அஜீத் ரசிகர்களின் சுயநல விளம்பரமும், விஸ்வாசமும்!

எப்போதும், பேரிடர் நேரங்களில் அஜீத், அவரது ரசிகர்கள் செய்கிற ‘போட்டோ-ஷாப்’ விளம்பரங்களை கண்டுக் கொள்வதும் இல்லை. ‘அள்ளிக் கொடுத்தார் அஜீத்’ என்று பரப்பி வருகிறார்கள்.ஆனால் அஜீத்... கிள்ளிக் கூட கொடுக்கவில்லை.மேலும் விரிவான செய்திகளுக்கு newstm.in
 | 

அஜீத் ரசிகர்களின் சுயநல விளம்பரமும், விஸ்வாசமும்!

கடவுளின் தேசமான கேரளாவை, கொட்டித் தீர்த்த மழை சாத்தானின் ப்ரியத்தோடு புரட்டிப் போட்டிருக்கிறது. வீடு இழந்தவர்கள், சேர்த்து வைத்த சேமிப்பைத் தொலைத்தவர்கள், வாழ்வைத் தொலைத்தவர்கள் என கேரள மக்கள் மீண்டு வர எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இருந்து கேரள மக்களுக்கு வேட்டி,சட்டை வழங்கிய நடிகை குட்டி பத்மினி தொடங்கி விஜய்சேதுபதி வரைக்கும் தங்களால் ஆன நிதியுதவியை கொடுத்து வருகிறார்கள். 

எப்போதுமே லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வருகிற ரஜினி கூட இப்போதைக்கு தமிழ் நாட்டு அரசியலில் மட்டுமே ஆர்வமிருந்தாலும் பெரிய மனது பண்ணி கேரளாவிற்கு 15 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய் கூட, கேரள மக்களுக்கு உதவுவதற்காக  தன் அக்கவுன்ட்டிலிருந்து ரூபாய் 70 லட்சத்தை  ஆன் லைன் டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். நீள்கின்ற இந்த லிஸ்டில் எப்போதும் போல பாக்கெட்டை திறக்காமல் இம்முறையும் மெளனமாய் இருக்கிறார் ‘தல’ அஜீத்.

எப்போதும், பேரிடர் நேரங்களில் தன் பாக்கெட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிற அஜீத், அவரது ரசிகர்கள் செய்கிற ‘போட்டோ-ஷாப்’ விளம்பரங்களை கண்டுக் கொள்வதும் இல்லை. சென்னை வெள்ளத்தின் போதும் சரி, தற்சமயம் கேரள வெள்ளத்தின் போதும், ‘அள்ளிக் கொடுத்தார் அஜீத்’ என்று போட்டோ ஷாப்பில் பரப்பி வருகிறார்கள் அஜீத் ரசிகர்கள். ஆனால் உண்மை நிலவரம், அஜீத்... கிள்ளிக் கூட கொடுக்கவில்லை.

சோஷியல் மீடியாக்களில், ‘உங்க தல எவ்வளவு கொடுத்தாரு?’’ என்று விஜய், விக்ரம், சூர்யா ரசிகர்கள் எல்லாம் செய்து வருகிற நக்கல்களில் இருந்து தப்பிக்க, அஜீத் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட் லுக்கைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

எப்போதும் நட்ட நடு ராத்திரியில் ட்ரைலரையும், டீஸர்களையும் வெளியிடுகிற அஜீத் படக்குழு, இந்த  முறை ஆந்தைகள் உலவுகின்ற நேரமாகப் பார்த்து, அதிகாலை 3.40 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. ‘அஜீத் எவ்வளவு கொடுத்தார்?’ என்கிற கேள்வியிலிருந்து தப்பிக்கவே, ஆளாளுக்கு ‘விஸ்வாசம்’ படத்தைப் பற்றி பேச வைப்பதற்காக இந்த சமயம் பார்த்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டிருக்கிறார் அஜீத்’ என்று கிண்டலடித்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

மக்களின் நாயகன் அஜீத்தா?  விஜய்யா? என்கிற கேள்விக்கான பதிலை ரசிகர்களிடமே விட்டு விடுகிறோம். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP