நமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34 !!

இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது
 | 

நமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34  !!


இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவாலும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருகின்றன. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்தக் கடுமையான விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைக் கேட்டிருந்தார். 

கடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போதுதான் மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் 2018,ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிக மிக மலிவாக, பாதிவிலைக்கு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP