பெண்களே உஷார்: தாறுமாறாக ஏறப்போகுது தங்கம் விலை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட அரிதான உலோகங்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 | 

பெண்களே உஷார்: தாறுமாறாக ஏறப்போகுது தங்கம் விலை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட அரிதான உலோகங்களுக்கு விதிக்கப்படும் வரி 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்குத் தான் பொருந்தும் என்றாலும் இதையே காரணம் காட்டி, நம் நாட்டில் உள்ள பெரும்பாலான தங்க நகை விற்பனைக் கடைகளில், சாதாரண தங்கத்திற்கும் வரி உயர்ந்தப்பட்டுள்ளதாக கூறி, தங்கத்தின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. 

தற்போதைய நிலையில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு, 2.5 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், நகைக்கடைகளில், செய்கூலி, சேதாரம் என சேர்த்து, இந்த வரி விதிப்பை, 5 முதல் 10 சதவீதம் வரை அவர்களாகவே உயர்த்திக் கொண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு, இந்த விபரம் தெரிய வாய்ப்பில்லை. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் விலை உயரும் போது, செயற்கையான முறையில் உள்நாட்டு தங்கத்தின் விலையையும் உயர்த்த வாய்ப்புள்ளது. 

அப்படி உயர்த்தப்பட்டால், 5 சதவீத விலை ஏற்றம் என்றாலே, சவரன் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP