உலகின் சிறந்த மனிதரை திருமணம் செய்துள்ளதாக கூறும் அனுஷ்கா ஷர்மா

சமீபத்தில் `சுய் தாகா’ என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா சர்மா, தான் உலகின் சிறந்த மனிதனைத் திருமணம் செய்துள்ளதாக தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 | 

உலகின் சிறந்த மனிதரை திருமணம் செய்துள்ளதாக கூறும் அனுஷ்கா ஷர்மா

தான் உலகின் சிறந்த மனிதனைத் திருமணம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் `சுய் தாகா’ என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா கலந்துகொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ' உலகின் சிறந்த பேட்ஸ்மேனை மணந்திருக்கும் அனுஷ்கா சர்மா' என்று அனுஷ்காவை  அறிமுகப்படுத்தினார்.

 “நான் உலகின் சிறந்த மனிதனை மணமுடித்திருக்கிறேன்” என்று அந்த தொகுப்பாளரை  அனுஷ்கா ஷர்மா திருத்தி பேசினார். அனுஷ்கா சர்மா நடித்திருக்கும் `சுய் தாகா’ படம் செப்டம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட்  முன்னனி நடிகை அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் மாதம், 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இடையே உள்ள காதலை தெரிவிக்கும் வகையில் இருவரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP