#BiggBoss Day 14: போலித்தனம் தரும் பரிசு!

'விஸ்வரூபம் 2' படத்தின் பாடல்கள் வெளியிடப் போகிறார்கள் என்றதுமே, வழக்கமான டிராமா மிஸ் ஆகுமோ என்று நாம் யோசித்தது உண்மை. பெரிய அளவு டிராமா இல்லையென்றாலும், சில பல டிவிஸ்டுகளோடு ஒளிபரப்பான நிகழ்ச்சி முழுதாக போர் அடிக்கவில்லை. திரும்பத் திரும்ப 'மக்கள் ப்ளா ப்ளா..', 'ப்ளா ப்ளா மக்கள்' என கமல்ஹாசன் சொல்லிக் கொண்டே இருந்தது தான், 'இவ்ளோ மோசமாவா பி.ஆர் வேலை செய்வாரு' என்று யோசிக்க வைத்தது.
 | 

#BiggBoss Day 14: போலித்தனம் தரும் பரிசு!

'விஸ்வரூபம் 2' படத்தின் பாடல்கள் வெளியிடப் போகிறார்கள் என்றதுமே, வழக்கமான டிராமா மிஸ் ஆகுமோ என்று நாம் யோசித்தது உண்மை. பெரிய அளவு டிராமா இல்லையென்றாலும், சில பல டிவிஸ்டுகளோடு ஒளிபரப்பான நிகழ்ச்சி முழுதாக போர் அடிக்கவில்லை. திரும்பத் திரும்ப 'மக்கள் ப்ளா ப்ளா..', 'ப்ளா ப்ளா மக்கள்' என கமல்ஹாசன் சொல்லிக் கொண்டே இருந்தது தான், 'இவ்ளோ மோசமாவா பி.ஆர் வேலை செய்வாரு' என்று யோசிக்க வைத்தது. 

ஜிப்ரான் எனும் நல்ல இசைக் கலைஞனின் பாடல்களை கேட்டது மகிழ்ச்சி என்றாலும் - முழு இசையாகவோ, முழு டிராமாவாகவோ இல்லாமல் டைல்யூட் ஆகியிருந்தது நிகழ்ச்சி. மற்றபடி, ஸ்ருதி ஹாசனும் கமல்ஹாசனும் ஒவ்வொரு முறை தழுவிக் கொள்ளும் போதும் ஒரு புன்னகை இயல்பாக பூத்தது. மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு எல்லாம் புல்லரித்தாலும் அரித்திருக்கும். 

செண்ட்ராயனின் ஆங்கிலப் புலமையும், ஸ்ருதி ஹாசனிடம் பேசும்போது கொண்டிருந்த படபடப்பும் பரிதாபக் காட்சிகள். டேனி, அடித்து ஆடி, 'சார். உங்க கிட்ட எப்போ வேணும்னாலும் பேசிக்கலாம்... இப்போ ஸ்ருதிக்கிட்ட பேசிக்கிறேன்' என்றதுதான் இந்த இரவின் காமெடி ஹைலைட். அய்யோ சாரி.. பாலாஜி தாடியை எடுத்துவிட்டு திருந்துவதாக கமல்ஹாசனுக்கு வாக்கு கொடுத்தது தான் இந்த இரவின் காமெடி ஹைலைட். 

இடையே செண்ட்ராயன் நித்யாவை காம்ப்ரமைஸ் செய்ய முயற்சிப்பதை பார்த்தோம். அவர் சொன்ன காரணங்கள் எல்லாமே நித்யா ஓராயிரம் முறை ஏற்கெனவே கேட்டதாகவே இருக்கக் கூடும். ஃபினிஷிங் டச்சாக 'உங்களுக்காக இல்லாட்டியும் குழந்தைக்காக' என்று நித்யாவின் 'பெண்/தாய்' மனதை அசைத்து பார்க்கவும் ஒரு தூண்டில் போடப்பட்டது. கோடிக் கணக்கான குழந்தைகள் அநாதைகளாக இந்தியா போன்றதொரு நாட்டில் என்ன காரணத்திற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்பதையே யோசிக்காமல், சும்மா ஒரு குழந்தையை பெற்று போட்டுவிட்டு - பின் அதன் பொருட்டு வாழ்க்கையை மாற்றி அமைத்து, அதை குழந்தை மீது திணித்து டார்ச்சராக்கும் பெற்றோர்களாகவே நித்யாவும் பாலாஜியும் இருப்பார்கள் - இது சர்வ நிச்சயம். இந்த லட்சணத்தில் இவர்கள் இருவரும் குழந்தைக்காக இணைந்திருக்க வேண்டுமாம். யார் சொன்னது - சோசியலைசிங், பேரண்டிங் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்க தேவையில்லாத நம்ம செண்ட்ராயன். 

இந்தியர்கள் திருமணம் வொர்க்-அவுட் ஆகவில்லை என்றதும் என்ன செய்கிறார்கள் என்பது தெளிவில்லை, ஆனால் மேற்கத்திய நாடுகளில் திருமண வாழ்வு போரடிக்கும்போது குழந்தை பெற்றுக் கொள்வதன் வழியே அந்நியோன்யம் உண்டாகும் என்று பலர் முயற்சிப்பார்கள். உலகம் முழுவதுமே குழந்தை பேறு இப்படியான அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்திருக்கிறது என்பதை உணரும்போது ஒரு சர்காஸ புன்னகை சிந்துவோம்.  

அடுத்து, மும்தாஜும் பாலாஜியும் என்னவோ 'கொச கொச'வென பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்காகத் தான் கமல், 'நாங்கள் திரும்பி பார்க்க மாட்டோம் எனும் நம்பிக்கையில் தான் வேட்டி மறைவில் மூத்த நடிகைகள் துணி மாற்றினார்கள். அப்படிப்பட்ட காரியம் செய்து டி.ஆர்.பி கூட்டுபவர்களோடு நான் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்' என்று சொன்னார் என வைத்துக் கொள்வோம். (ஏனென்றால், கமல் பேசிக் கொண்டிருக்கும்போது மும்தாஜின் முகத்தை ரெண்டு தடவை க்ளோஸ்-அப்பில் காட்டினார்கள்')

எலிமினேஷன் பற்றிய பேச்சு வந்தது. மும்தாஜ், மமதி இருவரின் முகமுமே ஆத்திரமாகத் தான் இருந்தது. அனந்த் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டிருந்தார். முடிவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்த போது, தான் வீழ்ச்சியை ஏற்றுக் கொள்வதனால் பெரும் லாபம் இருக்கிறது என்பது போன்ற ஒரு பிம்பத்தை அனந்த் உண்டாக்க முயற்சித்ததை எளிதாக அடையாளம் காண முடிந்தது. எல்லாரும் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, அனந்த எலிமினேட் ஆகாமல் இருந்தது மெல்லிய அதிர்ச்சிதான். அதற்காக, அவர் அழுது கரைந்ததை எல்லாம் யாரும் பார்க்க விரும்பவில்லை சாரே. 

மமதி, மும்தாஜ் இருவருமே துரோகத்திற்கு ஆளானவர்கள் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, வாயளவில் மட்டுமே மரியாதையாய் பேசிக் கொண்டிருந்தார்கள். கமல்ஹாசனும் பிறரிடம் காட்டும் அளவு பரிவை இவர்கள் இருவரிடமும் காட்டியதாக தெரியவில்லை.  மும்தாஜும், மமதியும் நண்பர்களானதை பற்றி அவர் பேச, 'புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி' என்று மமதி சொன்னதும், 'புரிஞ்சுக்காமலா இருக்கோம்..?' என்று கமல் கலாய்த்தது ஒரு ஃபுல்ஃபில்லிங் மொமண்ட். 

மமதி தான் எலிமினேடட் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் முகம் இன்னும் சிவந்ததாக தெரிந்தது. பொம்மை கிடைக்காத குழந்தைகள் ஆத்திரத்தில் பெற்றோரை அடிப்பது போல சில வார்த்தைகள் பேசினார். மமதி வெளியேறியதும் என்ன காரணத்தினால் மக்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியாமல் போனது என்று கமல்ஹாசனோடு பேசிக் கொண்டிருந்தார். மமதி அப்பட்டமாய் மேட்டிமைவாதத்தை வெளிப்படுத்துகிறார், பிறரை அன்பு செய்ய முடியவில்லை, அவர் ஒரு சூடோ-இண்டலெக்சுவல். 

இதையெல்லாம் நேரடிக் காரணமாக சொல்ல முடியாவிட்டாலும், இதன் தாக்கங்கள் தான் மக்கள் அவரை விரும்பாததற்கு காரணமாக இருக்க முடியும். மற்றும் ஒன்று உண்டு - அவருடைய மொழி. என்ன நினைத்து அப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. 

இளைஞர்கள் எழுத்தாளராக வேண்டும் என எழுதத் தொடங்கும்போது, பயங்கர உரைநடையாக, காம்ப்ளிகேடட் வார்த்தைகளை எல்லாம் ஒன்றாய் போட்டு அடித்து - வாசகன் மூளையை கசக்கி கயிற்றில் போடுமளவு எழுதுவார்கள். சிலர் காலப்போக்கில் படிக்க எளிதாய் இருப்பவற்றை எழுத தொடங்குவார்கள் - சிலர் கர்வம் தலைக்கேறி அழிவார்கள். 'இந்த இல்லத்தில் ப்ளா ப்ளா' ' நான் இயற்றியிருக்கிறேன்' என தன்னை இண்டலெக்சுவலாக காட்டிக் கொள்ள அவர் செய்த காமெடிக்கள் தான் மக்களிடமிருந்து அவரை விலக்கியிருக்கலாம். 

நேற்று, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் போலித்தனத்தை பற்றி என்ன நேரத்தில் பேசத் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை? இன்று போலித்தனம் ஒருவரை வெளியேற்றியிருக்கிறது. மமதி இல்லாமல் வீடு 'ஆல் இஸ் வெல்'லாகவே இருக்கும் என்றும் நமக்கு தெரியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP