வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 15 வரை கால அவகாசம்!

வருமான வரிக் கணக்குகள் மற்றும் கணக்கு தணிக்கை அறிக்கைகளை (Auditors Report) தாக்கல் செய்வதற்கான தேதி செப்டம்பர் 30, 2018-லிருந்து அக்டோபர் 15, 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரைவரி செலுத்துவோரின் சில பிரிவினருக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வருமான வரி ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினர், கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும், வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 234-ஏ (விளக்கம் 1)-ன்படி, வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தவறியவர்களுக்கும், வரி மதிப்பீட்டாளர்கள்  வட்டியுடன் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தாது என்றும் மத்திய நேர்முக வருமான வரி ஆணையம் அறிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP