#BiggBoss Day 16: கிளாஸ் லீடர் வைஷ்ணவி, புவர் ஸ்டூடெண்ட் மகத்

பழகிக்கலாம் பாடலுடன் தொடங்கியது நேற்றைய நாள். பாட்டுக்கேற்ற மாதிரி இனியாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பழக வேண்டும்.
 | 

#BiggBoss Day 16: கிளாஸ் லீடர் வைஷ்ணவி, புவர் ஸ்டூடெண்ட் மகத்

பழகிக்கலாம் பாடலுடன் தொடங்கியது நேற்றைய நாள். பாட்டுக்கேற்ற மாதிரி இனியாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பழக வேண்டும். 16 நாட்கள் ஆன பிறகும் கேமராக்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர் போட்டியாளர்கள்.

நேற்று எப்போதும் இல்லாத திருநாளாக ரித்விகா காலையிலேயே உற்சாகமாக நடனமாடினார். போகபோக ரித்விகாவை மையமாக வைத்து சில எபிசோடுகளை எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் மைக் பக்காவாக வேலை செய்வது கொஞ்சம் இடைஞ்சலாக உள்ளது. சில சமயங்களில் வீட்டில் இருப்பவர்கள் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. இதுவாக தான் இருக்கும் என்று குத்துமதிப்பாக நாமாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது.

நேற்று பாலாஜி தனது கையை சென்றாயனின் துணியில் துடைத்துவிட்டார் என்ற பிரச்னை நடந்துக்கொண்டு இருந்தது. இதெல்லாம் பிரச்னையா என்றால்.. வீட்டின் தலைவி வைஷ்ணவி இதனை பிரச்னை போல தான் அணுகினார். அனந்த் இதனைப்பற்றி சென்றாயனிடம் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டு தலைவியாக ஏதாவது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வைஷ்ணவி செய்தது இது.
டேனி, மும்தாஜை அழைத்து, ஒரு முக்கியமான விஷயம் என்று பில்டப்பெல்லாம் கொடுத்து இதனை கூறினார். இத தான் இவ்வளவு முக பாவத்தோடு சென்னியா என்பது போல கேட்டனர் டேனியும், மும்தாஜும். பின் அவர்கள் பாலாஜியிடம் இது பற்றி பேசினர்.

இது பெரிய பிரச்னையாக மாறுவதை யாருமே விரும்பாததால் மீண்டும் வைஷ்ணவி பக்கம் அனைவரது கையும் நீண்டது. பள்ளிக்கூடத்தில் ஆர்வகோளாறு கிளாஸ் லீடர் போல நடந்து கொள்கிறார் வைஷ்ணவி. பாலாஜியின் மனம் புண்படுவதை சென்றாயன் விரும்பாததால் ‘உனக்கு கொஞ்சம் கூட மெட்சூரிட்டியே இல்ல தங்கம்’ என்று வைஷ்ணவியிடம் கூறினார். தங்கம் என்ற வார்த்தையை நீக்கி விட்டால் சென்றாயன் செம காண்டில் தான் இதனை கூறியிருக்கிறார்.

ரித்விகா தனது பெற்றோரை மிஸ் செய்வதாக அழுதார். உடனே அவரை சூழ்ந்து க்கொண்டு அனைவரும் சமாதானப்படுத்தினர். அத்தோடு தாங்களது உறவுகளை மிஸ் பண்ணுவதாக கூறி அவர்களும் ரித்விகாவுடன் சேர்ந்து ஃபீலிங்கில் குதித்தனர்.

இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் தண்ணில கண்டம். பிக்பாஸ் வீட்டில் தண்ணியில் மட்டுமா கண்டம். ஐம்பூதங்களை தாண்டி எக்ஸ்ட்ராவாக ஏதாவது கண்டிப்பிடித்துக் கொண்டுவந்தாலும் இங்கு கண்டம் தான்.

ஒரு டாங்கில் போடப்பட்டு இருக்கும் ஓட்டைகளை கைகளால் அடைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பது தான் டாஸ்க்.
இதற்கு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். ஒரு அணியில் ஜனனி, நித்யா, பாலாஜி, ஷாரிக், யாஷிக்கா, பொன்னம்பலம் ஆகியோர் இருந்தனர். மற்றொரு அணியில் ஐஸ்வர்யா, ரித்விகா, மும்தாஜ், டேனியல், மமத், அனந்த் ஆகியோர் இருந்தனர். இந்த முறை அணியினரை பிக்பாஸே தேர்வு செய்தார்.

குறிப்பாக இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டின் பிரதான விதிமுறைகளான மைக் அணிவது, தமிழில் பேசுவது, தூங்காமல் இருப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்காமல் எதிரணியில் யாராவது இருந்தால் அவர்களது டாங்கில் இருந்து 5 மக்கில் தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.    

அடிக்கடி ஆங்கிலத்தில் பேசி இரு அணிகளும் மாட்டிக்கொண்டனர். பாலாஜியும், நித்யாவும் ஒரே அணியில் சேர்த்து பிரச்னையை உண்டாக்க நினைத்திருப்பார் பிக்பாஸ். ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்தது. தொடர்ந்து டாஸ்க்கை செய்து கொண்டு இருந்த நித்யாவுக்கு (சும்மாக்காச்சும் மற்ற போட்டியாளர்களுக்கும்) ஜூஸ் எடுத்து வந்து ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தார் பாலாஜி.
பின் நித்யா தன்னிடம் சிரித்து பேசுவதாக மும்தாஜிடம் கூறிக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் பார்க்க நல்லா தான் இருந்தது. ஆனால் நாமினேஷனில் இருப்பதை கருத்தில் கொண்டு பாலாஜியிடம் இந்த மாற்றமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நேற்றைய நிகழ்ச்சியில் யாஷிக்கா- ஐஸ்வர்யா ஒரு சீனில் கூட ஒன்றாக இல்லை. வீட்டில் ஜாலியாக சுற்றித்திரிந்தவர்கள் மேல் கண்பட்டு விட்டதோ என்னவோ!.

அடிக்கடி போர் அடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை டேனியின் ஒன்லைகள் தான் காப்பாற்றுக்கின்றன. அதுவும் நேற்று கதை சொல்கிறேன் என்று கடைசியில் ஆங்கிலத்தில் பேசி தண்ணீரை இழந்து டேனி முழித்தது ரகளை.

மமதி சென்ற பிறகு மும்தாஜுக்கு யாரும் ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்று நினைத்தால் இப்போது தான் அவர் முன்பை விட ஜாலியாக இருக்கிறார். மற்றவர்களிடம் பழக முயற்சிப்பதும் தெரிந்தது.

நடுவில் வழக்கம் போல மகத்- யாஷிக்கா சீன்களும் இருந்தன. நேற்றும் மகத் தேவையில்லாமல் எல்லை மீறி பேசினார்(அவரவர் எல்லைகளை அவரவர் தீர்மானிக்கலாம் தான்… ஆனாலும் மகத் செய்வதெல்லாம் ..). அனந்த்துக்கு தலையை மட்டும் சுத்தம் செய்து விட்டார் மும்தாஜ் அவரது உடல் நலம் காரணமாக இதை அவர் செய்தார். அதையும் விட்டுவைக்கவிலலை மகத். உடனே கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என பாட தொடங்கி விட்டார். பிக்பாஸ் வீட்டில் தற்போதைக்கு புவர் ஸ்டூடெண்ட் மகத் தான்.

மும்தாஜ் பேசுவதில் கொஞ்சம் அதிகாரத்தனம் இருப்பதை போட்டியாளர்கள் அனைவரும் உணர்ந்தே உள்ளனர். நேற்று அது போல மகத்திடம் மும்தாஜ் டாஸ்க் ரீதியாக ஒன்றை கூறினார். அவர் கூறியது சரி தான் என்றாலும் சொன்ன விதம் அதிகாரத்தானமாக இருந்தது. உடனே மகத் சண்டைக்கு வந்தார். டாஸ்க் நடந்து கொண்டு இருந்த போதே மழை பெய்தது. அதிலும் தீவிரமாக டாஸ்க்கை செய்தனர்போட்டியாளர்கள்.

டாஸ்க்கில் இடைவேளையை அறிவிக்க சென்றார் வைஷ்ணவி. தனது தலைவர் பொறுப்பை முழுமையாக அனுபவிக்க நினைக்கிறார் என்பது வைஷ்ணவி செய்யும் ஒவ்வொன்றிலும் தெரிகிறது. சாதாரண விஷயத்தை கூறும் போது கூட பதட்டத்துடன் அதனை பெரிய விஷயமாக்கி கூறுகிறார்.இது போன்ற கேரக்டர்கள் சீக்கிரத்தில் எரிச்சல் அடைய செய்யும். பிக்பாஸ் வீட்டிலும் அதே நடக்கிறது.

முதல் டாஸ்கில் இடைவேளையில் இரண்டாவது டாஸ்க் நடந்தது. சுற்றி சுற்றி பிக்பாஸ் நீச்சல் குளத்திற்கு தானே வருவார்.. அதே போல வந்துவிட்டார்.

நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீரை தூக்கி விசி பக்கெட்டை நிருப்ப வேண்டும் என்பது தான் டாஸ்க். இதற்கு சிந்தாமல் சிதறாமல் என பெயர் வைத்துள்ளனர். இதில் மும்தாஜ் அணியினர் வெற்றி பெற்றனர்.

அதனால் எதிரணியின் டேங்கில் இருந்து 5 பக்கெட் தண்ணீரை எடுத்துக்கொண்டனர். இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க வைஷ்ணவி கூல் கேப்டனாக நடந்து கொள்கிறேன் என நினைத்து எதையோ சொல்லி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

மீண்டும் தண்ணில கண்டம் டாஸ்க் தொடங்குவதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. வார வாரம் ஒவ்வொருவர் பற்றி நாம் நினைத்திருக்கும் கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் வீட்டில் இருப்பவர்கள் முழுமையாக தங்களை வெளிப்படுத்தாமால் இருப்பது. இனிவரும் நாட்களிலாவது அவ்வாறு நடக்குமா என்று பார்ப்போம்..

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP