சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 942 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலையுயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.133 குறைக்கப்பட்டு ரூ.942 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மானிய சிலிண்டர் வாங்குவோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.435 மானியமாக செலுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP