#BiggBoss Day 19: அழ வைக்கதானே அன்புடன் டாஸ்க்?

நினைத்தப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதால் முக்கியமான ‘மிஸ் யூ’ வஸ்துவை கையில் எடுத்துக் கொண்டார் பிக்பாஸ். அவர் நினைத்தது போலவே போட்டியாளர்களும் நேற்று கச்சிதமாக செய்ய வேண்டியதை செய்தனர்.
 | 

#BiggBoss Day 19: அழ வைக்கதானே அன்புடன் டாஸ்க்?

நினைத்தப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதால் முக்கியமான ‘மிஸ் யூ’ வஸ்துவை கையில் எடுத்துக் கொண்டார் பிக்பாஸ். அவர் நினைத்தது போலவே போட்டியாளர்களும் நேற்று கச்சிதமாக செய்ய வேண்டியதை செய்தனர்.

சுப்பம்மா சுப்பம்மா பாடலோடு தொடங்கியது நேற்றைய நிகழ்ச்சி. மும்தாஜின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இந்த பாடலாம். முதல் முறையாக மும்தாஜ் காலையில் எழுந்து நடனம் ஆடினார். அந்த பாட்டுக்கு லைட்டாக நடனமாடி விட்டு சென்ற மும்தாஜை பார்க்கும் போது 90ஸ் கிட்ஸ்களுக்கு  'நமக்கு வயதாகி விட்டதோ' என்ற எண்ணம் வந்திருக்கும்.

காலையில் சாப்பிட்டுக்கொண்டே தனது மனைவெியுடன் (தனியாக தான) கேமரா மூலம் பேசிக்கொண்டு இருந்தார் சென்றாயன். டேனி குழம்பு வைத்துக்கொடுத்தது, தோசை சுட்டுக்கொடுத்தது பற்றியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்.

போட்டியாளர்கள் தண்ணீல கண்டம் டாஸ்க்கையும், மும்தாஜ் தனது சீக்ரட் டாஸ்க்கையும் சரியாக செய்ததல் 4 மேகி பாக்கெட்களை பரிசாக கொடுப்பதாக அறிவித்தார் பிக்பாஸ். 16 பேர் 4 பாக்கெட் எப்படி பிரித்து சாப்பிடுவார்கள்?.. அதற்கே செம குஷியானார்கள் போட்டியாளர்கள்.

நேற்றைய முதல் கிட்சன் சண்டைக்கு காரணம் ஐஸ்வர்யா. கொடுத்த வேலையை பாதியிலேயே விட்டு செல்கிறார் என டேனியும், பாலாஜியும் தலைவியிடம் புகார் கூறிக்கொண்டு இருந்தனர். அந்த வாக்குவாதத்தின் நடுவில் அவங்கள தொடக்கத்துல இருந்து குழந்தை மாதிரி நடத்துனீங்க அதுனால தான் இப்போ இப்படி பண்றாங்க என்று கூறினார் பாலாஜி.  சட்டென கோபமான ஐஸ்வர்யா, நான் குழந்தை இல்ல.. நீங்க எல்லாரும் அப்படி நடத்துனீங்கனா அதுக்க நான் எதுவும் பண்ண முடியாது. நான் 23 வயசு பொண்ணு.. என்று கூறிவிட்டு சென்றார். உடனே அவரது உண்மையான வயது என்ன என்று ஆராய்ச்சிகள் தொடங்கி, விக்கிபீடியா ஸ்கிரீன் ஷாட்கள் பறந்திருக்கனுமே.. வயசா முக்கியம்.

பின் பாலாஜி பேசியது பற்றி யாஷிக்காவிடம் கூறி அழுதார் ஐஸ்வர்யா. சென்ற சீசனில் ஓவியா கூட தனக்கு கொடுத்த வேலைகளை சரியாக செய்யவில்லை. ஆனால் நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று கெத்துக்காட்டி கொண்டு இருந்தார். தப்பு தான் என்றாலும் அதையும் தான் ரசித்துக்கொண்டு இருந்தன் ஆர்மி மக்கள். இந்த சீசனில் ஓவியா இடத்தை நிரப்புவார் என்ற நினைத்த ஐஸ்வர்யா பொசுக்கென்று அழுதால் எப்படி?

வழக்கமான லக்சரி பொருட்களுக்கான புள்ளிகளை விட அதிகமாக கொடுக்கப்பட்டது. பொருட்கள் தேர்வு செய்யும்போது மட்டன் எடுக்கலமா.. கொத்துக்கறி வாங்கலாமா என்ற குழுப்பம். பாதி பேருக்கு கொத்துக்கறி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

2வது கிட்சன் சண்டையை தொடக்கி வைத்தார் விஷ பாட்டில்.. ச்ச ஜனனி. காபி கப்பில் முட்டை வாடை வருவதாக கூறினார். நமக்கு மட்டும் தான் வருதா.. என்ற சந்தேகத்தில் மற்றவர்களிடமும் கப்பை கொடுத்து உறுதிப்படுத்திக்கொண்டார். கப்பை சரியாக கழுவாமல் விட்டது சென்றாயன். அவரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னால், அதற்கு பதில் சொல்லாமல் கப்பை ஏன்டா எடுத்த என்று மகத்திடம் சண்டைக்கு சென்றார். சும்மாவே கத்தும் மகத் சென்றாயன் தன்னை பார்த்து ஓரு கேள்வி கேட்டதும் தாம் தூம் என கத்திதொடங்கி விட்டார்.

சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்த மகத் திடீரென சென்றாயனை கிறுக்கன், கிறுக்கன் என்று திட்டினார். சென்றாயன் சூடாக என்கிட்ட பேசாதடா என்று கோபப்பட்டார். அவரை மும்தாஜ் வெளியே அழைத்து சென்று சமாதானப்படுத்தினார். மும்தாஜை தவிர மற்றவர்கள் அனைவரும் மகத்தை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

இந்த பிரச்னைக்கு நடுவில் மகத்துக்கு அட்வைஸ் செய்ய சென்ற வைஷ்ணவியை அழைத்து மற்ற அனைவரும் அட்வைஸ் செய்து கொண்டு இருந்தனர். எத்தனை நாள் காண்டோ பேசிக்கொண்டு இருக்கும் போதே வைஷ்ணவியின் காலை ஹீல்ஸ் செருப்பால் மிதித்து விட்டார் ஜனனி. வீட்ல இருக்கும் போது கூட ஹீல்ஸ் போட்டுட்டு தான் இருப்பியா என்று கேட்டார் பாலாஜி. என்னதான் இருந்தாலும் அவங்க ஹீரோயினாச்சே பாலாஜி..

நான்கு பேருக்கு நடுவில் நடந்த பிரச்னை வீட்டில் இருந்த அனைவரையும் சோர்வாக்கி விட்டதோ என்னவோ தலைவி உட்பட வீட்டில் பாதி பேர் தூங்கி விட்டனர். தலைவியை கன்பஷன் அறைக்கு அழைத்து எச்சரித்தார் பிக்பாஸ். இனி தலைவி தூங்கினால் அப்போதே தலைவி பொறுப்பு பறிப்போகும் என்றும், இனி தலைவியாக முடியாது என்றும் கூறி அனுப்பினார். இதனை மற்ற போட்டியாளர்களிடம்கூறினார் வைஷ்ணவி. இனி வைஷ்ணவி நன்றாக பகலில் தூங்க வேண்டும்என்று மற்ற போட்டியாளர்கள் தாலாட்டு பாடினால் கூட அச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் இனி பகலில் தூங்குபவர்கள் நேரடியாக எவிக்ஷனுக்கு தேர்வாகி விடுவார்கள் என்பதை சொல்லி அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ். இருந்தாலும் ரொம்ப ஆபிசரா இருக்காரு அந்த மனுசன்.

பின் மற்றவர்கள் தன் மீது வைத்திருக்கும் அபிப்ராயத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக சென்றாயனிடம் சென்று பேசினார் மகத். சென்றாயனும் மகத்துக்கு அட்வைஸ் செய்தார். உனக்கு கோபம் அதிகமா வருது நீ டாக்டர பாத்துக்க.. நீவேற நான் வேற கொஞ்ச நாள் பேசாமல் இருக்கலாம் என்றார் சென்றாயன். அதற்கும் கத்தி விட்டு சென்றார் மகத்.பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும் குரல் மகத்துடையது மட்டுதான்.

வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நேற்று செடி ஒன்று கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் சரியாக பராமரிக்க வேண்டும். எவிக்டாகி வெளியேறுபர்கள் வீட்டில் உள்ள ஒருவரிடம் அந்த செடியை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் அவர் தன்னுடைய செடியையும் சேர்த்து அதனையும் பராமரிக்க வேண்டும். நம்ம பிக்பாஸுக்குள்ளையும் ஏதோ இருக்கு என்பது போல இருந்தது.  போட்டியாளர்களும் அந்தயோசனையில் நெகிழ்ந்து தான் போயினர். செடிகளை ஒவ்வொருவரும் எடுத்த போது, நித்யாவும் பாலாஜியும் சியர்ஸ் என்றும் அணைத்துக்கொண்டனர். பாரேன்..

அடுத்தாக பிக்பாஸ் தனது வேலையை ஆரம்பித்தார். என்ன சண்ட போட்டாலாம் திரும்ப கூடிக்கிறாங்க, விறுவிறுப்பே இல்லை.. என்ன பண்ணலாம் என்று யோசித்திருப்பார் போல. சென்ற சீசனில் ஹிட்டடித்த கான்செப்டை நேற்று கொண்டு வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யாரை மிஸ் செய்கிறார்கள் என்பதை கூறிவிட்டு அவர்களுக்கு ஹார்ட்டை  அனுப்ப வேண்டும். இந்த டாஸ்கிற்கு அன்புடன் என பெயர்.

ஒவ்வொருவரும் தங்களது கதைகளை கூறிவிட்டு சென்றனர். தங்களது கதையை விட மற்றவர்களின் கதையை கேட்டதும் அழத்தொடங்கினர் போட்டியாளர்கள். எப்போதும் ஜாலியாக சுற்றி த்திரியும் டேனியும் தனது தந்தை பற்றி கூறும் போது அழுதார்.

இதில் நித்யாவும் பாலாஜியும் தங்களது மகள் போஷிக்காவுக்கு அந்த ஹார்ட்டை அனுப்பினர். நடுவில் நித்யாவுக்கு நன்றி தெரிவித்தார் பாலாஜி. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே தங்களது இயல்பான தவறுகள் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பதை அறிந்ததாக கூறினர்.

ஒவ்வொருவரும் தங்களது கதையை கூறிமுடித்த பின் ஸ்டோர் ரூம் பெல் அடித்தது. அங்கு போட்டியாளர்களுக்காக பிரியாணி அனுப்பப்பட்டு இருந்தது. அழுதுக்கொண்டு இருந்த போட்டியாளர்கள் அனைவரும் பிரியாணியை பார்த்ததும் உற்சாகமடைந்தனர். அந்த காட்சிக்காகவே பிரியாணியை தேசிய உணவாக அறிவிக்கலாம். ரம்சானோ, பிக்பாஸ் வீடோ மக்களை இணைக்கும் சக்தி பிரியாணிக்கு இருக்கிறது.

பிரியாணியின் கூடவே மும்தாஜுக்கு அவரது அண்ணன் அனுப்பிய  பிறந்தநாள் வாழ்த்து செய்தியும் வந்திருந்தது. அதை படித்த பெண்கள் ஒட்டுமொத்தமாக ‘வி லைவ் யூ பய்யா’ என்று கேமரா முன்பு கூறியது அழகான காட்சி.

இவ்வாறு நெகிழ்ச்சியான தருணங்களுடன் நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. இன்று சனிக்கிழமை எபிசோட்.. கமல் எந்த பிரச்னையை பற்றி பேச போகிறார், இந்த வார குறும் படம் யாருக்கு,.. பார்ப்போம்..

 போட்டியாளர்கள் அழுதது, செடியை பார்த்து நெகிழ்ந்தது எல்லாம் சரி தான்.. ஆனால் இந்த அன்புடன் டாஸ்க் தொடங்கும் போதே அங்கே டிஷ்ஷு பேப்பர் வைத்திருந்தார்கள். அழ வைக்க ஒரு டாஸ்க்கை உருவாக்குவது எல்லாம்.. பெரிய மனசு வேணும்!

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP