#BiggBoss Day 17: எல்லாத்துக்கும் இந்த மகத் பையன் தான் காரணம்!

நேற்றும் டேங்கில் இருக்கும் நீரை சேமிக்கும் ‘தண்ணீல கண்டம்’ டாஸ்க் தொடர்ந்தது. இந்த டாஸ்க்கின் போது அதிகமாக வாக்குவாதம் நடைபெறுவதாலோ என்னவோ இன்னும் அந்த டாஸ்க் முடிவு பெறவில்லை.
 | 

#BiggBoss Day 17: எல்லாத்துக்கும் இந்த மகத் பையன் தான் காரணம்!

நேற்றும் டேங்கில் இருக்கும் நீரை சேமிக்கும் ‘தண்ணீல கண்டம்’ டாஸ்க் தொடர்ந்தது. இந்த டாஸ்க்கின் போது அதிகமாக வாக்குவாதம் நடைபெறுவதாலோ என்னவோ இன்னும் டாஸ்க் முடிவு பெறவில்லை.

17ம் நாள் காலை, மங்களகரமாக மும்தாஜ் பற்றி ஜனனி குறைக்கூறும் காட்சிகளோடு தொடங்கியது. இப்படிதான் தொடக்கமே அமோக இருக்கனும். ஆனால் தொடக்கம் மட்டும் தான் அந்த உரையாடல் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.

கடந்த சீசனில் மருத்துவ முத்தம் போன்ற காட்சிகள் தான் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டது(நேரம் காரணமாக எடிட் செய்யப்பட்டது என்றும் கூறலாம்). ஆனால் இந்த சீசனில் பிரோமோவில் காட்டப்படும் சீன்கள் கூட நிகழ்ச்சியில் காட்டப்படுவது இல்லை. என்னமோ நடக்கபோகிறது என்று ஆர்வமாக இருந்தால் கடைசியில் அந்த சீனை காட்டாமலேயே நிகழ்ச்சி முடிகிறது. அதே போல நேற்று மும்தாஜும் ஜனனியும் இரவில் பேசிக்கொள்ளும் காட்சிகள் பிரோமோவில் காட்டப்பட்டது ஆனால் நிகழ்ச்சியில் அதனை காலையில் நடந்த உரையாடல் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

தண்ணீல கண்டம் டாஸ்க் மீண்டும் தொடங்கியது. முதல் ஆளாக மகத் ஆங்கிலத்தில் பேசி ஒரு பக்கெட் தண்ணீரை இழந்தார். இது போன்று அவர் தொடர்ந்து செய்தாலும் அதைப்பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஆனால் மற்றவர்கள் செய்து விட்டால் மகத் பேசுவதை காதில் கேட்க முடிவதில்லை.ஆனாலும் தொடர்ந்து யாஷிக்காவிடம் கடலை போட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு காரணம் யாஷிக்காவை பேசவைத்தால் அவர் ஆங்கிலத்தில் பேசிவிடுவாராம். அப்போது, நீங்க அவங்கள பேச வைக்கிறேன்னு நீங்க தான் மாட்டிக்கிறீங்க என்றார் ரித்விகா.

நடுவில் அனந்தை ஆங்கிலத்தில் நலம் விசாரித்து கோட்டை விட்டார் மும்தாஜ். தன்னால் அணியின் டேங்கில் இருந்து தண்ணீர் போவது மும்தாஜை எரிச்சலாக்கியது. இதனை கவனித்த ஜனனி, அவங்க எரிச்சலாவதை வைத்தே நாம விளையாடனும் என்று யாஷிக்காவிடம் கூறினார்.

சமையலறை சண்டை இல்லாமல் பிக்பாஸில் ஒரு எபிசோடையாவது எதிர்பார்க்க முடியுமா? குக்கிங் அணியில் இருக்கும் ஐஸ்வர்யா ஒழுங்காக ஒத்துழைப்பு தருவதில்லை என்று டேனியும், பாலாஜியும் தலைவியிடம் புகார் கூறினர். மேலும் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக ரித்விகாவை குக்கிங் அணியல் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டனர். இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்கும் போது மிகவும் சோர்வாகவும் எரிச்சலாகவும் பதிலளித்தார் ஐஸ்வர்யா. ஷாரிக்குடனான பிரச்னைக்கு பிறகு ஜாலியான ஐஸ்வர்யாவை பார்க்க முடிவதில்லை. அந்த விஷயம் அவரை மிகவும் பாதித்திருப்பது தெரிகிறது.

இந்த பிரச்னைக்கு நடுவே, “நான் எதாவது பேசுவேன், அப்பறமா வந்து இவர் இப்படி பேசுறாரு.. கமல் திட்றானு” என்றார் பாலாஜி. பாத்திய எங்க தலக்கு தில்ல என்பது போல இருந்தது. கமல் முழு எபிசோடுகளையும் பார்ப்பாரா என்பது தெரியவில்லை. அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு நிச்சயமாக அவருக்கு சில முக்கிய காட்சிகளை மட்டும் காட்டுவார்கள். அதில் இந்த காட்சி இடம் பெற்றால் வீக்கெண்டில் நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கும்.

தலைவி பொறுப்பு ஏற்றதில் இருந்து வைஷ்ணவி டிரெஸ்ஸிங்கில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சில நேரங்களில் தூரத்தில் மமதி போல இருக்கிறார்.

இந்த டாஸ்கின் இடைவேளையில் டேங்கில் இருக்கும் நீரை அதிகரித்துக்கொள்ள ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் விதிமுறைகளை படித்தார் ரம்யா. அவர் படிப்பதே பாடுவது போல இருந்தது. அந்த டாஸ்கில் படி ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் நீச்சல் குளத்தில் குதித்து அதில் இருக்கும் ஆங்கில எழுத்துக்களை எடுத்து தனது டீம்மேட்டிடம் கொடுக்க வேண்டும். யார் முதலில் சேவ் வாட்டர் என்று சேர்க்கிறார்களோ அவர்கள் எதிரணியின் டேங்கில் இருந்து 3 பக்கெட் நீரை எடுத்துக்கொள்ளலாம். இந்த டாஸ்கில் மகத்தும் ஷாரிக்கும் மோதினர். கட்டுமஸ்தாக இருக்கும் ஷாரிக்கிற்கு தான் இந்த டாஸ்க் எளிமையாக இருந்தது. மகத் பாதியிலே சோர்ந்து விட்டார். என்ன பேச்சு பேசுன.. இப்போ பேசு என தோன்றியது.

பாலாஜி தனக்கு ஊட்டி விடும் போது தனது தந்தை நியாபகம் வந்ததாக கூறினார் யாஷிக்கா. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிவிட அதை கேட்ட ரித்விகா அதற்காக தண்ணீர் எடுக்கலாமா என்று தலைவியிடம் கேட்டார். அது வாக்கியமே இல்லை என்று மறுத்தார் தலைவி. நடுவில் ஒட்டுக்கேக்க தான் அங்க வந்தியா என ரித்விகாவிடம் கேட்டார் பாலாஜி. உடனே கோபமான ரித்விக்கா காட்டமாக பேசிவிட்டு சென்றார். இதெல்லாம் இருக்கட்டும்.. பாலாஜி ஒட்டுக்கேட்க தான் வந்தியா என்று கேட்டது தவறு என்று அட்வைஸ் செய்தார் மகத் (எல்லாம் நேரம்).

வைஷ்ணவி தன்னிடம் மும்தாஜ் கூறியது பற்றி எதிரணியிடம் பேசிக்கொண்டு இருந்தார். உடனே இப்போ இதுபத்தி அங்க பேசியே ஆகனுமா என்று கத்த தொடங்கினார் மகத். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்வது தவற மற்ற எதையும் மகத் ஏற்றுக்கொள்வதே இல்லை. நொட்டனுமா.. அது இது என ஏகத்துக்கம் தகாத முறையில் பேசினார். உடனே அதனை அனைவரும் கண்டித்தனர். சென்ற வாரமும் மகத் இதையே தான் செய்தார். ஆனால் கமல் அதுப்பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எச்சரித்துவிட்டால் மகத் மாறிவிடுவார். அது நிகழ்ச்சியின் விறுவிறுப்பை குறைத்துவிடும் என்பது கூட பிக்பாஸ் அது பற்றி பேசாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று மகத் பேசுவது எந்த விதத்திலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கவில்லை.

சென்ற சீசனில் பிஷ் யூ உட்பட காயத்திரி  பேசிய சில விஷயங்கள் மட்டுமே சர்ச்சைக்குள்ளானது. ஆனால் இந்த சீசனில் பலர் பேசுவது எல்லாமே சர்ச்சையாக தான் இருக்கிறது.

அடுத்த இடைவேளை டாஸ்க்காக உள்ளே வெளியே எனும் போட்டி நடந்தது. ஒவ்வொருவரும் ஸ்டாவால் உறிஞ்சிய நீரை பக்கெட்டில் நிரப்ப வேண்டும். எந்த அணியின் பக்கெட்டில் அதிகமாக நீர் இருக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெறும்.
ரெடி ஸ்டெடி கோ நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க் போல டாஸ்க்கை கொடுக்கிறார் பிக்பாஸ். இதில் மும்தாஜ் அணியினர் தான் வெற்றி பெற்றனர்.

முன்னரே அதிகமாக தண்ணீரை இழக்க மும்தாஜ் தான் காரணம் என்று அந்த டீமில் இருப்பவர்கள் கடுப்பில் இருந்த நிலையில் பிக்பாஸ் அந்த பிரச்னையில் எண்ணெய் ஊற்றினார். மும்தாஜ்க்கு ரகசிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் படி அவர் அணியின் டேங்கில் இருந்து 1200 புள்ளிகளுக்கு கீழ் தண்ணீரை குறைத்தால் வீட்டிற்கான மொத்த லக்சரி புள்ளிகள் கிடைக்கும்.

அதன் படி ஆங்கிலத்தில் பேசி தண்ணீரை விட்டுக்கொடுக்க வைத்தார். அப்போது அவர்கள் அணிக்குள் நடந்த உரையாடல்களுக்கு நடுவே சென்றாயன் பேச்சுக்கொடுக்க மாட்டுனான்டா என்று மகத்தும் டேனியும் எகிறினர். உடனே அறிவே இல்லையா உனக்கு என ஜனனி சென்றாயனை திட்டினார். ஒருத்தர் கிடைத்தால் போதுமே ஒட்டுமொத்தமாக ரவுண்டு கட்டுவீர்கள் என்பதை நிரூபித்தார்கள் போட்டியாளர்கள். அதுவும் நாட்டிலும் பிக்பாஸ் வீட்டிலும் சென்றாயன்கள் பேசுவதை யாரும் விரும்புவதும் இல்லை. அனுமதிப்பதும் இல்லை.

அடுத்தாக தண்ணீரை வீணடிக்க பாலாஜியை பயன்படுத்திக்கொண்டார் மும்தாஜ். கொசு நிறைய இருக்கு கொசு மருந்து அடிங்க என்று பாலாஜியிடம் கேட்டார். அவரும் வந்து மருந்தை அடிக்க முகத்தில் பட்டுவிட்டது என கொஞ்சம் தண்ணீரை இழக்க வைத்தார். உடனே டென்ஷனான ஐஸ்வர்யா சென்ஸ் இல்லையா உனக்கு என்று பாலாஜியை கடிந்தார். இதனை பெரிதாக்காமல் நகர்ந்தார் பாலாஜி.
அடுத்ததாக முகம் கழுவ செல்வதாக கூறிவிட்டு மைக் இல்லாமல் பாத்ரூமில் தவளை இருக்கிறது என்று ஆங்கிலந்தில் கத்திக்கொண்டே வந்தார் மும்தாஜ்.. மைக்கிற்கும் ஆங்கிலத்திற்கும் சேர்ந்து நீர் போனது. அப்போது ரித்விக்காவிற்கு மும்தாஜ் மீது கொஞ்சமாக டவுட் வந்துவிட்டது. ஆனாலும் எப்படியோ தனது ரகசிய டாஸ்க்கை முடித்து கேமரா முன் கூறினார் மும்தாஜ்.

இந்த டாஸ்க்கில் முழு கவனத்தையும் செலுத்துவதாலோ என்னவோ பெரிதாக வீட்டில் விறுவிறுப்பில்லாமல் போகிறது. இன்றைக்காவது இந்த டாஸ்க்கை பிக்பாஸ் முடித்து வைக்க வேண்டும்.

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP