83 லட்சம் வீடியோக்களை நீக்கியது ஏன்? - யுடியூப் விளக்கம்

வீடியோக்களை நீக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்ததாக யூட்யூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
 | 

83 லட்சம் வீடியோக்களை நீக்கியது ஏன்? - யுடியூப் விளக்கம்

83 லட்சம் வீடியோக்களை நீக்கியது ஏன்? - யுடியூப் விளக்கம்

வீடியோக்களை நீக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்ததாகவும் அதனால் லட்சக் கணக்கான வீடியோக்களை நீக்கியதாகவும் யுடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

யுடியூப் வீடியோக்கள் மீது புகார் அளிப்பதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலியல் ரீதியான முறைகேடு, வெறுப்பு போன்ற‌வை தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வருவதாகவும் கூறியுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.

புகார்களை ஏற்று, கடந்த ஆண்டின் அக்டோபர் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 83 லட்சம் வீடியோக்களை நீக்கியதாக யுடியூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. பாலியல் ரீதியானவை என 91 லட்சம் வீடியோக்கள் மீது புகார் வந்ததாகவும் பொருத்தமில்லாத, வெறுப்பைத் தூண்டுவதாக சுமார் 47 லட்சம் வீடியோக்கள் மீது புகார் செய்யப்பட்டதாகவும் யுடியூப் கூறியுள்ளது. பதிப்புரிமை பெற்ற வீடியோக்களின் எண்ணிக்கை இதில் அடங்காது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP