பணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?

எவ்வளவு லாபம் தரும் ? இந்த கேள்வி புதியவர்களுக்கு மட்டுமே வரும். பங்கு சந்தை வருடத்திற்கு இவ்வளவு தான் லாபம் என்று வங்கி பிக்ஸெட் டெபொசிட் போல வருவதில்லை . ஒரு வருடம் 15 % லாபம் கிடைக்கலாம் , ஒரு வருடம் 20 % நஷ்டம் கிடைக்கலாம் . ஆனால் 10 ஆண்டுகளில் நாம் தேர்ந்து எடுக்கும் பங்குகளை பொறுத்து, 12- 15 % லாபம் கிடைக்க வழியுண்டு .
 | 

பணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?

இன்று பல மெத்த படித்தவர்கள், முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் பங்கு சந்தையில்  முதலீடு தேவையா என்பது தான். இதுநாள் வரை ஆயிரக்கணக்கான பதிவுகள்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்தாலும், பலருக்கு பங்கு சந்தை பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்கிறது. 

நம்முடைய அடிப்படை கல்வியிலும் சரி, பல வகை இளநிலை, முதுநிலை கல்வியிலும் சரி இதை பற்றிய உபயோகமான தகவல் கிடைப்பதில்லை. நமக்கு தெரிந்தவர்களிடம்  கேட்டாலும்  உபயோகமானதாக இல்லை, இன்டர்நெட்டிலோ வழிகாட்டுதல் தெளிவாக இல்லை என புலம்புவர்களுக்கானது இந்த  பதிவு .

பங்கு சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றி பலரிடம் பேசினால்,  நான் இத்தனை  ஆயிரங்கள் இழந்தேன் , இவ்வளவு நஷ்டம் வந்தது, அதில் முதலீடா  என பயமுறுத்துகிறார்கள். பங்கு சந்தை பணக்காரர்களுக்கு மட்டும் தான் , லாபம் கிடைக்கும் வழியல்ல என்ற மாயையை உருவாக்கி இருக்கிறார்கள்.
 பணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?

விஷயத்திற்கு வருவோம் . பங்கு சந்தை யாருக்கானது ? சுருக்கமாக சொன்னால், அவசர தேவைக்கு இல்லாத பணத்தை முதலீடு செய்து, பொறுமை காப்பவர்களுக்கு மட்டுமே.  புரியும் படி சொல்கிறேன் .
இன்னும் 10 ஆண்டுகளுக்கு என்னிடம் உள்ள 15 ஆயிரம் ரூபாய் எனக்கு தேவைப்படாது. என்னால் முதலீடு செய்யமுடியும் என்றால், அந்த  பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.  இந்த தேவை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .

எவ்வளவு லாபம் தரும் ? இந்த கேள்வி புதியவர்களுக்கு மட்டுமே வரும். பங்கு சந்தை வருடத்திற்கு இவ்வளவு தான் லாபம் என்று வங்கி பிக்ஸெட் டெபொசிட் போல வருவதில்லை . ஒரு வருடம் 15 % லாபம் கிடைக்கலாம் , ஒரு வருடம் 20 % நஷ்டம் கிடைக்கலாம் . ஆனால் 10 ஆண்டுகளில் நாம் தேர்ந்து எடுக்கும் பங்குகளை பொறுத்து, 12- 15 % லாபம் கிடைக்க வழியுண்டு .

அதற்குத்தான் சொன்னேன், ஒரு குறுகிய  காலத்திற்குள் [ சுமார் 3 ஆண்டுகள் ] -கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை பங்கு சந்தையில் இறக்குவது ஏற்புடையதல்ல . 
பங்கு சந்தை முதலீட்டிற்கு எவ்வளவு பணம் வேண்டும் ? வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றாலும் போதுமானதே வங்கியில் சேமிக்க புதிய கணக்கு துவக்குவது போல, பங்கு சந்தைக்கு டீமேட் என்ற கணக்கை துவக்க வேண்டும். சில நிறுவனங்கள் முதலாம் ஆண்டிற்கு இலவசமாகவே தருகிறார்கள் .

பணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?

நஷ்டம் அடையாமல் லாபம் கிடைக்குமா ? சென்ற பதிவில் தங்கம் பற்றி விவாதித்திருந்தேன். தங்கம் லாபம் மட்டுமே தருமா ? தராது தானே ? நிலம் விலை குறையவே வாய்ப்பில்லை என்று விவாதிப்பவர்கள், அந்த இடம் 4 ஆண்டுகளில் அதே  விலை விற்றாலும் நஷ்டம் தானே ?

பங்கு சந்தை பற்றிய ஒரு ரகசியம் கூறுகிறேன்,  நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு, பொறுத்திருக்கும் காலம், இதைப்பொறுத்தே  நமக்கு லாபம் தரும் . இதில் தான் விஷயம் அடங்கி  உள்ளது. இந்த கலையை ஒரே நாளில் கற்றவர் உலகில் இல்லை.  பங்கு சந்தை பற்றிய  எண்ணத்தை மாற்ற, முதலில் கணக்கை  துவக்குங்கள். அடுத்த நகர்வை  தொடர்வோம். சரிதானே?

தொடரும்... 

- சுப்பிரமணியன் நடேசன் -

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP