சோனம் கபூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கணவர் ஆனந்த் அஹுஜா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில் இருவரின் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோனம்-ஆனந்தின் திருமணம் நடைபெற்றது.
 | 

சோனம் கபூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கணவர் ஆனந்த் அஹுஜா

சோனம் கபூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கணவர் ஆனந்த் அஹுஜா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில் இருவரின் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோனம்-ஆனந்தின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சோனம் பிஸியாக நடித்து வருகிறார். வீர் தி வெட்டிங், சஞ்சு ஆகிய படங்கள் அவரது நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

முன்னதாக, தன் திருமணத்தை முடித்த கையோடு சோனம் தனது ட்விட்டர் பெயரில் கணவரின் குடும்ப பெயரான அஹுஜாவை இணைத்து கொண்டார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவு எழுந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பே நிலவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனம், 'நான் பெண்ணியவாதி தான். என் பெயருக்கு பின்னால் எந்த பெயரை இணைத்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். கபூர் என்பதும் ஆண் பெயர் தானே' என காட்டமாக பதில் அளித்தார்.

இந்நிலையில், மனைவிக்காக ஆனந்த் அஹுஜா தன் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். சோனத்தின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தான ‘S’ ஐ தன் பெயருடன் இணைத்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP