பணம் செய்ய விரும்பு - 8 : டீ செலவு ரூ. 3.7 லட்சம்!

பணம் செய்ய விரும்பு - 8 : டீ செலவு ரூ. 3.7 லட்சம்!
 | 

பணம் செய்ய விரும்பு - 8 : டீ  செலவு ரூ. 3.7 லட்சம்!

சேமிப்பிலா குடும்பம் ,கூரையில்லா வீடு ! சில குடும்பங்களில் தொன்று தொட்டு ஒரு பழக்கம் இருந்து வரும் . வீட்டிலிருக்கும் சிறுவர்களுக்கு மண்ணாலான உண்டியல்  கொடுத்து ,அவ்வப்போது கிடைக்கும் பணத்தை சேமிக்க சொல்வார்கள் . இந்த சேமிப்பை ஒரு பண்டிகை காலத்திலோ, பிறந்த நாளன்றோ எடுத்து அந்த சிறுவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தருவார்கள் . நாளடைவில் ,சிலர் பெரியவர்களானவுடன் இந்த பழக்கம் மாறி முதலில் பொருட்களை வாங்கி , அதற்குண்டான விலையை வட்டியுடன் செலுத்தி , சேமிப்பையும் ,நிம்மதியையும் தொலைக்கின்றனர் . 

ராஜன் ஒரு கட்டிட தொழிலாளி. ஒரே வருடத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்தனர் அந்த திருமணமான தம்பதியினர் .  குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட    உறவினர்  அனைவரும்  ஒன்று கூடினர் . அதில் அனுபவமிக்க  ஒருவர், ராஜனிடம் உரையாடினார் . ' ஏம்பா உனக்கு  டீ  குடிக்கும்  பழக்கம் இருக்கா ? இருக்கு அன்னே ! . 

குழந்தை சின்ன குழந்தை , இப்போ குழந்தை டீ  குடிக்காது , கேட்டால்  அது  டீ  கேட்டா  வாங்கி தருவியா ? அதிலென்ன சந்தேகம் , குழந்தை கேட்டா மறுக்க முடியுமா ?  சரி அப்போ ஒன்னு செய் , டீ  செலவு தினம் 10 ரூபாய ,மாசா மாசம் ஒரு சேமிப்பு  திட்டத்தில்  கட்டு  என  அறிவுவையை ராஜனுக்கு கொடுத்தார் .   

ராஜன் மறுக்காமல் கட்டிக்கொண்டே போனார் . அது  ஆனது 7-8 வருடம் , செலவு அதிகம் வந்தாலும் பணம் கட்டுவதை  ராஜன் நிறுத்தவில்லை . வேறு ஒரு நிகழ்ச்சியில் , அந்த  உறவினரை சந்தித்தார் ராஜன் , தன்னுடைய அந்த பழக்கத்தை பற்றி கூற , அவரோ உன்னால் முடியும் வரை தொடர்து செய் என்றார் .  ராஜன் நிறுத்த வில்லை. குழந்தைக்கு திருமண வயது - 25 ஆண்டுகள் . கட்டிய பணத்தை எடுத்து , ஜவுளி செலவு செய்யலாம்   என  போய்  கணக்கு பார்க்க ,வாழ்க்கையின் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானார் .  அவரிடம் உள்ள தொகை 3,70,000 ரூபாய் [ ஆம் 3.7 லட்சங்கள் ].

பிறகென்ன , அவரின் மகிழ்ச்சி , திருமணம் நடந்த விதம் பற்றி சொல்லத்தான் வேண்டுமா ? டீக்கு   செலவு செய்யும் தொகை ,சேமிப்பும் - முதலீடும் செய்தால்  - 25 ஆண்டுகளில் அதிசயத்தை உங்கள் கண்முன் காணலாம் . ரூபாய் 10 - 30 நாட்கள் - 300 ரூபாய் - 300 மாதங்கள் (25 வருடம் )- கட்டிய தொகை ரூபாய் 90,000, வட்டி 2,80,000 [ஆண்டுக்கு 10 % கூட்டு வட்டி- அதிகமாக  வாய்ப்பு உண்டு - குறைய வாய்ப்பு மிக குறைவு ] 

ஒவ்வொரு வருடமும்  ரூ 30/- கூட்டிக்கொண்டே போனால் ,நினைத்து பாருங்கள் -கிடைக்கும் தொகை 6.47 லட்சங்கள் . 
இந்த கணக்கு ரூ 300/ என கொண்டதால் , இது மாதம்  ரூ 3000 என்றால் , கண்களை அகல விரியுங்கள் 37 லட்சங்கள் .
தேசிய மயமாக்கபட்ட வங்கிகளில்  தற்சமயம் 7-8% வரை வட்டி கிடைக்கிறது , அதிக பட்சமாக  10 ஆண்டுகள் திட்டம் தருகிறார்கள் .
மியூடூவல் பண்ட் திட்டத்தில் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் கட்டலாம் , 25 ஆண்டுகளில் 10 % வட்டி என்பது எதிர்பார்க்க கூடியது . 
ஒன்றே செய் , ஒன்றும் நன்றே செய் , நன்றும் இன்றே செய் , இன்றும் இன்னே செய் ....எப்பேர்ப்பட்ட வரிகள் .
இப்போதே தொடங்குவோம் நம் சேமிப்பு பழக்கத்தை ..

மியூடுவல் பண்ட் திட்டங்கள் நன்மை தருமா? பி எப் பணத்தை வேலை மாற்றம் செய்யும் போது எடுக்கலாமா ?
பதில் விரைவில்…

- சுப்பிரமணியன் நடேசன் -


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP