அமிதாப் - ஜெயா தம்பதிக்கு மருமகள் ஐஸ் வாழ்த்து: இது இன்ஸ்டா வைரல்! 

அமிதாப் - ஜெயா தம்பதியின் 45-வது திருமண நாளையொட்டி, அவர்களது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
 | 

அமிதாப் - ஜெயா தம்பதிக்கு மருமகள் ஐஸ் வாழ்த்து: இது இன்ஸ்டா வைரல்! 

அமிதாப் - ஜெயா தம்பதியின் 45-வது திருமண நாளையொட்டி, அவர்களது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

அமிதாப் பச்சன் - ஜெயா பாதுரி இணை 80'களில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த ஜோடி. திருமணத்திற்கு பிறகு சிற்சில சர்ச்சைகளில் சிக்கினாலும், இந்தத் தம்பதி தங்கள் குடும்பமே பிரதானம் என்று உணர்ந்து இல்வாழ்க்கையில் திரைப் பிரபலங்களிடையே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 

இந்தத் தம்பதியினர் தங்களது 45வது திருமண நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். இதையொட்டி பிக் பி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரசிகர்களுக்கு எல்லாம் நன்றிகளைத் தெரிவித்தார். மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஜெயா பச்சனுக்கு தான் ரோஸ் வழங்குவது போல் இருக்கும் கறுப்பு - வெள்ளைப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, தன் மனைவிக்கு அன்பையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார்.

இவர்களின் மகனான நடிகர் அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில் தனது பெற்றோரின் படத்தை வெளியிட்டு வாழ்த்து செய்தி அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார். 

பிக் பி - ஜெயா பச்சனுக்கு 1973 ஆம் ஆண்டு நடந்த திருமணத்திற்கு பிறகு முதலில் வெளிவந்த "அபிமான்" என்ற திரைப்படத்தின் ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "நீங்கள் இருவரும் சிரிப்பும் அன்பும் நிறைந்து மேலும் 45 வருடங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். ஹாப்பி அன்னிவெர்சரி அம்மா, அப்பா. ஐ லவ் யூ!" என்று தனது வாழ்த்தை பதிவிட்டு இருந்தார் அபிஷேக்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பது போல், அமிதாப்-ஜெயாவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் தமது வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கவனம் ஈர்த்தார். 

அந்த வாழ்த்துச் செய்தி 4 லட்சம் லைக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாமனார் - மாமியார், மகள் ஆராத்யா, நாத்தனார் மகன் அகஸ்தியா ஆகியோருடன் தான் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "ஹாப்பி அனிவெர்சரி அம்மா, அப்பா. அன்பு, ஆரோக்கியம் மற்றும் சந்தோசம் எப்போதும் நிறைந்து இருக்கட்டும். வாழ்த்துக்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார் ஐஸ். இந்தப் படம் இணையத்தில் வைரலும் ஆனது.

ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு செல்லும் முன்பு தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட சில ரெட் கார்ப்பெட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்து குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP