#BiggBoss Day 1: பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டின் இராண்டாவது நாளில் தலைவராக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

#BiggBoss Day 1: பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்! #BiggBossTamil2

பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடக்க நேற்று வீட்டின் முதல் நாள் காட்சிகள் ஒளிப்பரப்பானது. ஓவியா உட்பட அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். ஒவியா ஒரே ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வர மற்ற போட்டியாளர்கள் அவர் கெஸ்டாக தான் வந்தார் என்று கண்டுப்பிடித்து விட்டனர்(செல்லத்துக்கு அதக்கூட மறைக்க தெரியல). பின்னர் ஓவியா செல்லும் போது ஹப்பாடா.. போயாச்சி என்பது போல வெளிப்படையாக மகிழ்ச்சியை காட்டினார்கள் புது வீட்டுக்காரர்கள். போகையில் "உங்களலாம் பார்த்தா பாவமா இருக்கு" என்று கூறி விட்டு சென்றார் ஓவியா.

#BiggBoss Day 1: பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்! #BiggBossTamil2

பின்னர் வீட்டில் வசிப்பதற்கு தேவையான பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. முதல் நாளே எதையாவாது  செய்யனுமே.. சிலரின் உடமைகள் வருவதற்கு லேட்டாகும் என்று கூறிவிட்டார் பிக்பாஸ். இந்த தகவலை கேட்டதில் இருந்து என்னோட இது இல்ல.. என்னோட அது இல்ல என்று குறைக்கூற தொடங்கிவிட்டனர். இப்படி புலம்புபவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று "நான் புது லுங்கி வெச்சிருக்கேன் வேணுமா" என்று கூறிக்கொண்டே இருந்தார் பொன்னம்பலம்.

நேற்றைய நிகழ்ச்சியில் பாதி காட்சிகளில் அனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்திற்கு பாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவர் கற்றுத்தர பொன்னம்பலம் பாட... ஆஹா.. தினமும் இசைக் கச்சேரி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அடிக்கடி பொன்னம்பலம் ஜோக்குகள்(??!) எடுத்துவிட பெரிய ஜோக் பொன்னம்பலம் என்று பெயர்வைத்துவிட்டார் டேனி. யாராவது பொன்னம்பலமிடம் சென்று டேனி அவரை கலாய்கிறார் என்று கூற வேண்டும். அதையும் புகழ்ச்சி போல எடுத்துக்கொள்கிறார் வெகுளி வில்லன்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் முதல் ஆளாக நித்யா தன் கதையை கேமரா முன் சொல்கிறார். மகள், மகள் என்று நித்தமும் சொல்லும் நித்யாவுக்கு இப்படி தான் இருக்க போகிறது என்று முன்னமே தெரியும் தானே. என் பொண்ணு என்ன அழக்கூடாது என்று கூறினாள் என்கிறார். நிறைய படம் பார்ப்பார் போல.

அடிக்கடி சென்றாயன் கேமரா முன் வந்து ஆங்கிலத்தில் பேச முயற்சித்து விட்டு செல்கிறார். தமிழில் தான் பேச வேண்டும் என்ற பிக்பாஸின் ரூலை மீறும் அவரை கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கும் தண்டனை கொடக்கலாம். பேசிட்டே இருக்காருப்பா.. இதே போல டேனியும், யாஷிக்காவும் கேமரா முன் வந்து பாடுவதும் ஆடுவதும்.. என்னமோ டிரை பண்றாங்க.. ஆனா என்னனு தான் தெரியால என்பது போல இருந்தது. யாஷிக்கா அடுத்த ஓவியா ஆகமாட்டார். ஆனால் 3வது சீசனில் அடுத்த யாஷிக்கா யார் என்று தேடவைக்க வாய்ப்புள்ளது. நான் போரடிச்சா தான் குளிப்பேன் என்பதும் டிரெஸ் சேஞ்ச் செய்யாமல் இருக்கும் டேனியை கலாய்ப்பதும் என சுற்றிக்கொண்டு இருந்தார்.

#BiggBoss Day 1: பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்! #BiggBossTamil2

அடுத்து ரைசா கொஞ்சம் ஓவியா கொஞ்சம் என ஐஸ்வர்யா தத்தா வலம் வந்தார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் அவர் யார் என்பதை கண்டுப்பிடித்துவிடலாம். மேலும் இவருக்கு ஆர்மி தொடங்கியாச்சி தானே?

அனைவரும் மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க மும்தாஜின் பாடலுக்கு சென்றாயன் நடனமாடிக்கொண்டு இருந்தார். உடனே முடிஞ்சா அவங்க முன்னாடி ஆடுங்க என்று ஜனனி கூற, "தோ போறேன்" என்று வேகமாய் சென்று மும்தாஜ்க்கு வணக்கம் வைத்து திரும்பினார் சென்றாயன். அவருக்கு பதிலாக பொன்னம்பலம் நடனமாடி விட்டு சென்றார். (அதெப்படி சார் நீங்க நடிச்ச கதாபாத்திரத்த அவங்க கிண்டல் பண்ண தொடங்கின என்ன ஆகும்னு யோசிக்காம..) இதற்கெல்லாம் ஜனனி தான் காரணம் என்று "விஷ பாட்டில்" ஜனனி என்று பெயர்வைத்தனர் டேனியும், தாடி பாலாஜியும். சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் ஜனனி. ஆனால் பின் நாட்களில் இதே போல சிரிக்க மாட்டார் என்று தெரிகிறது.

வீட்டின் தலைவருக்கான டாஸ்க் வழக்கம் போல மொக்கை தான். படுக்கை அறையில்  மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 3 என்வேலப்களை முதலில் கண்டுப்பிடிப்பவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். அதை தேடும் போது சென்றாயன் பெண்கள் அறைக்குள் வந்த தேட, பெண்களின் உடைகளில் ஆண்கள் தேட வேண்டாம் என்றும் அதற்கு நியாயமான காரணத்தையும் மும்தாஜ் கூறினார். சென்றாயன் உடனே கத்திக்கொண்டே ஆண்கள் அறைக்கு சென்றார். சில்லி சில்லியாக சிண்டு முடித்து வேடிக்கை பார்ப்பதில் பிக்பாஸுக்கு நிகர் அவர் மட்டுமே. இந்த டாஸ்க்கில் மகத், ஜனனி, மும்தாஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

#BiggBoss Day 1: பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்! #BiggBossTamil2

இதில் ஜனனி 8 பேரின் ஆதரவுடன் பிக்பாஸ் இரண்டாவது சீசனின் முதல் தலைவரானார். மொழி, அனைவருடனும் சமமாக பழகுவது என சிலவற்றை வைத்து பார்க்கும் போது இப்போதைக்கு அவர் நல்ல சாய்ஸ் தான். பின்னர் வீட்டு வேலைக்கென்று அந்தந்த அணிகள் பிரிக்கப்பட்டன. தொடக்கம் முதலே மும்தாஜ் சோர்ந்தே காணப்படுகிறார். ஏதோ உடல்நலத்தில் பிரச்னை என்று கூறுகிறார். அப்படிப்பட்டவரை அழைத்து வந்தது ஏனோ?.. இல்லை அத்தனை பிரச்னைகளுடன் அவரும் ஏன் வந்தார்.

முதல் வாரத்திற்கான எலிமினேஷனுக்காக ஒவ்வொருவரும் 2 பேரை சொல்லிவிட்டு சென்றனர். அதில் அதிகமானோர் மும்தாஜ் பெயரை கூறினர். அடுத்தடுத்த இடத்தில் அன்ந்த் வைத்தியநாதன், ரித்விகா மற்றும் நித்யா ஆகியோர் இருந்தனர். இவர்களில் மும்தாஜ் மற்றும் அனந்த் ஆகியோர் வெளியேற சொல்லப்பட்ட காரணங்கள் மட்டும்தான் சரியாக இருந்தன.

மும்தாஜ், இனி வாரா வாரம் தன்னை நாமினேட் செய்வார்கள் என்று சலித்துக்கொண்டார். உடனே ஜனனியும், ஐஸ்வர்யாவும் "உங்களை மற்றவர்கள் அனைவரும் கடுமையான போட்டியாளராக நினைக்கிறார்கள். அதனால் தான் இப்படி" என்று சமாதானப்படுத்தினர். மும்தாஜ் எந்த விதத்திலும் கடுமையான போட்டியாளராக தெரியவில்லை. மாறாக அவர் பேச்சில் கொஞ்சம் கடுமை இருக்கிறது. அது தான் அவர் நாமினேட் செய்யப்பட காரணமாக இருந்திருக்கும். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு மட்டும் கூறிவிட்டார்.

நேற்றைய நாளின் தொடக்கத்தில் அனைவரும் தூங்கி எழுந்ததும் " நீங்கள் எல்லோரும் உத்தமர் தானா செல்லுங்கள்" என பாடல் ஒளித்தது. (முன்னதாக பிரமோவில் கூட நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்றே நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தினர். 100 நாட்களில் அதையெல்லாம் எப்படி கண்டுப்பிடிப்பார்கள் என்று தெரியவில்லை). நீங்கள் உத்தமரா பிக்பாஸ் என்று திருப்பி கேட்க தோன்றியது. அந்த பாடலுக்கும் ஐஸ்வர்யாவும், ஜனனியும் நடனமாடினர்.

நீங்க பழனிக்கே பால் குடம் எடுத்தாலும்.. சரி விடுங்க...

பிக்பாஸ் 2 றிமுக நாள்  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP