விளையாட போறியா? வேடிக்கை பார்க்க போறியா? - வருங்கால மருமகனுக்கு அம்பானி கொடுத்த அட்வைஸ்

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, தொழிலதிபர் ஆனந்த் பிரமலை திருமணம் செய்யவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
 | 

ரியல் எஸ்டேட் தொழிலில் வெளுத்து வாங்கும் ஆனந்த், முகேஷ் அம்பானியின் மருமகன் மட்டுமில்லை. தொழில் ரீதியாக முகேஷ் கொடுத்த அட்வைஸ் தான், ஆனந்த் இன்று ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறப்பதற்கு முக்கிய காரணமாம். 

அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், விடுமுறையின் போது வீட்டுக்கு வந்திருந்தாராம். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசிக்காத நேரம், தனது நண்பர்களில் பலர் அமெரிக்காவில் உள்ள பிரபல இன்வெஸ்ட்மென்ட் வங்கிகளில் ஆலோசகர்களாக சேரவும், தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்த சமயத்தில், ஆனந்தத்தின் தந்தை அஜய் பிரமால், தனது மெகா மருந்து உற்பத்தி தொழிலை வேறு நிறுவனத்தினிடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டார். 

விளையாட போறியா? வேடிக்கை பார்க்க போறியா? - வருங்கால மருமகனுக்கு அம்பானி கொடுத்த அட்வைஸ்

மற்றவர்கள் வழியில் சென்றுவிடலாம் என யோசித்துக் கொண்டிருந்த ஆனந்தை சந்தித்த முகேஷ் அம்பானி, அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தாராம். தனக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை ஒப்பிட்டு முகேஷ் சொன்னதாவது, "தொழிலை எடுத்து நடத்துவது கிரிக்கெட் விளையாடுவது போல. அதில் ஆலோசகராக பணிபுரிவது, வேடிக்கை பார்த்துக் கொண்டே கமெண்ட்ரி செய்வது போல. வருங்காலத்தில் விளையாட வேண்டும் என்பது தான் உன் ஆசையென்றால், நேரத்தை வீணடிக்காமல் இப்போதே அதை துவங்கு. தவறுகள் செய்து கற்றுக்கொள், நினைத்ததை 30 வயதுக்குள் அடைய வேண்டும் என குறிக்கோள் வைத்துக் கொள்" என்று கூறினாராம். 

அதன்பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய ஆனந்த், சரிவில் இருந்த ரியல் எஸ்டேட்டில் புதிய யுக்திகளை கையாண்டு, இன்று நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவராக திகழ்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP