#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

நேற்றைய நிகழ்ச்சியே பாலாஜி- நித்யா பஞ்சாயத்தோடு தான் தொடங்கியது. எல்லாத்தையும் மறந்துட்டு ஒண்ணா இருங்க என்று சென்றாயன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்திக்கொண்டு இருந்தார். தினம் ஒருவர் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்கின்றனர். பல முறை அப்படி மறந்து மறந்து விட்டாச்சி இனிமே முடியாது என்றார் நித்யா. அதைக்கேட்டதும் சேர முடியாதுனா எதுக்கு பிக்பாஸுக்கு வந்த என கேட்டார்.
 | 

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

நேற்றைய நிகழ்ச்சியே பாலாஜி- நித்யா பஞ்சாயத்தோடு தான் தொடங்கியது. எல்லாத்தையும் மறந்துட்டு ஒண்ணா இருங்க என்று சென்றாயன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்திக்கொண்டு இருந்தார். தினம் ஒருவர் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்கின்றனர். பல முறை அப்படி மறந்து மறந்து விட்டாச்சி இனிமே முடியாது என்றார் நித்யா. அதைக்கேட்டதும் சேர முடியாதுனா எதுக்கு பிக்பாஸுக்கு வந்த என கேட்டார் பாலாஜி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாள் இருவருக்கும் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது தெரியும் என்பது போல இருந்தது பாலாஜியின் பேச்சு. அவர் சொல்வதுபடி போட்டியாளர்கள் யார் என தெரிந்து பிக்பாஸின் மூலம் குடும்ப பிரச்னையை சரி செய்ய நினைத்து தான் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் பாலாஜி.

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

நீங்க கடுமையாக பேசிட்டீங்க என்று பாலாஜியிடம் கூறினார் மும்தாஜ். உடனே, சாவட்டும் மேடம், எல்லாம் நடிப்பு என்றார் பாலாஜி. இந்த சீசன் தொடங்கியது முதல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் செயல்களை பார்க்கும் போது நமக்கும் அதே ஃபீல் தான் என்பதை யாரிடம் போய் கூறுவது. இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவில் ‘இது ஒரு அல்ப ஷோ’ என்றார் பாலாஜி. இந்த முறை பிக்பாஸையே எதிர்த்து பேசும் போட்டியாளர்கள் நிறைவே பேர் வந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி.இந்த பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கும் போதே விளக்குகள் அணைக்கப்பட்டன. 

எஜமானர்கள் மற்றும் வேலையாட்கள் டாஸ்க் இன்னும் முடியவில்லை. 11ம் நாள் காலையில் உதவியாளர்கள் இருந்த அறையில் பெல் அடித்ததும் பெண்கள் எழுந்து தயாராகிவிட்டு வேலைகளை செய்ய தொடங்கினர்.தனக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று டாஸ்க்கை செய்ய முடியாது என்று கூறிவிட்டார் மும்தாஜ்.

எஜமானர்களுக்காக ‘எவன்டி உன்ன பெத்தான்’ பாடல் ஒலிக்கப்பட்டது. பாடல் முடிந்ததும் கேமரா முன் வந்து சிம்புவை மிஸ் பண்ணுவதாக கூறினார் மகத்.

மீண்டும் நித்யா –பாலாஜி சண்டை. டாஸ்க் படி நித்யாவின் எஜமானரான பாலாஜி அவரிடம் வேலையை கூறாமல் அவரே செய்து கொண்டு இருந்தார். இது குறித்து நித்யா பிக்பாஸிடம் புகார் தெரிவிக்க மீண்டும் தகாத வார்த்தைகளில் திட்ட தொடங்கினார் பாலாஜி. பிக்பாஸ் ரூல்ஸ்களில் தகாத வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பது தெரியவில்லை. மும்தாஜ் மைக் அணியாமல் இருந்த போது குறிப்பு அனுப்பிய பிக்பாஸ் பாலாஜிக்கு ஒன்றும் கூறவில்லை.

பாலாஜி தொடர்ந்து தன்னை கடிந்துக் கொண்டேஇருக்க அழுதுவிட்டார் நித்யா. உடனே தானாக முன்வந்து எஜமானர்களை மாற்றிக்கொள்ளலாம் என்றார் ஜனனி. எங்கிருந்தோ வந்த மமதி “பாலாஜி இப்படி பேசுவதற்கு ஒரு தலைவியா நீங்க எந்த ஆக்ஷன் எடுத்தாலும்  நாங்க ஒத்துழைக்கிறோம்” என்றார்.

அவர்கள் குடும்ப பிரச்னை எல்லாம் தாண்டி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் என்று பார்க்கும் போது நியாயம் எல்லாம் நித்யா பக்கம் இருந்தாலும் அவருக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வீட்டில் இருப்பவர்கள் தயங்குகிறார்கள். பின் ஜனனியும், டேனியும் பாலாஜியிடம் இதுகுறித்து பேசினர்.  பாலாஜியை தகப்பா தகப்பா என்று அழைத்தார் ஜனனி. இதனால் இனி ஜனனி ஆர்மியின் சப்போர்ட் பாலாஜிக்கு கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

பின், கோவம் எல்லாருக்கும் வரும் ஆனா உங்க பொண்ணு வாழ்க்கைய பாருங்க. அப்பா பாசம் தான் பொண்ணுங்களுக்கு முக்கியம் என அட்வைஸ் செய்து கொண்டு இருந்தார் டேனி. யார் அட்வைஸ் சொன்னாலும் பாலாஜி அமைதியாக கேட்டுக்கொள்கிறார் தான் ஆனால் கொஞ்ச நேரத்தில் வார்த்தைகளை விடுகிறார். மேலும் பாலாஜி கோபப்படுவதால் அவருக்கு பிபி அதிகமாகி விடுமோ என்ற பயமும் வீட்டில் இருந்தவர்களுக்கு இருந்ததை பார்க்கமுடிந்தது.

இந்த டாஸ்கில் சரியாக வேலை செய்யாத உதவியாளராக நித்யாவையும், ஒழுங்கான எஜமானான டேனியையும் தேர்ந்தெடுத்தனர் ஆண்கள் அணியினர். அப்போதும் ‘எஜமான் அசிங்கமா பேசினா வேலை செய்ய முடியாது’ என்று கூறினார் நித்யா. அதற்கு யாரிடமும் பதிலில்லை.

அடுத்த டாஸ்க்காக பெண்கள் எஜமானர்களாவும், ஆண்கள் உதவியாளர்களாகவும் மாறினர். டாஸ்க்கை கேட்டதும் பெண்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. ஷாரிக்கை தனது உதவியாளராக தேர்வு செய்தார் ஐஸ்வர்யா. முதல் வேலையாக அவரை தனியாக அழைத்து சென்று ‘உங்களுக்கு இந்த வீட்டுல ஒரு பொண்ண புடிக்குமே அவங்கள பத்தி சொல்லுங்க’ என்றார் ஐஸ்வர்யா. நடுவில் ரொம்ப கஷ்டப்பட்டுலாம் வேலை செய்ய வேண்டாம் என்பதையும் சேர்த்துக்கொண்டார். ம்ம்..

அத்தனை சண்டைகளுக்கு பிறகும் நித்யாவின் உதவியாளராக பாலாஜி இருந்தார். நித்யா ஒவ்வொரு வேலையாக சொல்லும் போது கடுப்பான பாலாஜி தொடர்ந்து கொச்சையாக பேசிக்கொண்டு இருந்தார். ஆண்கள் அணியினர் அனைவரும் பாலாஜி இப்படி பேசுவது தெரிந்திருந்தும் அமைதியாக இருந்தனர். இவர்கள் தான் மமதி உதவியாளராக இருந்த போது பொன்னம்பலத்தை பார்த்து ஏதோ சொல்லிவிட்டதாக அலப்பறை செய்தனர். வீட்டில் இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க ஷாரிக்கை துணி மடித்து வைக்க சொல்லிவிட்டு முன்னாள் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.

மீண்டும் மீண்டும் பாலாஜி –நித்யா சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாலாஜி யாருக்கும் மரியாதைகொடுப்பதில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி.பின் பாலாஜியிடம் காபி  கேட்டார் வைஷ்ணவி.பின் டேனியிடமும் கேட்டார். மற்ற அனைவருக்கும் காபி கொடுத்த ஆண்கள் வைஷ்ணவிக்கு கொடுக்காமல் சென்றனர். உடனே சென்றாயனிடம் காபி கேட்டார். உடனே கத்த ஆரம்பித்தனர் உதவியாளர்கள். வைஷ்ணவியையும் திட்டினார் பாலாஜி. அதுப்பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை. டேனியும் கோபப்பட்டார்.

சென்ற டாஸ்க்கை ஒப்பிடுகையில் பெண்கள் அணியினர் கனிவான எஜமானர்களாவே இருந்தனர். ஆண்கள் செய்த அட்டூழியங்களை போல பெண்கள் தரப்பில் இருந்து எதுவும் நடக்கவில்லை. எல்லாம் டாஸ்க்குக்கு தான் என்ற ஆண்கள் தங்களுக்கு ஒருவர் கட்டளையிடுவதை மட்டும் தாங்கி கொள்ள தயாராக இல்லை. சத்தமாக பேசினால் அமைதியாகிடுவாங்க என்று நினைத்து அனைத்திற்கும்  கத்தி கத்தி பேசிக்கொண்டு இருந்தனர். நமக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா டேனி?

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

டேனி கத்தியதை கேட்டு ‘அப்படி எல்லாம் கத்தி பேசாதிங்க’ என்றார் மமதி. அதற்கும் போட்டியாக வார்த்தைகளை விட்டனர் ஆண்கள்.
வீட்டில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருப்பதாக அழுதுவிட்டர் ரம்யா. பிக்பாஸ் வீடு இப்படி தான் இருக்கும் என்றார் மகத். இப்படி தான் இருக்கும் என்பது சரி தான். ஆனால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம் என்பதை அடிக்கடி மகத் மறந்து விடுகிறார்.

பின் தன்னை மற்றவர்கள் டார்கெட் செய்வதாக மும்தாஜிடம் கூறிக்கொண்டு இருந்தார் நித்யா. நீங்க செய்வது உங்களுக்கு சரி என்று தோன்றினால் மற்றவர்கள்சொல்வதை கேட்காதீர்கள் என்றார் மும்தாஜ்.

பின் எஜமானிகளை சந்தோஷப்படுத்த ஆண்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற உத்தரவின் படி உதவியாளர்கள் தயாராகினர்.
நிகழ்ச்சியை டேனியும் பாலாஜியும் தொகுத்து வழங்கினர். பாலாஜி அடக்கடி வில்லனாக மாறாமல் இதே போன்று  காமெடியனாக பிக்பாஸ் வீட்டில் இருந்தால் நலம் என்று தோன்றியது.

லுங்கியை ஏற்றி ஒத்த செல்லால பாட்டுக்கு ஆடினார் பொன்னம்பலம்.  அடுத்தாக வேர் இஸ் த பார்ட்டி பாட்டுக்கு ஷாரிக், அனந்த. மகத் ஆகியோர் ஆடினர். ஆட முயற்சித்த அனந்தை ஓவர் டேக் பண்ணி ஆடிக்கொண்டு இருந்தார் மகத். அனந்துடன் நடனத்தில் போட்டியிட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை மகத்துக்கு யார் எடுத்துக்கூறுவார்கள் பாவம்.

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

பின் பாலாஜியும், டேனியும் மற்றவர்கள் போல இமிட்டேட் செய்தனர். அனந்தின் இசை மேட்டரை வைத்தே அவரை போல பேசினார் பாலாஜி. இந்த முறை சிரித்துக்கொண்டே இருந்தார் அனந்த். பின் கடைசியாக ஷாரிக்கும் மகத்தும் ஆடினர். நடுவில் மகத் யாஷிக்கா முன்பு வந்து தனியாக ஸ்கோர் செய்து கொண்டு இரந்தார். கடைசியில் எஜமானிகள், உதவியாளர்கள் என அனைவரும் ஆடினர். நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய பொன்னம்பலம், அனந்த், செண்டு (சென்றாயன்) ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.

#BiggBoss Day 11: எல்லாமே நடிப்பு மேடம்!

என்னதான் சண்டைகள் நடந்தாலும் ஒருகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் ஒன்றாகி விடுகின்றனர். நாளை மறுநாள் கமல் தரிசனம் கிடைக்கும் என்பதால் நாளை போட்டியாளர்களின் செயலை மாற்றம் இருக்கக்கூடும். நாளைக்காவது எதாவது பெரிசா சிக்குமா என்று பார்ப்போம்.

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP