லாபம் இல்லை... டிரென்டிங் செக்ஷன் நீக்குகிறது ஃபேஸ்புக்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் டிரெண்டிங் செக்ஷன் பகுதியை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
 | 

லாபம் இல்லை... டிரென்டிங் செக்ஷன் நீக்குகிறது ஃபேஸ்புக்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம்  டிரெண்டிங் பகுதியை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வலது புறத்தில் தினமும் அன்றைய இணைய உலகில் அதிகம் விவாதிக்கப்படும் ஏதாவது 10 விஷயங்கள் ஒரு ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆகும். இந்த  டிரெண்டிங் செக்ஷனை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் 2014-ம் ஆண்டில் இந்த டிரெண்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது. இந்த ட்ரெண்டிங் செக்‌ஷன் மூலம் இன்றைய இணைய உலகில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் என்ன? இளைஞர்களின் மனநிலைகளை அறிந்து கொள்ள முடியும். இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை ட்ரெண்டிங் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.  

லாபம் இல்லை... டிரென்டிங் செக்ஷன் நீக்குகிறது ஃபேஸ்புக்

டிரெண்டிங்கால் ஃபேஸ்புக்கிற்கு 1.5% க்ளிக்ஸ் மட்டுமே இருப்பதாகவும், அதனால் பெரிய லாபம் இல்லை. ட்விட்டர் ட்ரெண்டி தேடும் அளவிற்கு ஃபேஸ்புக்கில் யாரும் இதை பயன்படுத்துவது இல்லை எனவே இந்த அம்சத்தை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் ட்ரெண்டிங்கில் வர அனைத்து செய்திகளும், நிகழ்வுகள் உண்மையானதாகவும், நம்பகத்தன்மையும் இல்லை என எனவே இந்த சேவையை நீக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக்கின் ட்ரெண்டிங் செக்‌ஷன் நீக்கப்பட்ட சேவை அடுத்தவாரம் முதல் அப்டேட் செய்யப்படவுள்ளது. 

ஃபேஸ்புக் ட்ரெண்டிங்கிற்கு பதில் செய்திகளையும், உலக நிகழ்வுகளையும் எளிதில் அறிந்து கொள்ள ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சத்தை வழங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய நிகழ்வுகள், உடனுக்குடன் நேரலை செய்தியாக அறிந்துகொள்ளலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP