வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்!

உலக மக்களிடையே தகவல் தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி, தற்போது வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்டேட்கள் பின்வருமாறு:
 | 

வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்!

உலக மக்களிடையே தகவல் தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி, தற்போது வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்டேட்கள் பின்வருமாறு: 

► வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆவணத்தை(document) ஒரே சமயத்தில் பலருக்கு அனுப்ப முடியும். ஆனால், மற்றொரு ஆப்பில் இருந்தால் அதை டவுன்லோடு செய்து தான் வாட்ஸ் ஆப்பில் அனுப்ப  முடியும். வாட்ஸ் ஆப்பில் புது அப்டேட்டாக இனி மற்ற ஆப்பில் இருந்து நேரடியாக வாட்ஸ் ஆப்பில் ஆவணத்தை பகிரலாம். 

► 'டார்க் மோட்' என கூறப்படும் இந்த அப்டேட்டால் வாட்ஸ்ஆப்பில் முக்கியமான வசதிகள் வர உள்ளன. இந்த வசதி தற்போது விண்டோஸ் 10 கணினி மற்றும் நோட்புக்குகளில் வந்துள்ளன. மேலும் ஐஓஎஸ் 10 கொண்ட ஐபோன்களில் இந்த வசதியை பெற முடியும். டார்க் மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவான பவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில் அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால் பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும். 

► நமது மொபைலில் உள்ள காண்டாக்ட்டை வாட்ஸ் ஆப் QR Code மூலமாக இனி அனுப்பலாம். QR Code மூலமாக அனுப்புவதன் மூலம் அந்த காண்டாக்ட், அனுப்பப்படும் நபரின் மொபைல் அட்ரஸ் புக்கில் நேரடியாக சென்று சேவ் ஆகும்.

► குரூப் காலிங் வசதி iOS பயனாளர்களுக்கு ஏறகனவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் இது விரைவில் வரவுள்ளது. இதன்மூலம் நாம் ஒரே நேரத்தில் பலருடன் பேச முடியும். அதிகபட்சமாக மூன்று பேருடன் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

► உங்கள் மொபைலில் நோட்டிபிகேஷன் வந்தவுடன், அதில் உள்ள வீடியோவை டவுன்லோட் செய்யாமலே பார்க்கும் வசதி விரைவில் வரவுள்ளது.

► உங்களுடன் தொடர்பில் உள்ள காண்டாக்ட்டை பொறுத்து அவற்றிக்கு ரேங்க் கொடுக்கப்படும். அதாவது யாருடன் நீங்கள் அதிகமாக வாட்ஸ் ஆப், சாட் செய்கிறீர்களோ, அதன்படி ரேங்க் கொடுக்கப்படும். இதன் மூலம் நீங்கள் யாருடன் அதிகமாக தொடர்பில் உள்ளீர்கள் என தெரிந்துகொள்ளலாம்.

► நமது மொபைல் காண்டக்ட்டில் ஒரு நம்பரை சேவ் செய்த பிறகு தான் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் இனிமேலே வாட்ஸ் ஆப்பிலேயே தனியே நம்பரை சேவ் செய்து சாட் செய்துகொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP