#BiggBoss Day 15: கட்டிப்பிடிக்காதீங்க பிளீஸ்!

16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 2 தற்போது 15 ஆக குறைந்துள்ளது. முதல் ஆளாக மமதி வெளியேறியது மும்தாஜ்க்கு மட்டும் தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் ஐஸ்வர்யாவும் யாஷிக்காவும் கூட அழுதனர்.
 | 

#BiggBoss Day 15: கட்டிப்பிடிக்காதீங்க பிளீஸ்!

16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 2 தற்போது 15 ஆக குறைந்துள்ளது. முதல் ஆளாக மமதி வெளியேறியது மும்தாஜ்க்கு மட்டும் தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் ஐஸ்வர்யாவும் யாஷிக்காவும் கூட அழுதனர். இதே போல நாமும் நல்ல உறவை உருவாக்கிக் கொண்டு பின் பிரிய நேரிடும் என்பது யாஷிக்கா அழுததற்கு காரணம்.

இந்த எபிசோட் முழுக்க மும்தாஜ் அழுகாட்சிகள் தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் சில காட்சிகளோடு அது முடிந்தது. சில சமயங்களில் எதிர்பார்ப்புகள் பொய்ப்பதில் இருக்கும் ஆனந்தத்தை இது போன்ற தருணங்களில் உணர முடிகிறது.

‘என்னால தான் மமதிய எவிக்ட் பண்ணிட்டாங்க’, என்று  அழுதுக்கொண்டு இருந்த மும்தாஜிடம் உண்மையான காரணம் நீங்கள் இல்லை என்று விளக்கி கொண்டு இருந்தார் ரம்யா. அவர் கூறியதில் மிக முக்கியமான ஒன்று, மமதி கேமரா கான்சியசாக இருக்கிறார் என்பது. வாழ்க்கை எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போலவே எப்போதும் இருப்பது கண்டிப்பாக மமதிக்கு மைனஸ்.

அழுதுக்கொண்டு இருந்த மும்தாஜை சமாதானம் செய்கிறேன் என ‘கட்டிப்பிடு கட்டிப்பிடு டா’ பாடலை இன்னும் சூடாக பாடினார் மகத். ஆம்.. சமாதானப்படுத்த தான்! இனியும் அவர் சமாதானப்படுத்த இந்த முறையையே கையாண்டால், மும்தாஜின் விராசாமி படத்தை பார்க்க வைக்கும் தண்டனையை பிக்பாஸ் கொடுத்தால் தேவலாம்.

பின் ஷாரிக் தனது உடைகளை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார். யாரோ அவருக்காக அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் கூரியர் சர்விஸ் இருக்கிறது போல. குறிப்பாக வீட்டிற்குள் அனுப்பபடும் ஒரு பொருள் பிரச்னையை உருவாக்கும் என்னும்போது பிக்பாஸ் தனது விதிமுறைகளை எல்லாம் பார்ப்பாரா என்ன?

அது அவரது கேர்ள் பிரேண்ட் அவருக்காக அனுப்பியது. என்னாது?? அப்போ ஐஸ்வர்யா கிட்ட சொன்னது என்னும் கேள்விக்கு குறும்படம் எதாவது போடுவார்கள். ஐலைக் யூ என்பதற்கும், ஐ வை யூ என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? லைக் பெரிதா லைவ் பெரிதா என்ற ரீதியில் விவாதங்களும் நடக்க நேரிடலாம்.   தனது கேர்ள் பிரெண்ட் பற்றி யாஷிக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஷாரிக். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது 15வது நாள் முடிந்தது.

16வது நாள் காலை சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாட்டுடன் எழுந்தனர் போட்டியாளர்கள். மும்தாஜ் தனியாக அமர்ந்திருந்தார்.
மமதியிடம் முன்னர் பேசிக்கொண்டு இருந்த போது நித்யா, நீங்க நாளைக்கு போக போரிங்கல என்றாராம். அவர் கூறியது நடந்து விட்டது என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். நித்யாவை பற்றி பேசுகிறார்கள் என்றதும் நமக்கு எதுக்கு வம்பு என்று அங்கிருந்து நகர்ந்தார் பாலாஜி. பின்ன குறும்படம் கண்ணு முன்னாடி வருமா.. இல்லையா?..

வழக்கம்போல யாஷிக்காவும் மகத்தும் கொஞ்சிக்கொண்டு இருந்தனர். கொஞ்சுவதற்கு டேனியிடம் உதவியெல்லாம் கேட்டார் மகத்.
பிக்பாஸ் வீட்டில் கலகல என சுற்றிக்கொண்டு இருந்தவர்களுக்குள் நேற்று சில வாக்குவாதங்கள் நடந்தது. ஷாரிக் தனது காதல் பற்றி முன்னாளேயே தன்னிடம் கூறவில்லை என்றும் தனது உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார் என்றும் யாஷிக்காவிடம் கூறிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அங்கேயும் வந்து சமாதானப்படுத்தினார் மகத்.

இவர்கள் சண்டையை இடைமறிக்கும் விதத்தில் நித்யாவின் தலைவர் பொறுப்பு முடிந்து விட்டதாக அறவித்தார் பிக்பாஸ். பின்  கன்ஃபஷன் அறைக்கு முதலில் வரும் 2 பேரில் ஒருவர் தலைவர் பொறுப்பிற்காக தேர்வாவார்கள் என்றார் பிக்பாஸ். சென்றாயனும், வைஷ்ணவியும் தலைவர் பொறுப்பை ஏற்க ஓடி வந்தனர்.  வீட்டில் உள்ளவர்கள் இவர்கள் இருவரில் யாரை அதிகமாக கட்டிப்பிடிக்கிறார்களோ அவர் தான் வீட்டின் தலைவர். இது சீக்ரெட் டாஸ்க் என்பதால் யாருக்கும் சொல்லக்கூடாது என்ற கட்டளையுடன் தலைவர் பொறுப்பிற்கான போட்டி தொடங்கியது.

சென்றாயன் ஒவ்வொருவரிடமும் சென்று என்னை பாராட்டுங்கள், என்னை பாராட்டுங்கள் என்று ‘ஹக்கை’ கேட்டு வாங்கி கொண்டு இருந்தார். அவர் கேட்டவிதத்திலேயே இது தான் டாஸ்க் என்று மற்ற போட்டியாளர்கள் கண்டுப்பிடித்து விட்டனர்.

மறுப்பக்கம் ஜனனியிடம் சென்று மன்னிப்பு கேட்டு ‘ஹக்கை’ வாங்கிக்கொண்டார் வைஷ்ணவி. அது உண்மை என நம்பி பின் பொய் என்பது தெரிந்ததும் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார் ஜனனி.

பின் ஷாரிக்கிடம் சென்று சென்டிமென்டாக பேசிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. பின்னால் இருந்து ஷாரிக்கிக்கு, கட்டிப்பிடிக்காத.. பிளீஸ்.. என்று சைகையால் கூறினார் ஜனனி.  விஷ பாட்டில் என சும்மாவா பெயர் வைத்தார்கள்?

வீட்டில் இருந்த அனைவரையும் கட்டிப்பிடித்துவிட்டு கேமரா முன் வந்து கூறினார் சென்றாயன். சீக்ரெட் டாஸ்க்கில் யார் யாரை அவர் கட்டிப்பிடித்தார் என்பதை பட்டியலிட்டுக்கொண்டு இருந்தார் மகத்.

விதிமுறைகளை மீறியதால் சென்றாயன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வைஷ்ணவி வீட்டின் தலைவியானார். மற்ற போட்டியாளர்களுக்கு அதில் முழுமையாக விருப்பம் இல்லை என்றாலும கைத்தட்டினர்.

மகத், யாஷிக்கா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணியில் குழப்பம் அதிகமாக அனைவரிடமும் தன்னை நாமினேட் செய்யுமாறு கேட்டார் ஐஸ்வர்யா. அவர்கள் நாமினேட் செய்தாலும் தன்னை வெளியேற்றமாற்றார்கள் என்பது ஐஸ்வர்யாவுக்கும் தெரியும். உடனே அனைவரும் என்னாச்சி என்னாச்சி என்று கேட்க தொடங்கினர். அவர்கள் பிரச்னை மற்றவர்கள் பார்வைக்கு முடிந்துள்ளது. இந்த வாரத்தில் மீண்டும் இதே பிரச்னை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

பின் வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசுவதால், இனி பேசினால் சைரன் சத்தம் கேட்கும் என்ற அறிவிப்பு பிக்பாஸிடம் இருந்து வந்தது. மேலும் ஒவ்வொரு சைரன் சத்தத்திற்கும் 5 பேர் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் எனறும் அறிவித்தார் மிஸ்டர் பிக்பாஸ். அப்படி என்ன தான் பிக்பாஸுக்கு பாசம் அந்த நீச்சல் குளத்தின் மேல்?

கடைசியாக இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. வீட்டின் தலைவி வைஷ்ணவி, முன்னர் டாஸ்கில் ஜெயித்த டேனி,  ரித்விகா மற்றும் எவிக்ஷனுக்கு நேரடியாக தேர்வாகி இருந்த நித்யா, அனந்த் தவிர மற்றவர்களை நாமினேட் செய்யலாம்.

பாதிக்கு பாதிப்பேர் பொன்னம்பலத்தையும், பாலாஜியையும் கூறினர்.  தொடர்ந்து 3வது முறையாக மும்தாஜ் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்.  அனைவரும் வைஷ்ணவியை நாமிடேட் செய்யலாம் என காத்திருந்த நிலையில் அவரே தற்போது வீட்டின் தலைவியாக இருக்கிறார். இதனால் இந்த வாரம் என்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்ப்போம்..

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I   14ம் நாள்   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP