சாணக்யராகும் அஜய் தேவ்கன்!

பாலிவுட் நடைகர் அஜய் தேவ்கன் தற்போது ஹெலிகப்டர் எலா, டீ டீ ப்யார் டீ, டோட்டல் தமால், சிம்பா, இயக்குநர் லவ் ரஞ்சனின் பெயரிடப் படாதப் படம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.
 | 

'சாணக்யா' என டைட்டிலிடப் பட்டிருக்கும் அந்தப் படத்தில் சாணக்யராக அஜய் தேவ்கன் நடிக்கிறார். அரசியல் வித்தகர், பொருளாதார மேதை, தத்துவஞானி என இந்திய வரலாற்றில் பல சிறப்புகளுக்கு உகந்தவர் சாணக்யர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்க ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. 

இந்தத் தகவலை தனது ட்விட்டரில் அறிவித்த அஜய் தேவ்கன், வரலாற்று மாமேதையின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கி.மு நான்காம் நூற்றாண்டில் பிறந்த சாணக்யர் பேராசிரியர், சிந்தனைவாதி என்பதைத் தாண்டி மெளரியப் பேரரசு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர். மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். அர்த்த சாஸ்திரம் மற்றும் நீதி சாஸ்திரம் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP