வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

2017-2018ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 | 

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

2017-2018ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அதனை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்தனர். அதன்படி வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தாக்கல் செய்ய தவறியவர்களில், மொத்த ஆண்டு வருவாய் ரூ. 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் ரூ.1,000  அபராதம் செலுத்த வேண்டும்.

ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP