பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், என் மனைவிக்கு சுகபிரசவத்தில் அழகிய இளவரசி பிறந்துள்ளது, அதோடு தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 | 

பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் ராதா மோகன் இயக்கத்தில் 'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கும், தமிழ் தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவுக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது  இந்த தம்பதியினருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், என் மனைவிக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, அதோடு தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP