எச்சரிக்கை! அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி லிங்க்...

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் போன்று அளவு கடந்த ஆஃபர்களைக் கொடுப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வலம்வரும் போலியான லிங்க், நமது சொந்தத் தகவல்கள் திருடப்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
 | 

எச்சரிக்கை! அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலி லிங்க்...

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலியான லிங்க் சமூக வலை தளங்களில் வலம் வருகின்றது. 

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் போன்று அளவு கடந்த ஆஃபர்களைக் கொடுப்பதாகக் கூறும் அந்த லிங்க் மூலம் நமது சொந்தத் தகவல்கள் திருடப்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

99 சதவீத தள்ளுபடி விற்பனையில் அமேசான் பிக் பில்லியன் சேல் ஆஃபர் என வலம்வரும் இந்த லிங்க்-கை டச் செய்ததும், 10 ரூபாய்க்கு மிக்சி, 90 ரூபாய்க்கு மெகா ஸ்பீக்கர் என மிகவும் மலிவான விலைக்கு பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒரு பொருளை நாம் ஆசைப்பட்டு பர்சேஸ் செய்தால், நமது பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி எல்லாம் கேட்கிறது. 

பின்னர் அந்த முகவரிக்கு டெலிவரி செய்யும் ஆப்ஷனை டச் செய்ததும், place order ரை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது, 10 நண்பர்களுக்கு இந்த லிங்கை அனுப்பும் ஆப்ஷன் வருகிறது. ஒருவேளை இன்வைட் ஃப்ரெண்ட்ஸ் ஆப்ஷனை டச் செய்யாமல் கன்ஃபர்ம் ஆர்டரை டச் செய்தால், 10 பேருக்கு அனுப்பியே ஆக வேண்டும் என அது அடம்பிடிக்கிறது. 

சரி என, இன்வைட் ஃப்ரெட்ண்ஸ் ஆப்ஷனை டச் செய்து அனைவருக்கும் பார்வார்டு செய்த பிறகு, கன்ஃபர்ம் ஆர்டரை டச் செய்ய முடிகிறது. அதனை டச் செய்ததும் ஆர்டர் குறித்த விவரங்களை தங்கள் மின்னஞ்சல் முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என கூறி, ஆர்டர் எண்ணும் அனுப்பப்படுகிறது.

 ஆனால், அமேசானிடமிருந்து எந்தவித தகவலும் மின்னஞ்சலில் அனுப்பப்படுவதில்லை. இது குறித்து அமேசான் நிறுவனத்திடம் லைவ் சாட் மூலம் விபரம் கேட்ட போது, அந்த லிங்க் தங்களுடையது இல்லை என தெளிவு படுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற லிங்க்குகளை தவிர்க்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. 
 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP