்சம் மாற்றி சொன்னார். அவர் கதை சொல்லும் போது மமதியும் ரம்யாயும் ஏன் அத்தனை ஃபீலிங்கோடு கேட்டார்கள் என்று தெரியவில்லை.

அடுத்ததாக பாலாஜி வந்து கதை கூறினார். அவரும் தனது கதையை தான் கூறினார். நடுவில் நித்யா தனக்கு முக்கியம் என்பது சில விஷயங்களையும் அந்த கதையில் இணைத்துக்கொண்டார். மற்றவர்கள் சொன்ன கதைகள் ஒளிப்பரப்பாகவில்லை.

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

அடுத்து எல்லோரும் எதிர்பார்த்த அந்த சீன் வந்துவிட்டது. நித்யாவும், மகத்தும் கிச்சனில் சமைத்துக்கொண்டு இருக்க, பொறியலில் என்ன என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பது பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர். கேரட் பெரறியலில் வெங்காயம் போடுங்க என்று பாலாஜி கேட்க மற்ற போட்டியாளர்களும் அதனை வழிமொழிந்தனர். உடனே நித்யா இல்ல வேணாம் என்று முரண்டுபிடித்தார். பாலாஜி சொல்லி சொல்லி பார்த்துவிட்டு பின் வெளியே சென்று விட்டார். பின்னர் மகத் பொறுமையாக எடுத்துக்கூறினார். அதற்கும் நித்யா உடன்பட்டு வரவில்லை. சாப்பாடு மேல சத்தியமா எனக்கு வெங்காயம் போட்ட பிடிக்கும் என்றும் மகத் சொல்லி பார்த்தார். நித்யா அப்போதும் சிரித்துக்கொண்டே முடியாது என்று கூறிவிட்டார். எப்போதும் விளையாட்டாக சுற்றிக்கொண்டே இருக்கும் ஐஸ்வர்யா கூட சொல்லி சொல்லி பார்த்து, “சரி இன்று நான் சாப்பிட போவதில்லை” என்று கூறி  அங்கிருந்து நகர்ந்தார்.

பின் மும்தாஜ், வெங்காயம் சேர்த்தால் பொறியல் இன்னும் அதிகமாக எல்லோருக்கும் கிடைக்கும் என்று கூறினார். நாளைக்கு செய்யும் பொறியலில்  வெங்காயம் சேர்கிறேன். ஆனால் இப்போது வேண்டாம் என்றார். மேடம் உங்களுக்கு என்ன தான் பிரச்னை என்று கேட்க தோன்றியது. ஆனால் மற்ற போட்டியாளர்கள் இதனை பெரிதாக ஆக்க கூடாது என்று அடக்கி வாசித்தனர்.

பின் மும்தாஜ், பாலாஜியிடம் சென்று நித்யா பற்றி பேசினார். அப்போது பெண்களை எப்படி சமானதானப்படுத்துவது என்று கொஞ்சம் அனுபவ ரீதியிலாக கூறினார் மும்தாஜ் . பாலாஜியை அந்த சம்பவம் மிகவும் பாதிப்படைய செய்து விட்டது போல அழுகையை அடுக்கிகொண்டே பேசினார்.  

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது வெளியே தனியாக அமர்ந்து கொண்டு இருந்த பாலாஜிக்கு சாப்பாடு எடுத்து வந்தார் சென்றாயன். நான் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியவிட்டார். சென்றாயனும் தன் பங்கிற்கு கணவன்-மனைவிக்குள் இருக்கும் பிரச்னை குறித்து கேட்க, சாப்பிடும் போது சாக்கடை பற்றி ஏன் பேசுற என்று மட்டும் கூறிவிட்டு பேச்சை நிறுத்திக்கொண்டார் பாலாஜி

யார் இதனைப்பற்றி பேசினாலும் பாலாஜி அதனை பெரிதாக ஆக்க வேண்டாம் என்று நினைத்து சுருக்கமாக முடித்துக்கொள்கிறார். அது நல்லதும் கூட. ஆனால் ஒவ்வொரு உரையாடலின் போதும் அழுகையை கட்டுப்படுத்த பெருமூச்சி விடுகிறார்.

#BiggBoss Day 3:  வெங்காயத்துக்காக போரா? அக்கப்போராக அல்லவா இருக்கிறது..

மும்தாஜ் தொடங்கி சென்றாயன் வரை பாலாஜி-நித்யாவை சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். நித்யா சமையல் நல்லா இருக்கு, நீங்க சாப்பிட்டீங்களானு கேட்டாங்க. என்று அவ்வபோது கூறிவிட்டு செல்கின்றனர். பின் நித்யா அனைவரையும் கூப்பிட்டு குக்கிங் டீமில் தன்னால் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை என்று கூறினார். அவரிடம் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் இல்லை. இதில் மும்தாஜ் பக்கமே முழு நியாயமும் இருந்தது. ஆனால் ஜனனி இதில் தலைவியாக முடிவெடுக்க சற்று தடுமாறினார்.

இந்த சண்டை  நீண்ட நேரமாக நடந்தது. பின் மும்தாஜ், மமதி என அனைவரும் நித்யாவிடம் சென்று பேச முயற்சித்தனர். ஆனால் நித்யா அவர்கள் பேசுவதைக்கூட கேட்க தயாராக இருக்கவில்லை. நடுவில் இந்த சண்டையை அனந்த் கொஞசம் முதிர்ச்சியோடு கையாண்டார்.
பின் லக்சரி பட்ஜட் டாஸ்கில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த வெங்காய சண்டையில் பலர் வீட்டில் இருக்கிறார்களா என்று கூட தெரியமால் போனது. இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டு இருக்க பொன்னம்பலம் ஓரமாக படுத்து கண் அசந்தார். ச்ச இவர போய் இத்தனை நாளா வில்லனா காட்டிடாங்ளே என்று தோன்றியது.
கடைசியாக “திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்” என்று பாலாஜி பாடிக்கொண்டு இருப்பதோடு நிகழ்ச்சி முடிந்தது.

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP