வாட்ஸ் அப்பில் க்ரூப் வீடியோ கால் அறிமுகமாகவுள்ளது

வாட்ஸ் அப்பில் க்ரூப் வீடியோ கால் அறிமுகமாகவுள்ளது
 | 

வாட்ஸ் அப்பில் க்ரூப் வீடியோ கால் அறிமுகமாகவுள்ளது


வாட்ஸ் அப்பில் க்ரூப் வீடியோ கால் வசதி விரைவில் வெளியாக உள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முக்கியமானது ஃபேஸ்புக், வாட்ஸ்அப்.  ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அவ்வப்போது புது அம்சங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஸ்மைலி, வீடியோ ஸ்டேட்டஸ் போன்ற அம்சங்களை சொல்லலாம். தற்போது அதன் வரிசையில்  க்ரூப் சாட்களில் வீடியோ கால் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சோதனை ஓட்டம் முடிவடைவதை தொடர்ந்து,  க்ரூப்களில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசலாம். மேலும் இந்த  க்ரூப் வீடியோ கால் வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் ஐஓஎஸ் இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP