1. Home
  2. வர்த்தகம்

1000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து மீண்ட சென்செக்ஸ்!


இந்திய பங்குச்சந்தை இன்று நண்பகலில் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்‌ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்து பின்னர் உயர்ந்தது.

கடந்த 3 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று பங்குசந்தை உயர்வுடன் தொடங்கியது.

தொடர் சரிவில் இருந்து ரூபாய் மதிப்பு உயர்ந்தது, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது போன்ற காரணத்தால் தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 37,427.10 ஆகவும், நிப்டி 84.15 புள்ளிகள் உயர்ந்து 11,318.50 ஆகவும் வர்த்தகமானது.

இதனையடுத்து வர்த்தகம் சரியத் தொடங்கியது. நண்பகல் 12.00மணிக்கு மேல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் சென்செக்ஸ் திடீரென 1000 புள்ளிகள் சரிந்தது. பின்னர் ஏற்றம் காண ஆரம்பித்தது.

மதியம் 2.43 மணியளவில் சென்செக்ஸ் 486.22 புள்ளிகள் குறைந்து 36,635.00 எனவும் நிஃப்டி 159.95 புள்ளிகள் குறைந்து 11,074.40 எனவும் வர்த்தகமாகி வருகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like