பணம் செய்ய விரும்பு! - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்!

வீண் செலவுகளை குறைப்பது மட்டுமல்ல, அதன் மூலம் சேரும் தொகையை எப்படி விதையாக மாற்றி, பண விருட்சத்தை விளைவிப்பது என்பது குறித்த குபேர ரகசியத்தை உங்களுக்கு கற்றுத் தரப்போகிறார் திரு.சுப்ரமணியன் நடேசன் அவர்கள். உங்களுக்காக... ஆம், உங்களுக்காக மட்டுமே இந்த குபேர ரகசியம்...
 | 

பணம் செய்ய விரும்பு! - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்!

மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது பணம். ஆம்.. அக்காலத்தில் பண்டமாற்று முறையில், தங்களிடம் அதிகம் உள்ள ஒரு பொருளை பிறரிடம் கொடுத்து, தங்களுக்கு தேவையான மற்றொரு பொருளை அவர்களிடம் இருந்து பெற்று வந்தனர். 

பண்டமாற்று முறையில் நடைபெற்று வந்த வர்த்தகம், நாளடைவில், நாணயத்தின் அடிப்படையில் நடைபெறத் துவங்கியது. அன்று ஆரம்பித்த இந்த காசுக்கான மதிப்பு, (அதாவது தேவை) நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. 

காசுக்காகத்தான் நாம் அனைவரும், வீடு, குடும்பம்,பிள்ளை குட்டிகள் என அனைத்தையும் பிரிந்தும், துாரத்தில் வசித்தும், ஊர் விட்டு ஊர் சென்று, நாடு விட்டு நாடு சென்று பணியாற்றுகிறோம். குடும்பத்திற்காக பணமா? பணத்திற்காக குடும்பமா? என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். 

குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், பின் அவர்கள் வளர்ந்ததும் கல்லுாரி கால செலவுகள், ஆண், பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கான திருமண செலவுகள், இதற்கிடையே உடல் நலத்தை பேண மருத்துவ செலவுகள், இன்பச் சுற்றுலா, உறவினர்களின் சுக, துக்கங்கள், கோவில் வழிபாடு இவை அனைத்திற்கும் முன், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மாத பட்ஜெட் என, அனைத்திற்கும் தேவை காசு, பணம், துட்டு, மணி. 

பணம் செய்ய விரும்பு! - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்!

மாத சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, சுய தொழில் செய்வோராக இருந்தாலும் சரி, பணம் சம்பாதிக்கத்தான் இத்தனை பாடு படுகிறோம். அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேர்ப்பதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், நாம் அனைவரும் விரைவில் கோடீஸ்வரர்கள் ஆவது நிச்சயம். 

சேமிப்பில் கவனம் செலுத்துவது சரி... அதென்ன கூடுதல் கவனம்? நீங்கள் கேட்பது புரிகிறது. வழக்கமான மாத சேமிப்பை விட சற்று கூடுதலாக சேமித்தால் அது தானே கூடுதல் கவனம் என்கிறீர்கள். அது தான் இல்லை. 

ஓட்டை பானை எவ்வளவு தான் பெரியதாக இருந்தாலும் அதில், நீங்கள் லிட்டர் கணக்கில் நீர் ஊற்றினாலும், அது வழிந்தோடி வீணாகத்தான் செய்யும். அது போலத்தான், உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தாமல், எவ்வளவு தான் நீங்கள் சேமித்தாலும், அதுவும் விரைவில் கரைந்தே போகும். 

செலவுகளை கட்டுப்படுத்துவது என்றால், செலவே செய்யாமல் இருப்பதல்ல. தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதை குறைத்தல். அதெப்படி, இது தேவையான செலவு, இது தேவையற்ற செலவு என வகைப்படுத்துவது. நான் ஒன்றும் தேவையில்லாம் எந்த செலவும் செய்ய மாட்டேன் என நீங்கள் சொல்கிறீர்கள். 

அப்படியானால், உங்கள் குடும்பத்திற்காக, ஒரு மாதம் செலவிடும் மாெத்த தொகை எவ்வளவு? யாேசிக்காமல் சட்டென்று மிகச் சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கட்டுரையை படிக்கும், 90 சதவீதத்திற்கும் மேலானவர்களால் இதை சரியாக சொல்ல முடியாது. 

பணம் செய்ய விரும்பு! - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்!

ஆம்... நம்மில் பலருக்கும் மாத வருமானம் எவ்வளவு எனக் கேட்டால் டக் கென்று சொல்லத் தெரிந்த அளவு, மாதம் எவ்வளவு செலவாகிறது எனக் கேட்டால் தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. அதற்குத் தான், செலவை வரவு வைக்க வேண்டும் என்பது. 

என்ன இது, செலவை வரவு வைப்பதா? அதாவது நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை, முதலில் குறித்துக் கொண்டே வர வேண்டும். மாதத்தின் முடிவில் தான், அதை திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தெரியும். எவ்வளவு வருமானம், நாம் செய்த செலவு எவ்வளவு? அதில் தவிர்த்திருக்க கூடிய செலவு எது என்பதையும் எளிதில் கண்டறியலாம். 

வெறுமனே கணக்கு எழுதி வைத்துவிட்டால் மட்டும், அதை மாத இறுதியில் திருப்பி பார்த்துவிட்டால் மட்டும் போதுமா? உடனே உங்கள் கஜானாவில் காசு,பணம் குவியத்துவங்கி விடுமா என்றால் அதுதான் இல்லை. 

வீண் செலவுகளை குறைப்பது மட்டுமல்ல, அதன் மூலம் சேரும் தொகையை எப்படி விதையாக மாற்றி, பண விருட்சத்தை விளைவிப்பது என்பது குறித்த குபேர ரகசியத்தை உங்களுக்கு கற்றுத் தரப்போகிறார் திரு.சுப்ரமணியன் நடேசன் அவர்கள். உங்களுக்காக... ஆம், உங்களுக்காக மட்டுமே இந்த குபேர ரகசியம்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...உங்கள் newstm உடன். 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP