பணம் செய்ய விரும்பு: பகுதி - 4 ( 50 - 30 - 20 மந்திரம் )

மேலும் சிலர் 30 % சேமிப்பு , 20 % இன்ன பிற செலவுக்கு என ஒதுக்குபவர்கள். பொருளாதார சிக்கல்களில் பெரும்பாலும் மாட்டுவதில்லை . இந்த 50-30-20 ஒரு வழி காட்டுதல்தான் . எந்த செலவை ஏற்றினாலும் இறங்கினாலும் , 20 % சேமிப்பை குறைத்தல் ஆகாது . சிலருக்கு 55-25-20 அல்லது 45-25-30 எந்த விகிதாச்சாரம் இயலுமோ அதை பின்பற்றவும்.
 | 

பணம் செய்ய விரும்பு: பகுதி - 4 ( 50 - 30 - 20 மந்திரம் )

இது வரை பட்ஜெட் , கிரெடிட் கார்டு (கடன் அட்டை), EMI  , போன்றவற்றை விவாதித்திருந்தோம்.  சிலருக்கு மாதத்தின்  முதல் நாளை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி இன்னும் குழப்பம் இருக்கலாம் .

ஒரு கூட்டத்தில் உரையாற்றும் நேரம், நான் சேமிப்பு என்றால்  என்ன என்று கேட்டேன் ? ஒரு நடுத்தர , உயர் பொறுப்பிலுள்ள அதிகாரி சற்றும் தாமதிக்காமல் 'செலவை வரவிலிருந்து கழித்தால் கிடைப்பது ' என்றார் . 

இப்படித்தான் பலரும் புரிந்திருக்கிறார்கள். பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான ரகசியத்தை இப்போது உங்களுக்கு கூறுகிறேன் . அதாவது மாதத்தின்  முதல் நாள்  நாம் செய்ய வேண்டியது, சேமிப்பு, முதலீடு போன்றவையே.  மீதம் உள்ள தொகையை தான் செலவு செய்யவேண்டும்.  இந்த அடிப்படை தத்துவத்தை நாம் தவற விடுவதில் தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் .
 
உங்களுக்கு ஒரு 10,000 ரூபாய்  வரவு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதில் செய்ய வேண்டியது  முதல் வேலையாக ரூ 2,000 சேமிப்பு , மீதமுள்ள ரூ 8000 ல் , ரூ 5000 அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கானதாக இருக்கவேண்டும் . 

இதில் உங்களது வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கடன், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, தொலைபேசிக் கட்டணம், மருந்துகள் வாங்குவது, சமையல் சிலிண்டர் வாங்குவது மற்றும் தொலைக்காட்சிக்கான கேபிள் கட்டணம் போன்ற பயன்பாடுகளுக்கான செலவுகள், மளிகை சாமான்கள், அலுவலகம் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் என அனைத்து செலவுகளும் அடங்க வேண்டும் .

பணம் செய்ய விரும்பு: பகுதி - 4 ( 50 - 30 - 20 மந்திரம் )

சரி, மீதம் உள்ள ரூ 3000? அது உங்களுக்கானது. உங்கள் குடும்பத்திற்கானது . உங்கள் மகிழ்ச்சிக்கானது .ஷாப்பிங், சினிமாவுக்குச் செல்வது, ஹோட்டல்களில் உணவருந்துவது, சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்வது போன்ற உங்கள் விருப்பத்துக்குரிய, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கான செலவுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  

இந்த  தொகை அனைத்தையும் செலவழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. இதுவே 50-30-20 விதி என்பர் . ரூ 1000 ல் 50% வாழ்க்கை செலவு, 30 %  மகிழ்சிக்கு ,20 % சேமிப்பு .
இதில் முதலில் வரவேண்டியது சேமிப்பு,வாழ்க்கை செலவு , மகிழ்ச்சிக்கு செலவு. இதே  விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் இருப்பது சிறப்பு . 

மேலும் சிலர் 30 % சேமிப்பு , 20 % இன்ன பிற செலவுக்கு என ஒதுக்குபவர்கள். பொருளாதார சிக்கல்களில் பெரும்பாலும் மாட்டுவதில்லை . இந்த 50-30-20 ஒரு வழி காட்டுதல்தான் . எந்த  செலவை ஏற்றினாலும் இறங்கினாலும் , 20 % சேமிப்பை குறைத்தல் ஆகாது . சிலருக்கு 55-25-20  அல்லது 45-25-30 எந்த  விகிதாச்சாரம் இயலுமோ அதை பின்பற்றவும். 

நினைவில் கொள்ளவேண்டியது, 20 சதவிகிதம் குறையக்கூடாதென்பதே . 20 % பணத்தை என்ன செய்வது ? வங்கியில் சேமிக்கலாமா ? வீட்டில் வைக்கலாமா ? தங்கம் வாங்கலாமா? பல கேள்விகள். தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள் ,  விடைகள் கிடைக்கும் .மீண்டும் சந்திப்போம். 

- சுப்ரமணியம் நடேசன் - 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP