வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்!

வாட்ஸ் ஆப்பில் ஒரே நிமிடத்தில் பலருக்கு மெசேஜ் அனுப்பவும் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், அதில் நீங்கள் தினமும் அனுப்பும் மெசேஜ் ஒரே நேரத்தில் அவர்களை சென்றடையும். அதிகபட்சமாக 256 பேருக்கு அனுப்ப முடியும்.
 | 

வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்!

வாட்ஸ் ஆப்பில் ஒரே நிமிடத்தில் பலருக்கு மெசேஜ் அனுப்பவும் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் தகவல் தொழில் தொடர்புக்கு முதன்மையானதாக இருக்கிறது வாட்ஸ் ஆப். முதலில் செய்திகளை பரிமாற மட்டும் துவங்கப்பட்ட வாட்ஸ் ஆப்பில் தற்போது பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதாவது, வாட்ஸ் ஆப் வாய்ஸ் கால், வீடியோ கால், பிரைவேட் மெசேஜ் என புதிது புதிதாக தொழில் நுட்பங்கள் வந்த நிலையில், ஒரே நேரத்தில் பலருக்கு மெசேஜ் அனுப்ப வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய வசதி உள்ளது. 

தற்போதுள்ள வாட்ஸ் ஆப்பில் நாம் பல்வேறு குரூப்களில் இருப்போம். அடிக்கடி அந்த குரூப்பில்இருந்து தொடர்ச்சியாக மெசேஜ் வருவது பலருக்கு தொந்தரவாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நாம் பலருக்கு ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றலாம். 

வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து விட்டு அதன் ரைட் கார்னரில் இருக்கும் 3 டாட்-யை கிளிக் செய்யவும். அதில் New BroadCast என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் உங்களது வாட்ஸ் ஆப் கான்டக்ட்ஸ் ஓபன் ஆகும். அதில், நீங்கள் தினமும் யாருக்கெல்லாம் ஒரே மாதிரியாக மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களது காண்டக்ட்டை செலக்ட் செய்துகொள்ளவும். அதில் செலக்ட் செய்தவுடன் க்ரீன் டிக் வரும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான ஒரு குரூப் கிரியேட் ஆகி விடும். 

பின்னர்,  அதில் நீங்கள் தினமும் அனுப்பும் மெசேஜ் ஒரே நேரத்தில் அவர்களை சென்றடையும். அதிகபட்சமாக 256 பேருக்கு அனுப்ப முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP